ஜெயிலில் இருந்து வரும் கதிர்..மாமியார் கேட்ட கேள்வி.. அவமானப்படுத்தும் மூர்த்தி..திடீர் பிரச்சனை
சென்னை: கதிரை ஜெயிலிலிருந்து வெளியே எடுக்க தனம் தன்னுடைய நகைகளை கொடுத்து உதவுகிறார்.
கதிர் ஜெயிலில் இருந்து வந்ததும் கண்ணனை மூர்த்தி திட்டுகிறார்.
வீட்டிற்கு வந்த கதிருக்கு ஆரத்தி எடுக்கும் போது மீனாவை முல்லையின் அம்மா அவமானப்படுத்துகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 1ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் முல்லை வீட்டில் அழுது கொண்டே இருக்க அவருடைய அப்பா சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். அனைவரும் பணத்திற்கு என்ன செய்வது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
என்னுடைய நகையை எடுத்துக்கோங்க அக்கா என்று முல்லை சொல்ல, அதான் என்னுடைய நகை இருக்குல்ல அதை நான் கொடுக்க மாட்டேன்னா? என்று தனம் சொல்ல, அப்போ மூர்த்தி நான் பாதி பணம் ரெடி பண்ணிட்டேன் என்று சொல்ல, என்னுடைய நகையை வச்சு கதிர சீக்கிரமா கூட்டிட்டு வாங்க என்று தனம் கொடுத்து அனுப்புகிறார்.
பணத்தை ரெடி செய்து மூர்த்தி வக்கீல் இடம் போய் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இருவரும் பேங்க் ஆபீஸரை பார்ப்பதற்காக போக அவர்கள் பணம் ரெடியா என்று கேட்க, எல்லாம் ரெடியாக இருக்கிறது என்று சொல்கின்றனர். பணத்தை இப்ப கொடுங்க நாளைக்கு காலையில் போய் கேசை வாப்பஸ் பண்ணி வாங்குகிறோம் என்று பேங்க் ஆபீஸர் சொல்ல, மூர்த்தி கோபம் ஆகிறார்.
பிறகு நீங்க சொன்ன மாதிரி நாங்க பணத்தை ரெடி பண்ணிட்டோம். நீங்க தயவு செய்து கேஸை வாபஸ் வாங்குங்க என்று சொல்கின்றனர். அதற்கு பேங்க் ஆபிஸர்ஸ் சரி நீங்க பணத்தை தந்துட்டு போங்க நான் வருகிறேன் என்று அனுப்பி வைக்கிறார். வெளியே வந்ததும் ஜீவா பணத்தை கொண்டு வந்து மூர்த்தியிடம் கொடுக்க நான் பணம் கொடுத்து விட்டேன் என்று மூர்த்தி சொல்கிறார்.
பிறகு அனைவரும் போலீஸ் ஸ்டேஷனில் கேஸை வாபஸ் வாங்குவதாக கூறி கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர். கதிர் ஜெயிலிலிருந்து வெளியே வருகிறார். பிறகு ஜெயில் வாசலில் நின்றபடி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராத்திரிக்குள்ள உன்ன கூட்டிட்டு வரலைன்னா முல்லைக்கு என்ன ஆகி இருக்குமுன்னே தெரியல டா என்று மூர்த்தியும் ஜீவாவும் கதிர் தோளில் சாய்ந்து கொள்கின்றனர். ஜீவா கண்ணன் தனியாக நின்று பீல் பண்ணுவதை பார்த்து அருகில் வர சொல்கிறார்.

பிறகு கண்ணன் கதிரை வந்து கட்டி பிடித்துக் கொள்ள மூர்த்தி கண்ணனை திட்டுகிறார். இவனையும் நான் தானடா வளர்த்தேன். ஆனால் இவன் மட்டும் ஏன்டா இப்படி இருக்கான் என்று கேட்டு, அழுது கொண்டு தனியாக போய்விடுகிறார். பிறகு பிரச்சனை எல்லாம் முடிஞ்சுச்சா அண்ணே என்று கண்ணன் கேட்க, முடிஞ்சு பணம் எல்லாம் கொடுத்து முடிச்சாச்சு என்று சொல்ல, எவ்வளவு பணம் என்று கேட்க ஜீவா 5 லட்சம் பணம் என்று கூறுகிறார்.
அதைக் கேட்டு கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். மூர்த்தி கோபமாக கண்ணனை முறைத்து பார்க்கிறார். அடுத்ததாக அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். மீனா கதிருக்கு ஆரத்தி எடுக்கிறார். அப்போது முல்லையின் அம்மா ஊர் கண்ணு, உறவு கண்ணு, உங்க அப்பா கண்ணு, தனத்தின் அம்மா கண்ணு என எல்லோரும் பற்றியும் சொல்லி சுற்றி போட சொல்கிறார். இதை கேட்டு மீனா கோபம் ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications