கண்ணனுக்காக முட்டாள்தனமாக முடிவெடுக்கும் தனம்.. திட்டும் ஜனார்த்தனன்.. இனி ஜீவா முடிவு என்ன?
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா அவருடைய சித்தியிடம் வட்டிக்கு பணம் வாங்கியது முல்லை மற்றும் தனத்திற்கு தெரிய வருகிறது.
ஆனாலும் கண்ணனை திட்டும் தனம் இந்த விஷயத்தை மூர்த்தியிடம் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா அவருடைய சித்திக்கு எப்படி பணம் கொடுத்தார்கள் என்ற சந்தேகம் முல்லைக்கு வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூலை பத்தாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் ஐஸ்வர்யாவின் சித்தி இடம் வட்டிக்கு பணம் வாங்கியது தனம் மற்றும் முல்லைக்கு தெரிய வருகிறது. அப்போது எவ்வளவு பணம் வாங்கி இருக்காங்க என்று கேட்டபோது, அத்தாட்சி 2 லட்சம் வாங்கி இருப்பாதாகவும் வட்டியுடன் சேர்த்து 50,000 தந்திருக்காங்க என்றும் சொல்கிறார்.

இதைக் கேட்டதும் தனமும் முல்லையும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது தனம், ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை திட்டுகிறார். எதுக்காக இவ்வளவு கடன் வாங்கினீங்க என்று கேட்க, அவர்கள் இருவரும் இக்கட்டான சூழ்நிலையில் வளைகாப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை வந்து விட்டதால் கடன் வாங்கினோம் என்று சொல்ல, தனம் கோபத்தில் இருவரையும் திட்டி விட்டு பிறகு இதை மூர்த்தி இடம் சொல்லாதீங்க மீதி பணத்தை நானே தருகிறேன் என்று சொல்கிறார்.
அப்போது அத்தாட்சி நீயே பொறுப்பு சொல்றப்போ நான் எதுக்கு இதை சொல்லப்போறேன் என்று சொல்கிறார். பிறகு மீனா வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனாவின் அப்பா புது வீடு ஒன்று வந்திருக்கு அதை வாங்கலாம் என்று யோசிக்கிறேன் என்று சொல்ல, அதையும் கயல் பேரில் தான் வாங்க போறேன் என்று சொல்கிறார்.

அதற்கு மீனா அதெல்லாம் வேண்டாம்பா. இங்க வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல வீட்டு வேலை முடிந்ததும் கிரகப்பிரவேசம் வச்சதும் நாங்க அங்க போயிருவோம் என்று சொல்கிறார். அதற்கு ஜீவா கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார். அப்போது மீனாவின் அப்பா அம்மா மாப்பிள்ளையே சும்மா இருந்தாலே நீ சும்மா இருக்க மாட்ட போல என்று மீனாவை திட்டுகின்றனர்.
அதற்கு மீனா ஆமா நாங்க என்ன இருந்தாலும் அங்க தானே இருக்கணும். இங்கேயேவா இருந்துற முடியும் என்று சொல்லி, இருவருக்கும் அதிர்ச்சி கொடுத்து விட்டு கயலை அவர்களிடம் இருந்து வலு கட்டாயமாக பிடுங்கிவிட்டு போய்விடுகிறார்.

அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவும் கண்ணனும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது வரும் முல்லை கண்ணனிடம் சம்பளம் எல்லாம் இஎம்ஐ கட்டியாச்சு என்று சொன்னீங்க. அப்புறம் எப்படி அத்தாட்சிக்கு பணம் கொடுத்தீங்க? ஐஸ்வர்யா அத்தாச்சிக்கு கொடுத்த பணம் நிறைய இருந்துச்சு. அத நான் பார்த்தேன் என்று சொல்ல, ஐஸ்வர்யாவும் கண்ணனும் மீண்டும் முல்லையிடம் பொய் சொல்கின்றனர். அதற்கு எனக்கு மட்டும் உண்மை தெரிஞ்சிருச்சுன்னு வைங்க உங்கள சும்மா விட மாட்டேன் என்று முல்லை மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications