ஆபத்தான நிலையில் முல்லை..கோபத்தில் பார்வதி..கதிர் செய்த செயல்.. உணர்வு பூர்வமான தருணம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை ஆக்சிடென்ட் ஆகி ஆபத்தான நிலையில் கண் முழிக்காமல் மருத்துவமனையில் இருக்கிறார்.
முல்லையின் அம்மா பார்வதிக்கு இந்த தகவல் தெரிந்து மருத்துவமனைக்கு வந்து கதறி அழுகிறார்.
முல்லைக்கு அதிகமான ரத்தம் போனதால் கதிர், ஜீவா, கண்ணன் மூவரும் ரத்தம் கொடுக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூன் 14ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு வந்த தனம் குடும்பத்தினர் அனைவரும் ஜீவாவுக்கு ஆறுதல் கூறி என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். கதிர் அழுதப்படியே முல்லைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து உள்ளே போகிறதுக்கு முன்கூட்டியே முல்லைக்கு நினைவு இல்லாமல் தான் போச்சு. ஆனா இப்ப எப்படி இருக்குன்னு தெரியல என்று அழுது கொண்டு இருக்க, அந்த நேரத்தில் டாக்டர் வர அவரிடம் அனைவரும் விசாரிக்கின்றனர். அப்போ டாக்டர், முல்லை ஆபத்தான கட்டத்தில் தான் இருக்காங்க. எதுவும் என்னால இப்ப சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டு போறாங்க.
அதைத் தொடர்ந்து முல்லையின் அப்பாவும் அம்மாவும் வர அவர்களும் என்ன நடந்தது என்று கேட்டு கதறி அழுது கொண்டிருக்கின்றனர். அப்போ ஆக்சிடன்ட் ஆயிட்டுன்னு எல்லாரும் சொல்ல, கார்ல மாசமா இருக்கிற பொண்ண கூட்டிட்டு வரும்போது பார்த்து வர மாட்டீங்களா? என்று பார்வதி கதிரை திட்ட, தனம் பார்வதிக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மீண்டும் அந்த பக்கமாக டாக்டர் வர டாக்டரிடம் பார்வதி முல்லை நிலைமை இப்போ எப்படி இருக்குன்னு கேட்டு அழுகிறார்.
அதற்கு டாக்டர் முல்லை இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருக்காங்க. வயித்துல ரொம்ப அடி பலமா பட்டு இருக்கு. ஆனா குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்ல. குழந்தை நல்லா தான் இருக்கு. ரத்தம் நிறைய போய் இருக்கு ரத்தம் ஏத்தணும். குழந்தையை எப்படியும் இன்னைக்கு ஆபரேஷன் பண்ணி வெளியே எடுத்திடனும். அதுக்கு அவங்க குடும்பத்துக்காரங்க கையெழுத்து போட்டு கொடுங்க என்று சொல்லிட்டு போறாங்க.

அதைத்தொடர்ந்து கதிரிடம் நர்ஸ் கையெழுத்து கேட்க, கதிர் அழுதப்படியே கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு முல்லைக்கு ரத்தம் கொடுப்பதற்காக போகிறார். அவரை தொடர்ந்து ஜீவாவும் ரத்தம் கொடுக்க, கண்ணனும் நானும் கொடுக்கிறேன் என்று சொல்ல வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் கண்ணனும் ரத்தம் கொடுக்கிறார்.
அதே நேரத்தில் தனமும் பார்வதியும் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டபடி அழுது கொண்டே இருக்கின்றனர். பார்வதிக்கு தனம் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாலும் பார்வதி ஊர் உலகத்தில் எல்லாருக்கும் கல்யாணம் முடியுது. குழந்தை பெத்துக்கறாங்க. ஆனா யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல ஆனா என் பொண்ணுக்கு மட்டும் தான் எல்லா சந்தோஷத்துக்கும் பெரிய அளவில போராட வேண்டியது இருக்கு. எதுக்காக இப்படி நடக்குதுன்னு தெரியல என்று அழுத படி பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications