பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: உண்மையை மறைத்ததற்காக, மீனாவிற்கு கோமதி கொடுத்த தண்டனை.. ராஜி செய்த சப்போர்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூலை 5ஆம் தேதிக்கான எபிசோடில் பத்து லட்சம் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிய விஷயத்தை தங்களிடம் சொல்லவில்லை என்று மீனா மற்றும் செந்தில் மீது கோமதி கோபத்தை காட்டுகிறார். மீனாவிற்கு ராஜி சப்போர்ட் செய்ய தங்கமயில் மீனா பற்றி ஏற்றி விடுகிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டில் கோமதி மற்றும் மீனா பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது உன் மேல நான் எவ்வளவு பாசம் வைத்திருந்தேன்? என் பொண்ணை விட உன்னை அதிகமா நான் நேசித்தேன். அதனால எல்லா விஷயத்தையும் நான் உன்கிட்ட வந்து சொல்லி இருக்கிறேன். நீ இதை என்கிட்ட சொல்லவில்லை. ஏன் சொல்லல? என்று கோமதி கேட்க,
அதற்கு மீனா வீட்டில் நடந்த பிரச்சனைகளால் எதோ சொல்லவில்லை என்று சொல்ல, சரி நேத்து வேலை கிடைச்சில்ல அப்ப கூட இதை சொல்லல என்று கோமதி பாயிண்ட் பிடித்து கேட்டதும், மீனாவால் பதில் சொல்ல முடியாமல் தடுமறுகிறார். அதற்கு உன்னுடைய ஆபீஸில் வாங்கிய வடையில் உப்பு இல்லைன்னா கூட நீ என்கிட்ட சொல்லி இருக்க, ஆனா இந்த மாதிரி பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லல. ஒருவேளை என்கிட்ட சொல்றதுக்கு நான் இதற்கு தகுதி இல்லை என்று நினைத்து விட்டாயா என்னவோ என்று கோமதி பேசிக்கொண்டிருக்க இந்த இதற்கு மீனா பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டிருக்கிறார்.

அப்போது தங்கமயில் அத்த கேக்குறதுல எந்த தப்பும் இல்லையே மீனா, எங்களை எல்லாரையும் விடவும் உங்க மேல தான அவங்க ரொம்ப பாசமா இருந்தாங்க? ஆனா நீங்க இப்படி மறைச்சிருக்க கூடாது என்று சொல்கிறார் ஆனால் ராஜி நீங்களும் இந்த நேரத்தில் இப்படி பேசுறீங்க? மீனா அக்கா மறைச்சாங்கன்னா அதுல ஒரு காரணம் இருக்கு என்று சப்போர்ட் செய்கிறார்.
மறுபக்கத்தில் அப்பத்தா மற்றும் அரசி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது பழனி அங்கு வருகிறார். அரசி பழனியிடம் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்களா மாமா? என்று கேட்க, பழனி கோபமாக நீ பண்ணுன வேலைக்கு அங்க எல்லாரும் சந்தோஷமாவா இருப்பாங்க? ஏதோ இப்போ ஒரு நல்ல விஷயம் நடந்ததால எல்லாரும் கொஞ்சம் மன நிம்மதியா இருக்காங்க என்று சொன்னதும் அப்பத்தா தங்கமயிலுக்கு நல்ல சத்தான ஆகாரம் செஞ்சு கொடுக்க சொல்லி சொல்கிறார்.
அதற்கு பழனி அக்கா எல்லாம் நல்லபடியா பார்த்துக்கிறாங்க என்று சொல்லிவிட்டு செந்திலுக்கு வேலை கிடைத்த விஷயத்தையும் சொன்னதும் அப்பத்தா மற்றும் அரசி இருவரும் சந்தோஷப்படுகின்றனர். மறுபக்கத்தில் வீட்டில் எல்லோரும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது செந்தில் மற்றும் மீனா மட்டும் இல்லாமல் இருக்கின்றனர். இதனால் ராஜி அக்கா இல்லாமல் நல்லாவே இல்ல என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன் நான் யாரையும் சாப்பிட வரக்கூடாதுன்னு சொல்லலையே என்று சொல்கிறார். உடனே கதிர் போய் செந்திலையும் மீனாவையும் கூட்டிக்கொண்டு வந்து வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications