ரத்தினத்தை அடித்த கதிர்..பேச்சு மூச்சு இல்லாமல் அபாய கட்டத்தில் முல்லை.. ஜீவா எடுத்த அதிரடி முடிவு
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிரை பழி வாங்குவதற்காக ரத்தினம் முல்லை மேலே பைக்கை மோதிவிடுகிறார்.
கீழே விழுந்த முல்லைக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
மொத்த குடும்பத்தினரும் விஷயம் தெரிந்து மருத்துவமனையில் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூன் 13ஆம் தேதி எபிசோடு ஆரம்பத்தில் கதிர் ஹோட்டலுக்கு வர, அங்கே ரத்தினம் முல்லை அப்பாவிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். கதிர் ஆரம்பத்தில் பொறுமையாக இருந்தாலும், ரத்தினம் அளவுக்கு மீறி பிரச்சனை செய்து கொண்டு இருக்க, ஒரு கட்டத்தில் கோபமாகி ரத்தினத்தை அடித்து கடையை விட்டு வெளியே துரத்துகிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டில் முல்லை மருத்துவமனைக்கு செல்வதற்காக ரெடியாகி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கதிர் முல்லையை காரில் கூட்டிக்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் வழியில் ஒரு பலகார கடையை பார்த்ததும் முல்லை எனக்கு பலகாரம் சாப்பிடணும் போல இருக்கு என்று சொல்ல, இருவரும் கீழே இறங்கி பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் அங்கே போன் பேசியபடி நின்று கொண்டிருந்த ரத்தினம் இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து கோபமாகி பைக்கை வேகமாக எடுத்துட்டு வந்து முல்லை வயிற்றில் மோதி விட்டு நிற்காமல் போகிறார். முல்லை கீழே விழுந்த வேகத்தில் அடிபட்டு இரத்தம் அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது.
அவசர அவசரமாக கதிர் மருத்துவமனைக்கு அழுதபடி கூட்டிக்கொண்டு வந்து சேர்த்துவிட, அங்கே டாக்டர்கள் கதிரை வெளியே நிற்க வைத்து விட்டு முல்லையை ரூமிற்கு கூட்டிட்டுப் போகின்றனர். முல்லை அறைக்கு செல்வதற்கு முன்பே மயக்கம் அடைந்து விடுகிறார். பின்பு ஆபத்தான நிலையில் முல்லை இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

வெளியே நின்று அழுது கொண்டிருந்த கதிர் ஜீவாவுக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்ல, ஜீவா பதறியபடி மீனாவுக்கு போன் போட்டு சொல்ல அப்போ அருகில் இருந்த தனம் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். உடனே மூர்த்தியையும் கூட்டிக்கொண்டு எல்லோரும் ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகின்றனர்.
கதிரை பார்த்ததும் என்ன நடந்தது என்று எல்லோரும் அழுதபடி கேட்டுக் கொண்டிருக்க, கதிர் என்ன நடக்கும்னு தெரியல. உள்ளே எதுவும் என்கிட்ட சொல்லல என்று கூறிக் கொண்டிருக்கிறார். அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications