முல்லையின் வளைகாப்பில் இப்படி ஆகிவிட்டது..மெயின் வில்லியே இவங்க தான்! தெரிய வந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 18ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து முல்லையின் வளைகாப்பை கொண்டாடுகின்றனர்.
இது கனவா நனவா என்று அந்த ப்ரோமோவில் முடித்திருக்கும் நிலையில் பல எதிர்பார்க்காத உண்மைகள் வெளியே வந்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சில மாதங்களாகவே அடுத்தடுத்த பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் கூட்டு குடும்பமாக இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பம் இப்போது ஆளாளுக்கு பிரிந்து இருக்கின்றனர். ஜீவா ஒரு பக்கம் மீனா உடன் மாமனார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
அதைத்தொடர்ந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனிக்குடித்தனம் போயிருக்கின்றனர். அவர்கள் இதுதான் சுதந்திரமான வாழ்க்கையாக இருக்கிறது என்று என்ஜாய் பண்ணிக் கொண்டே கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் ஐஸ்வர்யா இஎம்ஐயில் பொருட்களை வாங்கி குவித்து கொண்டிருக்க கண்ணன் திணறினாலும் பிறகு எல்லாம் சமாளித்து விடலாம் என்று மெத்தனமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கதிர் எப்படியாவது முல்லையின் வளைகாப்பில் தன்னுடைய அண்ணன் தம்பிகள் எல்லாரும் ஒன்றாக மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்று அண்ணன் தம்பிகள் அனைவருக்கும் ஒரே கலரில் சட்டை எடுத்து தனித்தனியாக அனைவரும் வீட்டிற்கு கொடுத்து இருக்கிறார். அனைவரும் நாளைக்கு வளைகாப்பு பங்ஷனுக்கு வந்துவிடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையில் கதிர் இருக்கிறார்.
அதே நேரத்தில் மண்டபத்தில் எந்த உதவியும் செய்ய ஆளே இல்லாமல் தன்னுடைய மனைவிக்காக தானே மண்டபத்தை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கண்ணன் ஒரு பக்கம் தன்னுடைய வீட்டை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கண்ணனுக்காக கதிர் வாங்கி கொடுத்த சட்டையை நான் போட விடமாட்டேன் என்று ஐஸ்வர்யா ஏற்கனவே அவருடைய சித்தியிடம் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அனைவரும் ஒரே கலரில் சட்டை போட்டு வந்திருப்பதால் இது கனவாக தான் இருக்குமோ என்று ஒரு பக்கம் எண்ண தோன்றுகிறது. அதே நேரத்தில் மீண்டும் மொத்த குடும்பமும் வந்து சேர்ந்து ஐஸ்வர்யாவால் முல்லையின் வளைகாப்பில் புது பிரச்சனை ஏற்பட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக அடுத்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு போகப் போகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications