பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: செந்திலுக்காக மீனா செய்த செயல்.. பாண்டியனுக்கு தெரிந்த உண்மை.. அசிங்கப்படுத்திய கோமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 2025 ஜூன் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் செந்திலுக்காக மீனா பணத்தை ரெடி பண்ணி கொடுக்கிறார். அதுபோல அரசி மீது கோபத்தில் கோமதி செய்த செயலை பார்த்து அவருடைய அம்மாவே திட்டுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் செந்திலும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இந்த பண பிரச்சனையில் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல நான் வேணும்னா வீட்டை விட்டு ஓடிரவா என்று கேட்க, அப்படியே ஓடுங்க உங்க பண பிரச்சனையும், நீங்க வீட்டை விட்டு போற பிரச்சனை எல்லாத்தையும் என் தலையிலேயே போட்டுட்டு போங்க என்று கோபத்தில் திட்டி விட்டு போகிறார். மறுபக்கத்தில் அரசி தன்னுடைய வீட்டில் இருந்து பாண்டியன் வீட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

Pandian Stores Vijay TV

அப்போது அங்கு வரும் அப்பத்தா என்ன வீட்டு ஞாபகம் வந்துடுச்சா என்று கேட்கிறார். அரசி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, நீ போய் உங்க அம்மாகிட்ட பேசி பாரு எனக்கு முதல்ல கோமதி மீது கோபம் இருந்துச்சு அதுக்கு அப்புறம் சரியாயிடுச்சு அதேபோல நீயும் அவகிட்ட போய் பேசி பாரு அவ சரியாயிடுவா என்று சொல்கிறார். அரிசி கோமதியிடம் பேச போகும்போது தண்ணீரை அவர் மீது தூக்கி வீசிவிடுகிறார். இதை பார்த்து ஓடிவரும் அப்பத்தா என்ன இப்படி பண்ணிட்டு இருக்க என்று கோமதியை திட்டுகிறார்.

அடுத்த கட்டத்தில் கதிர் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் பணத்துக்காக கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் பணம் ரெடி பண்ண முடியாது என்று சொல்லி விடுகிறார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் வீட்டில் வந்து உண்மையை சொல்லிவிடலாம் என்று செந்தில் கதிரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் உமையாளும் அவருடைய கணவரும் வந்து பணத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் காசு எப்ப வரும் என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் செந்தில் மற்றும் கதிர் வந்து நிற்க, காசு எங்கே என்று பாண்டியன் கேட்க செந்தில் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். அப்போது மீனா அங்கு வந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறார். நான் ஆபீஸ் விஷயமா பேங்கில் தான் இருந்தேன். அதனால என்னை எடுத்துட்டு வர சொல்லிட்டாரு என்று சொல்ல, அதற்கு பாண்டியன் செந்தில் மீது கோபப்பட்டு திட்டி கொண்டு இருக்கிறார். காலையிலிருந்து பணத்தை எடுத்துட்டு வர சொல்லி அத்தனை முறை சொல்லிக்கொண்டே இருக்கிறேன், நீ பணத்தை எடுக்காம, உன்னை சொன்ன வேலைக்கு அடுத்தவங்கள வேலை வாங்குவியா! என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+