யாரு சாமி நீங்க.. பாண்டியன் ஸ்டோரின் அந்த வீடியோ பாத்தீங்களா? டக்கென்று நினைவு வந்திருக்குமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் ஜீவா மீது கை வைத்த பிரசாந்தை மூர்த்தி அனைவர் முன்பும் அடித்திருக்கிறார்.

Pandian Stores serial 2023 August 21th to 26th promo full update

இதே நிலையில் இந்த சம்பவத்தை பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது நினைவு வருகிறதா? இல்லை என்றால் இந்த கதையைப் படித்ததும் உங்களுக்கு நினைவு வரும்.

அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரச்சனை மறக்காமல் வந்து விடுகிறது. ஒரு பிரச்சனை முடிந்ததும் அடுத்த பிரச்சனையை தொடங்குவது வாடிக்கையாக இருக்கிறது.

அதிலும் சில மாதங்களாகவே பிரச்சனைகளுக்கு அடித்தளம் போடுவது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவாகவே இருக்கின்றனர். அதை மொத்த குடும்பமும் சரி செய்து முடிக்கும் தருவாயில் அடுத்த பிரச்சனை தொடங்கி விடுகிறது. அந்த மாதிரி தான் தனம் மார்பக புற்றுநோய் ஆபரேஷன் முடிவடைந்ததும் வீட்டுக்கு கிரக பிரவேசம் நடந்து இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலில் ஒவ்வொரு பங்க்ஷன் நடக்கும் போதும் ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கிறது. இது சீரியலை தொடர்ச்சியாக பார்க்கும் பலருக்கும் புரிந்து இருக்கும். ஜீவாவிற்கும் முல்லைக்கும் திருமணம் நடக்கும்போது தான் மீனா வந்து பிரச்சனை செய்து திருமண ஜோடி மாறி இருந்தனர். அதற்குப் பிறகு மீனாவின் வளைகாப்பு சமயத்திலும் கதிர் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருந்தார்.

Pandian Stores serial 2023 August 21th to 26th promo full update

அதைத் தொடர்ந்து பெரும் போராட்டத்தில் தான் மீனாவிற்கு குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு முல்லை கர்ப்பமாகி இருப்பார். முல்லைக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் கண்ணனுக்கு சப்போர்ட் செய்ததால் கதிர் மீண்டும் ஜெயிலுக்கு போய்விட்டு வருவார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் அதோடு மீனாவின் தங்கையின் திருமணத்தில் தான் ஜீவா தன்னுடைய அண்ணன் தம்பிகளை எல்லாம் வெறுத்துவிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு மாமனார் வீட்டிற்கு போய் தஞ்சம் அடைந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஜீவா பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளில் கலந்து கொண்டு இருந்தாலும் மீண்டும் ஒன்று சேர்ந்து தன்னால் வாழ முடியாது என்று கூறிக் கொண்டிருந்தார். புது வீட்டில் ஒன்றாக வாழ வேண்டும் என்று தனம் சொன்ன போது கூட அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் புது வீட்டு கிரகப்பிரவேசத்தில் வழக்கம் போல இவர்களுடைய சண்டை தொடங்கிவிட்டது.

மீனா தங்கச்சி கல்யாணத்தில் எப்படி சேர் போட்டு மொத்த குடும்பமும் இருந்து கொண்டு பிரச்சனையை பேசி பெரிது பண்ணுனார்களோ அதுபோல இப்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவிலும் ஜனார்த்தனம் அவருடைய இரண்டாவது மருமகன் பிரசாந்த் ஒரு பக்கமாக அமர்ந்திருக்க, ஜீவா, மூர்த்தி, தனத்தின் அண்ணன், கண்ணன் என நான்கு பேரும் இன்னொரு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கின்றனர்.

அப்போது பிரசாந்த் மாப்பிள்ளை சொன்ன பிசினஸ்ல பணம் போட்டா பண மழையா கொட்டும் என்று ஜனார்த்தனன் பேசிக் கொண்டிருக்க, அதற்கு ஜீவா," இந்த மாதிரி எம்புட்டு பேரு ஏமாத்துறாங்கன்னு தெரியும்ல" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப, அப்போது சட்டையை பிடித்த பிரசாந்த். "அப்ப நான் ஏமாத்துறேன்னு சொல்றியா? மரியாதையா மன்னிப்பு கேளு"என்று பிரச்சனை செய்ய, ஜீவா கையைஎடு பிரசாந்த் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் மூர்த்தி "எர்ரா கையை எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே என் தம்பி மேல கைய வைப்பே" என்று அடித்து தள்ளி விடுகிறார்.

அதற்கு ஜனார்த்தனன் என் மாப்பிள்ளை என்ன தப்பா சொல்லிட்டார் என்று கேட்க, அதற்கு மீனா அப்பா என்று கத்த, ஏதாவது ஒன்னு உருப்படியா செஞ்சி இருக்காரா உன் புருஷன். எதுக்கும் லாயக்கு இல்ல என்று ஜனார்த்தனன் திட்ட, என் தம்பியை என் கண்ணு முன்னாடியே வாய்க்கு அந்த மாதிரி பேசுவீங்களா? உங்களுக்கு உங்க இரண்டாவது மருமகன் ஒசத்தினா எனக்கு என் தம்பி அதை விட ஒசத்தி என்று சொல்ல ஜீவா கண்கலங்கி மூர்த்தியை பார்க்கிறார்.

இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கும் நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்ததும் ஒரு ஃபங்ஷனில் சண்டை போட்டு பிரிந்த குடும்பம் இன்னொரு ஃபங்ஷனில் சண்டை போட்டு சேர்ந்துருச்சு என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவிக்க வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு முறையும் பங்க்ஷனில் இப்படித்தான் சண்டை வந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டையோடு சீரியல் முடிவடையுமா? அல்லது என்னும் பல வருடம் தொடருமா? என்று தான் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+