பாண்டியன் ஸ்டோர்ஸ்: செந்திலுக்காக ரகசியமாக பாண்டியன் செய்த செயல்.. கோமதிக்கு தெரிந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் வேலைக்கு போகும் முதல் நாளில் பாண்டியன் செய்த செயலை பார்த்து கோமதி கண்கலங்கி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கடையில் இருக்கும் பாண்டியன், பழனி மற்றும் சரவணன் கோபமாக திட்டி விட்டு கடையிலிருந்து வெளியில் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி விடுகிறார். செந்தில் மற்றும் கதிர் இருவரும் பாண்டியனை பார்க்க கடைக்கு வருகிறார்கள். அப்போது செந்திலிடம் பழனி என்னடா வேலைக்கு போறேன்னு மாறி கடைக்கு வந்துட்டியா என்று கிண்டல் செய்கிறார்.

அதற்கு கதிர் நான் வேலைக்கு போறதுக்கு முன்னாடி அண்ணனுக்கு அப்பா கிட்ட சொல்லிட்டு போகணுமா? அதான் வந்திருக்காரு என்று சொன்னதும் அவர் உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தாரு, ஆனால் வேலை இருந்ததால் வர முடியல. இப்ப எங்க போய் இருக்காருன்னு தெரியலையே என்று பழனி சொன்னதும் சரவணன் அப்பா வணிகர் சங்கத்தில் வேலை இருப்பதா போயிருக்காரு என்று சொல்கிறார். ஆனால் பாண்டியன் மாலை வாங்கிக்கொண்டு வந்து சாமிக்கு செந்தில் பெயரில் பூஜை செய்கிறார்.
செந்திலுடைய ராசி நட்சத்திரத்தை சொல்லி பூஜை செய்துவிட்டு செல்ல அதே கோவிலுக்கு கோமதியும் வருகிறார். கோமதியும் அங்கிருந்த ஐயரிடம் செந்தில் பெயர் ராசி நட்சத்திரத்தை சொன்னதும் அதற்கு ஒருவர் அர்ச்சனை பண்ணிட்டு போனாரு என்று சொன்னதும் யார் அவர் என்று கோமதி பார்க்க அவர் பாண்டியனை காட்டுகிறார். செந்திலை வீட்டில் அப்படி திட்டி விட்டு செந்திலுக்காக பாண்டியன் அர்ச்சனை செய்ததால் மகனுக்காக அர்ச்சனை செய்ய வந்தீங்களா? வீட்டில் அவன் வேலைக்கு கிளம்பும்போது இருக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார்.
அதற்கு பாண்டியன் ஏன் இப்ப அது ரொம்ப முக்கியமா? என்று கேட்டதும் ஆமா நீங்க இப்படி பண்ணிட்டு இருந்தா அவங்க மேல உங்களுக்கு பாசம் இல்லை என்று நினைக்க போறாங்க என்று சொன்னதும் பாண்டியன் அப்படின்னு நினைச்சா நினைக்கட்டும் நான் அப்பாவா என் கடமை செய்கிறேன் என்று சொல்லி சொல்லிவிட்டு இருவரும் கோவிலை விட்டு கிளம்புகின்றனர்.
பிறகு வரும் வழியில் கோமதி பாண்டி என்னிடம் பேசிக் கொண்டே வருகிறார். முதலில் அவர் கடுப்பானாலும் உன் மேல எனக்கும் பாசம் இருக்கு என்று கூறி சமாளித்து விடுகிறார். பிறகு கதிர் மற்றும் செந்தில் இருவரும் வணிகர் சங்கத்துக்கு போகலாமா என்று கேட்க, கதிர் ஏற்கனவே நேரமாகிடுச்சு இன்னும் வேலையில் சேர லேட் ஆயிடும் என்று ஆபீஸ்க்கு கூட்டி கொண்டு போகிறார்.
அப்போது வரும் வழியில் அரசி செந்திலுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு போகிறார். பிறகு கதிர் ஆபீஸில் கொண்டு வந்து விடுகிறார். அங்கு மீனாவும் அவருடைய அப்பாவும் காத்திருக்க, செந்தில் வந்ததும் வேலையில் சேர்வதற்கான முதற்கட்ட வேலை விஷயங்களை முடித்துவிட்டு வருகிறார்கள். பிறகு மீனா மற்றும் செந்தில் சந்தோசமாக போட்டோஸ் எடுத்துக் கொள்கிறார்கள்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications