பாண்டியன் ஸ்டோர்ஸ்: செந்தில் போட்ட பிளான்.. பாண்டியனிடம் சிக்கும் தங்கமயில்! ராஜி கேட்ட கேள்வி! கோபத்தில் கதிர்
சென்னை: 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின் இன்றைய எபிசோடு கொஞ்சம் குழப்பமாகவும், கொஞ்சம் ரொமான்ஸாகவும் போச்சுனு சொல்லலாம்! செந்திலின் திடீர் முடிவால வீடே ஒரு பக்கம் பதட்டத்துல இருக்க, இன்னொரு பக்கம் கதிர் வேறொரு மூடுக்கு மாறிட்டார். வாங்க, இன்னைக்கு எபிசோடுல என்னென்ன ட்விஸ்ட்னு பார்ப்போம்!

செந்திலின் பிடிவாதம்:
செந்தில், தனி குடித்தனம் போகணும் என்ற தனது முடிவை ரொம்ப உறுதியா எடுத்துட்டார் போல. அவர் நேராக மீனாவின் அப்பா, அம்மா வீட்டிற்கு போயி, தான் தனியாகப் போகும் விஷயத்தைப் பற்றி பேசுகிறார். செந்திலின் இந்த முடிவைக் கேட்ட மீனாவின் அப்பா, "நீங்க ஒரு தடவை மீனா கிட்ட இதைப் பத்திப் பேசிப் பாருங்க"னு சமாதானம் செய்ய முயற்சித்தார்.
ஆனா செந்தில் அதைக் கேட்கிற மாதிரி இல்லை. "யார் என்ன சொன்னாலும் சரி, நானும் மீனாவும் தனியாகப் போகத்தான் போறோம்!"னு பிடிவாதமாச் சொல்றார். அதுமட்டுமில்லாம, "நாளைக்கு நல்ல நாளா இருக்கு, நாளைக்கே பால் காய்ச்சப் போறேன். நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்"னு சொல்லி, தனது முடிவைச் செயல்படுத்திவிட்டார். செந்திலின் இந்தக் கறாரான முடிவு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துல இன்னும் என்னென்ன சலசலப்பைக் கொண்டு வரப் போகுதோ தெரியல.
கதிரும் ராஜியும் வாக்குவாதம்
செந்திலின் முடிவால் பாதிக்கப்படாத ஒரே ஆள் கதிர் தான் போல! கதிர், ராஜியைப் பார்த்து வண்டியை ஓட்டச் சொல்ல, ராஜி "எனக்கு மீனா அக்கா போறது ஒரு மாதிரி இருக்கு, என்னால வண்டி ஓட்ட முடியாது"னு தயங்குறாங்க. உடனே கதிர், "ஒருத்தவங்க ஒரு முடிவெடுத்தால், அதுக்கு சப்போர்ட் பண்ணனும். நீ அவங்களப் பற்றி யோசிக்காம, காரை ஓட்டு"னு கண்டிப்போட சொல்றார்.
அப்படியே ரெண்டு பேரும் காரை ஓட்டிட்டிருக்கும்போது, ராஜி சும்மா இல்லாம, "செந்தில் மாமா போற மாதிரி, நீயும் வீட்டை விட்டுப் போகணும்னு நினைச்சிருக்கியா?"னு கதிர் கிட்ட கேட்குறாங்க. அதுக்குக் கதிர், "நான் எப்பவுமே இப்படி எல்லாம் யோசிச்சதே இல்ல"னு சொல்லி, தான் கூட்டுக் குடும்பத்தில்தான் இருப்பேன் என்பதைத் தெளிவுபடுத்தினார். அப்புறம் என்ன? கார் ஓட்டிட்டிருக்கும்போதே கதிரும், ராஜியும் ரொமான்ஸ் பண்ணிக்கொண்டிருந்தாங்க. ஒரு பக்கம் கவலை, இன்னொரு பக்கம் காதல்னு போச்சு!
பாட்டியின் பிறந்தநாள் பிளான்
மறுபக்கம், சக்திவேல் வீட்டிற்குச் சுகன்யா வராங்க. "பாட்டி, பாண்டியன் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டாங்களா?"னு அக்கறையா கேட்க, அதைப் பார்த்த சக்திவேல் கோபமாகி, "அந்த வீட்டில இருக்கிறவங்க சாப்பிட்டா என்ன? சாப்பிடலைன்னா என்ன?"னு கேட்டார். சக்திவேலுக்கு எப்போதும் பாண்டியன் குடும்பத்தைக் கண்டாலே பிடிக்காது தானே!
பின்பு, சுகன்யா ஒரு குட் நியூஸ் சொல்றாங்க. "செந்தில் தனியாப் போகப் போறாங்க" என்ற விஷயத்தை வெற்றிவேல் கிட்டச் சொல்ல, அதைக் கேட்ட சக்திவேல் ரொம்பச் சந்தோஷப்படுறார். ஒரு குடும்பம் பிரியுதுனு தெரிஞ்சும் இவர் சந்தோஷப்படுறதுல இருந்தே, இவருக்குப் பாண்டியன் குடும்பத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருக்குனு தெரியுது.
இதற்கிடையில், எல்லாரும் பாட்டியோட 75வது பிறந்தநாளை கொண்டாடுறதுக்காக ஒரு பிளான் பண்ணுறாங்க. வீட்ல ஒரு சந்தோஷமான விஷயமாவது நடக்கட்டும்!
மயிலின் முட்டை பஞ்சாயத்து
கடைசியாக மயில் அப்பா கடையில இருக்கார். முட்டையை நான்தான் சரியா பார்சல் செய்து கொடுப்பேன் என்று சொல்லி, மயிலிடம் இருந்த முட்டையை வாங்க, கடைசியில் கீழே போட்டு உடைத்துவிட்டார்! அப்பா கொடுத்த இந்த இலவச சேவைக்கு மைல் என்ன ரியாக்ட் பண்ணுவார்னு தெரியல. மொத்தத்துல இன்னைக்கு எபிசோட், செந்திலின் பிரிவும், கதிரின் காதலும், சக்திவேலின் வன்மமும்னு கலவையா இருந்தது.
-
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications