பாண்டியன் ஸ்டோர்ஸ்: தாலி பற்றிய உண்மையை சொன்ன அரசி.. அப்பத்தா செய்த விஷயம்! அதிர்ச்சியில் கோமதி குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 ஜூலை 14-ம் தேதிக்கான எபிசோடில் அரசி பொய்யான திருமணம் செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் விஷயத்தை எல்லார் முன்பும் சொல்கிறார். அதே நேரத்தில் அரசியின் பொய் திருமணம் தெரிந்ததும் அப்பத்தா செய்த செயலை பார்த்து கோமதி குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கதிர் குழலி இருவரும் கோபமாக நின்று கொண்டிருக்கும்போது குமார் வீட்டிற்கு வருகிறார். அவரிடம் சென்று இருவரும் சண்டை போட கோமதியும் ராஜியும் அங்கு வந்து இருவரையும் பிரித்து விடும் முயற்சி செய்கின்றனர். அப்போது குழலி குமாரை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்கு இருப்பவர்களுக்கு என்ன விஷயம் என்று தெரியாததால் எதற்காக சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கடுப்பான குழலி இத மொகரக்கட்டை ஒரு மேனா மிமிக்கி கூட பைக்கில் கட்டி பிடிச்சிகொண்டு ஊர் சுத்திக்கிட்டு இருக்கிறான் என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியில் இருக்க நான் அப்படிதான் செய்வேன் என்று குமார் சொல்கிறார். இதனால் கடுப்பான கதிர் குமாரை அடிக்கபாய அவரை ராஜி அமைதிப்படுத்துகிறார். இதெல்லாம் ஒரு மூஞ்சா இவளுக்காக நான் சும்மா இருக்கணுமா என்று குமார் பேசியதும் கதிர் கடுப்பாகி கல்லை தூக்கிக்கொண்டு தலையில் போட்டு கொல்ல முயற்சி செய்யப் போகிறார்.
கதிரை குடும்பத்தினர் பிடித்துக் கொள்கின்றனர். அப்போது குமார் கதிரை அடிக்க பாய அரசி உள்ளே வந்து என் அண்ணனை அடிக்கிற வேலை வச்சிக்கிட்டா அவ்வளவுதான் என்று சொன்னதும் சக்திவேல் கடுப்பாகி, இவன் என் பையனை அடிக்கும் போது நீ என்ன செஞ்சுகிட்டு இருந்த? என்று கோபத்தில் சத்தம் போட, இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது அரசி கதிரை அமைதிப்படுத்துகிறார்.
நீ இவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் உன் வாழ்க்கையை கெடுக்க வேணாம், இவனெல்லாம் ஒரு ஆளே இல்ல, எனக்கும் இவனுக்கும் கல்யாணம் நடக்கல. இவன் என் புருஷனே இல்லை என்று சொன்னதும் எல்லோரும் அரசி கோபத்தில் இப்படி சொல்வதாக நினைத்து கொள்கின்றனர். அப்பத்தா மற்றும் குமாரின் அம்மா அரசியை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர். அப்போது குமார் நல்ல வேலை உண்மையை சொல்லிட்டா, என்று மனசுக்குள் சந்தோஷத்தில் நீ மனசுக்குள்ள வச்சிருக்க விஷயத்தை எல்லாம் சொல்லு என்று ஏற்றி விடுகிறார்.
இதனால் அரசி குமார் தன்னுடைய குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று பிளான் போட்டதையும், தன்னை கட்ட கடத்தி வைத்து சித்திரவதை செய்ததையும் சொல்லிவிட்டு குமாரை பழிவாங்குவதற்காக தான் தாலி கட்டிக் கொண்டேன் என்றும் சொல்கிறார். இதனால் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அப்போது அப்பத்தா அரசியை வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார். குமார் குடும்பத்தினர் எல்லோரும் வீட்டிற்கு போனதும் கோமதி குடும்பத்தினர் அதிர்ச்சியில் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications