பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: செந்திலுக்கு அரசு வேலை.. ஆனால் கோபத்தில் பாண்டியன்! சரவணன் சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 ஜூலை மூன்றாம் தேதிக்கான எபிசோடில் செந்திலுக்கு வேலை கிடைத்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. அதனால் கோமதி சந்தோஷத்தில் இருக்கும் பாண்டியன் செய்த செயலை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் செந்தில் சொன்னதாக சரவணன், பழனி, கதிர் என எல்லோரும் வீட்டிற்கு வருகின்றனர் .கோமதி எதுக்காக இப்ப வந்து இருக்கீங்க என்று கேட்க எல்லோரும் செந்தில் தான் வரச்சொன்னான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது பாண்டியனும் வீட்டிற்கு வர ஏங்க நீங்களும் செந்தில் சொல்லித்தான் வந்தீங்களா என்று கேட்கிறார். அதற்கு நான் ஏண்டி அவன் சொல்லி வரவேண்டும்? அவன் யார் என்னை வர சொல்றதுக்கு என்று பாண்டியன் கோபப்படுகிறார்.

அப்போது செந்தில் மற்றும் மீனா வீட்டிற்கு வருகின்றனர். பாண்டியன் ஏன்டா லேட் என்று கேட்க, செந்தில் ஒரு லெட்டரை கொடுக்கிறார். உடனே அதை வாங்கிய பாண்டியன் அதில் ஆங்கிலத்தில் இருப்பதால் அதை தங்கமயிலிடம் கொடுத்து படிக்க சொல்கிறார். தங்கமயில் படிக்க தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது கதிரும் ராஜியும் வாங்கி படித்து சந்தோஷப்படுகின்றனர். எல்லோரும் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் கோமதி என்னடா நீங்களே சிரிச்சிட்டே இருக்கீங்க என்னன்னு சொல்லுங்க என்று சொன்னதும் செந்திலுக்கு அரசு வேலை கிடைச்சிருப்பதை சொல்கின்றனர்.
அதைக் கேட்டு பாண்டியனும் சந்தோஷபடுகிறார். பிறகு என்ன வேலை? எவ்வளவு சம்பளம்? என்று சொன்னதும் கோமதி சந்தோஷத்தில் செந்திலை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். பாண்டியன் தன்னுடைய கடைக்கு வருபவர்கள் போபவர்கள் எல்லாரிடமும் தன்னுடைய மகனுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை காட்டி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மீனாவின் அப்பாவிடம் என் பையனுக்கு வேலை கிடைச்சிட்டுன்னு பெருமையா சொல்லணும் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு பழனி வேலை வாங்கிக் கொடுத்ததே மீனாவின் அப்பாதானே என்று சொல்ல, என்ன இருந்தாலும் என் பையனுக்கு தானே இப்ப வேலை கிடைச்சிருக்கு என்று பாண்டியன் பேசிக்கொண்டு இருக்கிறார். அடுத்ததாக இனி கடைக்கு வேலைக்கு என்ன பண்ண என்று பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சரவணன் வந்து நான் வேணா இனி செந்திலுக்கு பதில் வேலைக்கு வரேன் என்று சொல்கிறார்.
பாண்டியனுக்கு சந்தோஷம் தான் ஆனாலும் உன்னுடைய முதலாளியிடம் பேசிட்டு வா என்று சொல்கிறார். மறுபக்கத்தில் வீட்டில் கதிர், ராஜி, செந்தில், மீனா எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செந்தில் நிலம் வாங்க எவ்வளவு ஆகும் என்று கேட்க கதிர் மீனா கடுப்பாகின்றனர். இன்னுமே வேலைக்கே போகல அதற்குள்ள இப்படியா என்று கிண்டல் செய்கின்றனர். பிறகு கதிர் தான் டிராவல் பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்று முடிவில் இருப்பதாக சொல்கிறார். அதற்கு 15 லட்சம் ஆகும் என்று கூற லோன் பற்றி விசாரிப்பதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு மீனா தனக்கு தெரிந்தவர்களிடம் லோன் விஷயமாக பேசுகிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications