Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு வந்த சிக்கல்.. இப்பதானே ஒரு உயிரே போச்சு..பிறகும் இப்படியா? ரசிகர்கள் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 12தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை செய்தது குறித்து கதிருக்கு தெரிய வந்திருக்கிறது.

 Pandian Stores serial 2023 August 10th to 12th promo and fans reaction

இந்த நிலையில் அது குறித்து அதிகமான ரசிகர்கள் திட்டி கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அதற்கு என்ன காரணம் எதற்காக என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருந்திருக்கிறது.

இந்த நிலையில் சில மாதங்களாகவே இந்த சீரியலில் சுவாரசியம் குறைந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் இந்த சீரியலில் இதுவரைக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதும் அதை குடும்பமே சேர்ந்து தீர்த்து வைப்பது போன்றும் கதை இருக்கும். ஆனால் இப்போது எல்லோரும் ஹாலில் ஒன்றாக படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட அடுத்தடுத்து மூன்று மருமகள்கள் கர்ப்பமாக இருந்தனர் அது குறித்து அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தது.

 Pandian Stores serial 2023 August 10th to 12th promo and fans reaction

ஆனாலும் அதற்குப் பிறகு ஜீவா மூர்த்தி இடம் சண்டை போட்டு மீனாவின் வீட்டிற்கு போன பரபரப்பான தருணம் வந்துவிட்டதால் இந்த கதையை எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆனால் அதை தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் குழந்தை பிறப்பது போன்று போய்க்கொண்டிருந்தது. அதுவும் பெரிய அளவில் யாரையும் பாதிக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் தான் தனத்திற்கு மார்பக புற்றுநோய் வந்திருக்கிறது என்று கதையில் ட்விஸ்ட் வைப்பதாக நினைத்து பலரையும் வேதனையில் ஆழ்த்தி இருக்கின்றனர்.

புற்றுநோய் என்பது எவ்வளவு பெரிய ஆபத்தானது கொடுமையானது என்பது பலருக்கும் தெரியும். அதை அனுபவிப்பவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் வேதனை தான். அதை இந்த சீரியலில் டிஆர்பிக்காக தனத்திற்கு மார்பக புற்றுநோய் என்று வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

 Pandian Stores serial 2023 August 10th to 12th promo and fans reaction

சீரியலில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது தெரியும் ஆனால் இந்த சீரியலில் தான் மொத்த அபத்தமும் இருக்கிறது என்பது பலருடைய கருத்து. கர்ப்பமாக இருக்கும் தனத்திற்கு மார்பக புற்றுநோய் வந்திருக்கிறது. அதை மீனா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பல நாட்களாக மறைத்து பிறகு தனம் முல்லைக்கு தெரிந்து வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இவர்களாகவே பிளான் போட்டு குழந்தையை ஆபரேஷன் பண்ணி எடுத்துவிட்டு இப்போது திருச்சியில் போய் மார்பக புற்றுநோய்க்கு ஆபரேஷன் பண்ணி இருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த சீரியலில் தனத்திற்கு புற்றுநோய் என்று கதை வரும்போது இது குறித்து சமுதாயத்திற்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களை ரசிகர்கள் தியாகிகளின் கூடாரம் என்று கிண்டல் செய்வது போலவே, தனக்கு கொடிய நோய் இருந்தாலும் அதை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்து இவர்களே அதை சரி செய்து விட்டார்கள் என்பது போன்று காட்டி இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் கூட மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த தனம் வீட்டில் நார்மலாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது முல்லை அக்கா உங்களுக்கு ஆபரேஷன் செய்திருக்கு நீங்க இப்படி வேலை பார்க்க கூடாது என்று சொல்ல, அதைக் கேட்டு கதிர் என்ன ஆச்சு, அன்னிக்கு என்ன ஆபரேஷன்? என்று கேட்டபோதுதான் அவருக்கு மார்பக புற்றுநோய் வந்த விஷயத்தை முல்லை சொல்லுகிறார்.

சீரியலாக இருந்தாலும் அது மிகவும் சமூகப் பொறுப்புள்ளதாக இருக்க வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்து. ஆனால் இவர்களுடைய டிஆர்பி அதிகரிக்க வேண்டும் என்று சமூகத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் இஷ்டத்துக்கு கதை எடுத்து வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்போது தானே அங்காடித்தெரு திரைப்பட நடிகை சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக போராடி மரணமடைந்து இருந்தார்.

அதற்குப் பிறகாவது இந்த சீரியலில் புற்றுநோய் குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கலாம். ஆனாலும் இப்படி அலட்சியமாக கதையை நகர்த்திக் கொண்டு போவது குறித்து அதிகமான ரசிகர்கள் நெகட்டிவ்வாக திட்டி வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அவ்வளவு பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கும் ஆனால் இப்போது இந்த சீரியலை பார்க்கும் சிலரில் நிஜத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் கூட" இவர்களைப் போல அலட்சியமாக இருந்துவிட்டால் நிலைமை என்ன ஆகும்..!?" என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+