லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட கண்ணன்.. தனம் சொன்ன வார்த்தையால் கோபத்தில் மூர்த்தி.. பரபரப்பின் உச்சம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் வீட்டுக்கு கிரகப்பிரவேசம் வைப்பதற்கு நாள் பார்த்து அடுத்த வெள்ளிக்கிழமை கிரகப்பிரவேசம் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அதற்கு மூர்த்தி இவ்வளவு அவசரமாக வைக்க வேண்டுமா என்று கேட்க, தனம் நாளைக்கு என்ன நடக்குமோனு தெரியல என்று சொல்ல மூர்த்தி கோபப்படுகிறார்.
அதே நேரத்தில் கண்ணன் லஞ்ச பணம் வாங்கிக் கொண்டிருப்பதை குறித்து மேல் அதிகாரி கேட்க, இனி நான் இப்படி செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார். ஆனால் கண்ணனுக்கு புதிதாக பிரச்சினை வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஜூலை 11ம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் முல்லையிடம், ஐஸ்வர்யாவும் கண்ணனும் பொய் சொல்கின்றனர். பிறகு அத்தாச்சி விஷயத்தில் நீங்க ஏதாவது பொய் சொல்லிக்கிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சா அப்புறம் நடக்கிறதே வேறு என்று முல்லை மிரட்டி விட்டு போகிறார்.
அப்போது கண்ணன் ஏற்கனவே நிறைய பொய் சொல்லிட்டோம். இனிமேல் அந்த தப்பை எல்லாம் பண்ணக்கூடாது சரியா நடக்கணும் என்று சொல்கின்றார். இதை தொடர்ந்து ஜீவா ரூமில் உட்கார்ந்து இருக்கும்போது மீனாவும் அங்கு வருகிறார். அப்போது ஜீவா நீ எதுக்கு கொஞ்ச நாளாவே அங்க போகணும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்க, அதற்கு மீனா எல்லோரும் புது வீடு கட்டி சந்தோஷமா இருக்கணும்னு தானே நம்ம ஆசைப்பட்டோம்.
அங்கதானே எல்லோருடைய குழந்தைகளும் இருக்காங்க. அங்க நம்ம கயலும் இருந்தா நல்லா இருக்கும் என்று சமாளிக்க நீ ஆரம்பத்தில் அந்த வீட்டில் இருக்கும்போது நிறைய குறை சொல்லிக்கிட்டே இருப்ப, இப்ப மட்டும் எதுக்கு அங்க போகணும்னு இவ்ளோ அவசரப்படுதுன்னு தெரியல. உண்மையா சொல்லு வேற எதுவும் பிரச்சனை இருக்கா என்று கேட்க, மீனா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளித்து விடுகிறார்.
அடுத்ததாக மீனாவும் தனம் வீட்டிற்கு வந்து அனைவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது முல்லையின் அப்பாவும் அங்கே வர அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தனம் காலண்டரை எடுத்து முல்லையின் அப்பாவிடம் கொடுத்து புது வீட்டுக்கு கிரகப்பிரவேசம் பண்றதுக்கு நாள் எப்போ நல்லா இருக்கு என்று பாருங்க என்று சொல்ல, அவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது இன்னும் ஒரு வாரத்தில் ஆடி மாசம் தொடங்கிடும். அதுக்கு பிறகு தான் பண்ண முடியும் என்று சொல்ல, இல்ல இந்த ஒரு வாரத்துக்குள்ள நல்ல நாள் இருக்கான்னு பாருங்க என்று தனம் சொல்ல, இந்த வாரம் வெள்ளிக்கிழமை நல்ல நேரம் இருக்கு என்று சொல்கிறார். அதற்கு ஐஸ்வர்யா அக்கா சொல்றத பார்த்தா இன்னைக்கே புது வீட்டுக்கு போயிடுவாங்க போல இருக்கு என்று கிண்டல் அடிக்க, தனம் நாளைக்கு யாருக்கு என்ன நடக்கும்னு தெரியாது என்று சொல்ல மூர்த்தி கோபப்படுகிறார். அப்போது மீனா அந்த சூழ்நிலையை சமாளிக்கிறார்.
அதே நேரத்தில் பேங்கில் கண்ணன் மேல் அதிகாரியிடம் பேசுகிறார். அப்போது லாஞ்சம் வாங்கும் விஷயத்தைப் பற்றி அவர் விசாரித்து கண்ணனை திட்டுகிறார். நான் இனி அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் என்று கண்ணன் சொல்லிட்டு வெளியே வந்தாலும், மேலதிகாரி அதான் லஞ்சம் வாங்கிட்டாளா இனி நடக்கிறத பாரு என்று மனதிற்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து கண்ணன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நபர் லோன் விஷயமாக வர, அவருடைய டாக்குமெண்ட் எல்லாம் செக் பண்ணி பார்த்த கண்ணன் இங்கே பாதி டாக்குமெண்ட் இல்லை என்று சொல்ல, நீங்க பணம் வாங்குவீங்கனு சொன்னாங்க என்று சொல்லி அவர் லஞ்சம் கொடுக்கிறார். அதை வாங்கலாமா? வேண்டாமா? என கண்ணன் யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications