பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் செம ட்விஸ்ட்.. குமரவேல் சாகவில்லை.. ஆனால், இனி நடக்க போவது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏப்ரல் 30ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா குமரவேலை கொலை செய்து விட்டதாக கதறி அழுது கொண்டிருக்கும் நிலையில் அவர் மயக்கத்தில் இருப்பது குடும்பத்திற்கு தெரிய வந்து இருக்கிறது. அதே நேரத்தில் இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பங்கள் கடந்த வாரத்தில் வந்தது. குமரவேலை மீனா தோசை கல்லால் தாக்கிய போது அவர் மூச்சுப் பேச்சு இல்லாமல் கீழே விழுந்துவிட்டார். இதனால் அவர் இறந்து போய்விட்டார் என்று மொத்த குடும்பத்தினரும் கதறி அழுது கொண்டிருந்தனர். மீனா போலீசுக்கு போன் செய்து நான் தான் கொலை செய்தேன் என்று சொல்லப் போகிறேன் என்று கதறிக் கொண்டிருந்தார்.

அழுத மருமகள்கள்
அதே நேரத்தில் ராஜீ தன்னுடைய அண்ணன் இறந்துவிட்டார் என்று அழுதாலும் தன்னுடைய மாமியார் குடும்பத்தினர் மீது தப்பில்லை என்பதால் என்ன செய்ய என்ற குழப்பத்தில் இருந்தார். இந்த நிலையில் தலையில் அடிபட்டு கீழே விழுந்த குமாரவேல் தலையில் இருந்து ரத்தம் வரவில்லையே என்பது எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அரசி, கோமதி, மீனா, நான்கு பேரும் குமரவேல் உடலை விட்டு தள்ளி உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார்கள்.
கோமதி சொன்ன வார்த்தை
இந்த நிலையில் மீனா தான் கொலை செய்து விட்டதாக செந்திலுக்கு போன் செய்து அழுதிருந்தார். ராஜி கதிருக்கு போன் போட்டு நடந்ததை சொல்லி இருந்தார். இதனால் இவர்கள் இருவரும் இன்றைய எபிசோடில் அம்பாசமுத்திரத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் வழியெல்லாம் மீனாவைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோமதி எல்லாவற்றையும் நான் பார்த்து முடித்தவள் உனக்கு பதிலாக நான் ஜெயிலுக்கு போறேன் என்று சொல்கிறார்.
அனைவரின் புலம்பல்
அதுபோல செந்தில் மீனாவுக்காக நான் ஜெயிலுக்கு போறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கதிர் நான் அண்ணிக்காக ஜெயிலுக்கு போறேன் நம்ம குடும்பத்தை நீ நல்லா பாத்துக்க என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் கதிருக்கு சின்ன சந்தேகமும் இருந்தது. ஒருவேளை குமரவேல் மயக்கம் போட்டு கீழே விழுந்து இருப்பானோ இவங்க தெரியாம இறந்து போயிட்டான்னு சொல்லுறாங்களா இன்னொரு முறை குமரவேல் முகத்தில் கைவைத்து பார்க்க சொல்லுவோமா என்று சந்தேகத்தோடு பேசிக்கொண்டு வருகிறார்கள்.

குமரவேல் சாகவில்லை
இந்த நேரத்தில் ராஜி தன்னுடைய போனை எடுப்பதற்காக ரூமுக்குள் வரும்போது குமரவேல் கை அசைவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். எல்லோரையும் வரச் சொல்லி குமரவேலை பார்க்க அவருடைய கை அசைகிறது. கடைசியில் அவருக்கு மூச்சு இருக்கிறதா என்று பார்க்க மூச்சு இருக்கிறது. நல்ல வேலை குமரவேல் சாகவில்லை. அவர் உயிரோடுதான் இருக்கிறார் நான் கொலை செய்யவில்லை என்று மீனா சந்தோஷப்படுகிறார்.
சந்தோஷத்தில் மீனா
நீதானே இவன் இறந்துட்டான்னு பார்த்து சொன்ன என்று ராஜியிடம் வாங்குவாதம் செய்கின்றனர். எது எப்படியோ நான் கொலை செய்யவில்லை என்று சந்தோஷத்தில் மீனா இருக்கும்போது இந்த விஷயத்தை கதிருக்கும் செந்திலுக்கும் போன் போட்டு சொல்லுங்க என்று கோமதி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

உங்கள் கருத்து
இனி நாளைக்கு குமரவேலை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போகப் போகிறார்களா? அல்லது அவர் எழுந்ததும் அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. குமரவேல் உயிர் பிழைத்து விட்டார் இனி ராஜி தன்னுடைய டான்ஸ் போட்டியில் கலந்து கொள்வார். அவர் ஆசைப்பட்டது போலவே கதிர் ராஜி டான்ஸை பார்க்க போகிறார். குமார் அம்பாசமுத்திரம் வந்ததும் மீனா அவரை அடித்தபோது அவர் இறந்துவிட்டார் என்று நீங்கள் நினைத்தீர்களா? இல்லை இதெல்லாம் கனவு என்று நீங்கள் நினைத்தீர்களா? இந்த எதிர்பாராத திருப்பம் பற்றி உங்க கருத்து என்ன பாஸ்?
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications