பாண்டியன் ஸ்டோர்ஸ்: அரசிக்காக பாண்டியன் எடுத்த உருப்படியான முடிவு.. குமாருக்கு விழுந்த அடி.. இது பலருக்கு பாடம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜூலை 16, 2025 எபிசோடில், அரசியின் போலித் திருமணம் பற்றிய உண்மைகள் பாண்டியனுக்குத் தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து பாண்டியன் அரசியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்னவென்று விரிவாகப் பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், குமார் தனக்குத் தாலி கட்டவில்லை என்ற உண்மையை அரசி சொன்னதும், அப்பத்தா அரசியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சமாதானம் செய்கிறார். அரசி இத்தனை நாள்கள் இங்கேயே இருந்துவிட்டதால் குமாரையே திருமணம் செய்துகொள்ளும்படி அப்பத்தா கூற, அரசி அதிர்ச்சியுடன் பார்க்கிறார். அப்போது சக்திவேல் குமாரை திட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் பாண்டியன் வாசலில் வந்து நின்று அரசியை அழைக்கிறார். உள்ளே இருக்கும் அரசி ஓடி வந்து வாசலில் நிற்கிறார். அப்போது, "உங்களை அசிங்கப்படுத்த நான் இப்படி பண்ணலப்பா. உங்களுக்கு கஷ்டம் வரக்கூடாதுன்னு தான் நான் இப்படி செஞ்சேன்" என்று அரசி கூறுகிறார். அதற்கு பாண்டியன், "எங்க எல்லாரையும் நினைச்சு பார்த்த நீ, உன் வாழ்க்கையை பற்றி யோசிக்கலையே" என்று கேட்கிறார். சக்திவேல், "இவன்தான் நாடகம் போட்டு இங்க அனுப்பி வச்சிருக்கான்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்பத்தா பாண்டியனிடம், "குமார் மற்றும் அரசிக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம். ஊர் உலகத்துக்கு இவங்க புருஷன் பொண்டாட்டியா ஏற்கனவே தெரியும். அதனால இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா எல்லாரும் தப்பா பேசுவாங்க" என்று கூறுகிறார். அதற்கு சக்திவேல், "இது என்ன புதுசா நாடகம் போடுறீங்க" என்று திட்டுகிறார். கதிர் அமைதியாக இருங்க என்று சத்தம் போட, பாண்டியன் கதிரை அமைதிப்படுத்துகிறார்.
பிறகு பாண்டியன் அப்பத்தாவிடம், "ஏன் பொண்ண இந்த வீட்ல எப்படி அத்தை நல்லா இருப்பா" என்று கேட்கிறார். அதற்கு குமார், "இவள் எல்லாம் ஒரு ஆளு. இவ மூஞ்சிக்காக நான் இவளை கட்டிக்கிறேனா?" என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார். இதனால் கடுப்பான கதிர் அவரை கீழே போட்டு மிதிக்கிறார். அப்போது தடுக்கும் சக்திவேல், "என் பையனை அடிக்கிறியா" என்று கதிரை அடிக்க கை ஓங்குகிறார். பாண்டியன் நடுவில் வந்து, "என் பையனை அடிக்கிற வேல வச்சா அவ்வளவு தான்" என்று சக்திவேலை மிரட்டுகிறார்.

"அதோடு இந்த ஊர் உலகம் என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை. என் பொண்ணுக்கு கல்யாணமே ஆகலனாலும் பரவால்ல. அவளை என் கண்ணுக்குள்ள வச்சு நான் பாத்துக்குவேன். இவனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன். அரசி இனி இங்கு இருக்கவே கூடாது" என்று பாண்டியன் சொல்கிறார். மேலும், "உன்னை பார்த்துக்க நம்ம குடும்பத்துல அத்தனை பேரு இருக்கிறோம் நீ வா" என்று அரசியை கூப்பிட, அரசி சரி என்று சொல்லிவிட்டு பாண்டியனுடன் கிளம்புகிறார்.
அப்போது பாண்டியன் அரசியிடம், "இவனே இல்லைன்னு ஆகிட்டு இந்த தாலி எதற்கு, அதை கழட்டி அவன் மூஞ்சில வீசிவிட்டு வாம்மா" என்று சொல்ல, அரசி ஒரு நிமிடம் யோசித்து விட்டு பாண்டியன் சொன்னதை செய்துவிட்டு அவருடன் நடக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications