பாண்டியன் ஸ்டோரில் இன்று பெரிய சம்பவம்.. பாண்டியன் முடிவால் நிலைகுலைந்த குடும்பம், கோபத்தில் கோமதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயில் குடும்பத்திற்கு பாண்டியன் பெரிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் மயிலின் அம்மா பாக்கியம் பாண்டியன் குடும்பத்திற்கு எதிராக புதிய பிளான் போடுகிறார். என்ன நடப்பது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 எபிசோடு முழுக்கவே ஒரு கனமான மனநிலையோட தான் போச்சு. ஆரம்பத்திலிருந்தே ஏதோ பெரிய முடிவு எடுக்கப் போறாங்கன்னு ஒரு பதற்றம் இருந்தது. அதுக்குக் காரணம் பாண்டியன். மயில் இனிமேல் சரவணன் வாழ்க்கையில் இல்லைன்னு பாண்டியன் எடுத்த அந்த அதிரடி முடிவு தான் எல்லாத்துக்கும் தொடக்கம்.

வீட்டுக்குள்ள மயிலுடைய பொருட்கள் எல்லாம் இனிமேல் இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி, ஒரு வண்டியை வரவழைக்கிறாங்க. அவளுடைய டிரெஸ், சாமான்கள், பெட்டிகள்... ஒவ்வொண்ணா எடுத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றுறாங்க.
ஒரு கட்டத்துல அவளுடைய செருப்பை கூட விடாம திருப்பி அனுப்புறப்போ, சரவணனுடைய கடுமை எல்லாரையும் மிரள வைக்குது. இதைப் பார்த்து கோமதி, பாண்டியன் இருவரும் உறைந்துபோய் நிக்கிறாங்க. "இதெல்லாம் திருப்பி அனுப்புறதால புதுசா ஏதாவது பிரச்சனை வெடிச்சிடுமோ"ன்னு ராஜி, மீனா இருவரும் மனசுக்குள்ள பயப்படுறாங்க.
அதே நேரம் மறுபக்கம், மாணிக்கம் வீட்டுக்குள்ள வந்து "மாப்பிள்ளை வீட்ல இருந்து வண்டி அனுப்பி இருக்காங்க"ன்னு சொன்னதும், மயிலுக்கு ஒரே சந்தோஷம். "என்னை அழைச்சிட்டு போக வந்திருப்பாங்க போல"ன்னு ஆசையோட வெளியே ஓடி வர்றா. ஆனா அங்க அவளுக்காக காத்திருந்தது சந்தோஷம் இல்லை... சுத்தமான அதிர்ச்சி.
வண்டியிலிருந்து அவளுடைய பொருட்கள் எல்லாம் ஒவ்வொண்ணா இறக்குறாங்க. "பாண்டியன் அண்ணன் வீட்டிலிருந்து திருப்பி அனுப்புனாங்க"ன்னு டிரைவர் சொல்ல, மயிலின் உலகமே நொறுங்கிப் போகுது.
"என் வாழ்க்கை அவ்வளவுதானா? எல்லாமே போச்சா?"ன்னு அப்படியே உட்கார்ந்து கதறி அழ ஆரம்பிக்கிறா. வண்டி கிளம்பிப் போனதும், அக்கம் பக்கத்தார் எல்லாம் வந்து விசாரிக்க, பாக்கியம் கோபமா அவர்களை விரட்டி அடிக்கிறார். அப்போ தரையில் கிடந்த ஒரு சேலையைப் பார்த்ததும் மயில் இன்னும் உடைந்து போறா. "இது சரவணன் எனக்கு வாங்கி கொடுத்த சேலை"ன்னு அதை கட்டிப்பிடிச்சு அழுற காட்சி மனசை நொறுக்குது.
அப்போ பாக்கியம் தான் அவளுக்கு ஒரே தைரியம். "பொருட்களை திருப்பி அனுப்பிட்டா எல்லாம் முடிஞ்சுருமா? மாப்பிள்ளை கட்டுன தாலி இன்னும் உன் கழுத்துல தான இருக்கு. நீ கவலைப்படாத. நான் உன்னை அந்த குடும்பத்தோட சேர்த்து வைப்பேன்"ன்னு சொல்லி உள்ளே அழைத்துச் செல்கிறார்.
ஆனாலும் மயில் "என் வாழ்க்கையே போச்சு, இனிமேல் என்ன பண்ணப் போறேன்"ன்னு புலம்பிக்கிட்டே இருக்கிறா. இதே நேரம் பாண்டியன் வீட்டில் வேற காட்சி. கோமதி ஹால்ல தன் மருமகள்களோட பேசிக்கிட்டு இருக்குறப்போ, மயிலிடருந்து போன் வருது. அவளுடைய பெயரை பார்த்ததும் கோமதிக்கு கோபம் தலைக்கு ஏறுது. "உடனே பிளாக் பண்ணு"ன்னு சொல்லிடுறார்.
அடுத்து பழனிக்கு போன்... அதையும் பிளாக். அப்புறம் ராஜிக்கு போன்... "அவளை பிளாக்ல போடுடி"ன்னு கோமதி கோபப்படுகிறார். கடைசில மீனாவுக்கு போன் வர, "உன் அக்காவை முதல்ல பிளாக் பண்ண சொல்லியிருக்கணும்"ன்னு கோபத்தோட திட்டுறா. "பொருளை திருப்பி அனுப்பினதும் சும்மா இருக்க மாட்டாளே... இன்னும் என்னென்ன பண்ணப் போறாளோ"ன்னு புலம்புறார்.
அப்போ பழனி கிளம்புற நேரம். ராஜி, "நான் கொடுத்த லெட்டரை அப்பா, சித்தப்பா படிச்சாங்களா?"ன்னு கேட்க, "படிச்சுட்டே இருக்காங்க"ன்னு பழனி சொல்றான். கோமதி "என்ன லெட்டர்?"ன்னு கேட்டதும், "நமக்கு உதவி பண்ணதுக்கு நன்றி சொல்லி எழுதி அனுப்புனேன்"ன்னு ராஜி சொல்றா. "நேர்ல போய் பார்க்கலாமா?"ன்னு கேட்டா, கோமதி வேண்டாம்னு தடுக்கிறா. ஆனா பழனி, "நீ போய் பாரு. முதல்ல கோபப்பட்டாலும் மனசு இறங்கிடும்"ன்னு சொல்ல, எல்லாத்தையும் மீறி அப்பா வீட்டுக்கு கிளம்புறா ராஜி.
இத்தோடு எபிசோடு முடிகிறது. மயிலின் வாழ்க்கை எந்த திசை போகும், ராஜி எடுத்த இந்த முடிவு என்ன விளைவுகளை தரும், கோமதியின் கோபம் இன்னும் என்ன எல்லாம் செய்ய வைக்கும்... அடுத்த எபிசோட்ல என்ன நடக்கப் போகுதோன்னு ஒரு பெரிய கேள்விக்குறியோட இன்றைய கதை முடிஞ்சது.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications