குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் கதிர்.. காத்திருக்கும் அதிர்ச்சி.. கண்கலங்கும் மூர்த்தி..!
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் முல்லைக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கதிர் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து டாக்டர்கள் வந்து முல்லைக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்று கூறுகின்றனர்.
இதைக் கேட்டு மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 15 முதல் 17ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.. ஏற்கனவே ரத்தினத்தால் முல்லை வயிற்றில் அடிபட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்.
முல்லையின் வயிற்றில் அடிபட்டு விட்டதால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு விட்டது. அபாய கட்டத்தில் இருக்கிறார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.இந்த நிலையில் கதிர், ஜீவா, கண்ணன் மூவரும் முல்லைக்கு ரத்தம் கொடுத்து இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து கதிர் அழுது கொண்டே இருக்கிறார்.
கதிருக்கு ஜீவாவும், மீனாவும் தொடர்ந்து ஆறுதல் கூறிக் கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் அப்போது கூட என்னுடைய வாழ்க்கையை மாற்றியது முல்லை தான். நான் முல்லைக்காக எதுவும் செய்யவில்லை. முல்லைக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று அழுதபடியே கூறிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் தனத்திடம் முல்லையின் அம்மா பார்வதி என் பொண்ணு வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கு? எல்லாவற்றிற்கும் பிரச்சனையா தான் இருக்கு. கல்யாணத்தில் தொடங்கி ஒவ்வொரு விஷயமும் போராட்டத்தில் தான் என் பிள்ளைக்கு கிடைச்சுக்கிட்டு இருக்கு. ஆரம்பத்தில் பெரும் பிரச்சனையில் கல்யாணம் நடந்தது. அதற்குப் பிறகு என் மாப்பிள்ளையும், பொண்ணும் இருவரும் மனசு புரிஞ்சுகிட்டு வாழ்க்கையை தொடங்கினாங்க.
ஆனா அப்பமும் குழந்தை இல்லை என்று பெரும் பிரச்சனையே ஆச்சு. என் பொண்ணுக்கு குழந்தையே பிறக்காதுன்னு டாக்டரே சொல்லிட்டாங்க. அதுக்காக எவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் என் பொண்ணு தாங்குனா.. ஆனா இப்போ அந்த குழந்தை பிறக்க போற நேரத்திலும் இப்படி எல்லாம் ஆயிட்டு என்று அழுது கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஆறுதல் கூற வந்த மூர்த்தி இடமும், முல்லையின் அம்மா உங்க குடும்பத்தின் ராசி தான் என் பிள்ளைக்கு வந்து பிடிச்சுகிட்டு. உங்க வீட்டு பிரச்சனைனால தான் என் பொண்ணோட நிலைமை இப்படி ஆயிட்டு என்று அழுது கொண்டு பேச மூர்த்தி கவலையில் இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த டாக்டரிடம் குடும்பத்தினர் அனைவரும் முல்லையை பற்றி விசாரிக்க, உங்களுக்கு நல்லபடியா குழந்தை பிறந்துருச்சு. குழந்தையும் நல்லா இருக்காங்க முல்லையும் நல்லா இருக்காங்க என்று சொல்ல, எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இந்த நிலையில் இதை வைத்து இனி முல்லையின் அம்மா என்ன பிரச்சனை செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications