பாண்டியன் ஸ்டோர்ஸ்: அரசிக்கு திருமண ஏற்பாடு செய்யும் பாண்டியன்.. சுகன்யா செய்யும் சூழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மார்ச் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாண்டியன் தன்னுடைய மகள் அரசிக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார். ஆனால் இதில் சுகன்யா சில சூழ்ச்சிகளை செய்கிறார்.
கடந்த வாரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பெரிய சம்பவம் நடைபெற்று விட்டது. அரசி குமாரை காதலிக்கும் ரகசியத்தை சரவணன் வீட்டில் போட்டு கொடுத்து விட்டார். எப்படியும் இவர்களுடைய காதல் காட்சிகள் சில மாதங்கள் கடந்துதான் வீட்டிற்கு தெரியவரும் என்று எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் சட்டுபுட்டுனு இந்த விஷயம் உடைப்பட்டு விட்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்.

கண் கலங்க வைத்த காட்சி
ஆனாலும் கடந்த வாரம் சென்டிமென்ட் காட்சிகளில் பார்க்கும் ரசிகர்களையும் இந்த சீரியல் தரப்பினர் கண்களை பிழியவைத்து விட்டார்கள். ஐயோ இந்த பாண்டியன் ஆசையா வளர்த்த மகள் இப்படி அவளுக்கு துரோகம் பண்ணிட்டாளே என்று பலர் வசைப்பாடி வந்தனர். அதிலும் இன்னும் சிலர் கோமதியின் நடிப்பை ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருந்தனர். பாண்டியன் மனம் வெறுத்து மழையில் நனைந்தபடியே தெருவில் படுத்து கிடந்தது பார்ப்பவரை பதற செய்திருந்தது.
அரசிக்கு கல்யாணம் ஏற்பாடு
பிறகு மகன்கள் பாண்டியனை தேடி கண்டுபிடித்து ஒரு வழியாக மீண்டும் சமாதானம் செய்து வீட்டிலிருந்து கூட்டிக் கொண்டு வந்திருந்தனர். அப்போது அரசி இனி நான் அந்த குமாரை நினைத்து கூட பார்க்க மாட்டேன் என்று பாண்டியன் மீது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். தன்னுடைய மகள் செய்து கொடுத்த சத்தியத்தை நம்பி இப்போது பாண்டியன் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதாவது தன்னுடைய உறவினர் மகனை அரசிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
பாண்டியன் கேட்ட கேள்வி
அது பற்றி அரசி இடமும் பாண்டியன் சம்மதம் கேட்கிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை வர சொல்லி இருக்கிறேன் உனக்கு இந்த கல்யாணத்துக்கு விருப்பமா என்று கேட்க, அரசி தன்னுடைய அப்பாவிற்காக சம்மதம் சொல்லி விடுகிறார். பிறகு குடும்பத்தினர் எல்லோரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.
சகுனி வேலை செய்யும் சுகன்யா
இந்த நிலையில் அரசி சோகமாக திண்ணையில் உட்கார்ந்து இருக்கும்போது அங்கு வரும் சுகன்யா நீ உங்க அப்பா சொன்னா கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிற... அப்போ குமாரை காதலிச்சது பொய்யாகி விடுமே? பெரியவங்க இப்படித்தான் ஏதாவது சொல்லிகிட்டு இருப்பாங்க. ஆனா நீ உன் மனச மாத்திக்காத என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
பரபரப்பு காட்சிகள்
இதனால் அரசி மனம் மாறி குமாரை திருட்டு கல்யாணம் செய்யப் போகிறாரா? அல்லது தன்னுடைய அப்பாவிற்காக அவருக்கு பிடித்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய போகிறாரா? என்ற எதிர்பார்ப்போடு ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. அடுத்த வாரம் அரசியின் கல்யாணத்தை நோக்கி சீரியல் நகரும் என்று தெரிகிறது. போனவாரம் காதல் உடைபட்டது இந்த வாரம் திருமணம் என்பதால் ரசிகர்களை ஒரு பரபரப்பிலேயே வைத்திருக்கிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications