சூர்யா படத்தை நாரடிப்போம்.. எங்க பிள்ளைகள் பற்றி அப்படி பேசியது சரியா? நடிகர் ரவியின் பேச்சால் பரபரப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரவி அண்மையில் வெளியான கங்குவா திரைப்படத்தை பற்றி ஜோதிகா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவை விமர்சித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ரவியின் பேச்சு தற்போது விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
சீரியல் நடிகர் ரவி விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்திலும் இரண்டாவது பாகத்திலும் மீனாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். அதுபோல ஜீ தமிழில் இதயம் சீரியலிலும், சன் டிவியில் மருமகள் சீரியல் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் முக்கியமான கேரக்டரில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் இருந்தாலும் அதிகமாக அரசியல் பற்றி பேசி சமூக வலைத்தளத்திலும் இவர் பிரபலமாக இருக்கிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கங்குவா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயார்திருந்தார். அதிலும் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்றதால் தற்போது திரையரங்குகளில் பெரிய அளவில் மக்கள் கூட்டம் இல்லாமல் இருக்கிறது.
இந்த திரைப்படத்தை பற்றிய மீம்ஸ்களும் கருத்துக்களும் இணையத்தில் அதிகமாக வலம் வருகிறது. திரைப்படத்தில் அதிகமாக சவுண்டு இருப்பதால் பலருக்கு காது கேட்கவில்லை என்றெல்லாம் இணையத்தில் கிண்டல் செய்தனர். அதன் காரணமாகவே இப்போது சவுண்டு குறைக்கப்பட்டு இருக்கிறது.

அதுபோல ஆரம்பகாட்சி அதிக நீளமாக இருப்பதாகவும் சொல்லப்படுவதால் அதையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த திரைப்படம் பெரிய அளவில் இன்னும் பிக்கப் ஆகவில்லை. இந்த திரைப்படத்தை பார்த்த பல நடிகர்கள், இயக்குனர்கள் படம் நன்றாக இருக்கிறது அதை பார்க்கலாம் என்று ரிவ்யூ கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் ஒரு சிலர் இதற்கு எதிராகவும் பேசி வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஆதரவாக ஜோதிகா போட்ட போஸ்ட் தான் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. அதில் ஜோதிகா எல்லோரையும் படத்தை பார்க்க வருமாறு அழைத்ததை வைத்து பாடகி சுசித்ரா விமர்சித்து வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சுசித்ராவை தொடர்ந்து சீரியல் நடிகர் ரவியும் தன்னுடைய கோபத்தை கொட்டி இருக்கிறார்.
சமீபத்தில் ரவி ஒரு பேட்டியில் பேசும்போது கங்குவா திரைப்படத்தைப் பற்றியும் சூர்யா ஜோதிகாவை விமர்சித்தும் பேசியிருக்கிறார். அதில் சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த சூர்யா இங்கு தரமான கல்வி கிடைக்காது என்று தன்னுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க மும்பைக்கு போனதாக சூர்யாவும், ஜோதிகாவும் சொல்றாங்க.

உங்க பிள்ளைகள் மட்டும் தரமான பள்ளிக்கூடத்தில் படிக்கணும் ஆனால் இங்கு இருக்கிற மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஒரு மொழியை கத்துக்கிட்டா உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்துடும்... என்று ஜோதிகாவிடம் கேள்வி கேட்பது போல அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதாவது சூர்யா ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டி ரவி பேசுகையில் நாங்களும் பண்ணுவோம்.. நாங்களும் செய்வோம்.. தொடர்ந்து செய்வோம்.. சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம். உன்னால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று ஜோதிகாவுக்கு சவால் விடுவது போல ரவி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் நடிகர் ரவியை விமர்சித்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications