குழந்தையோடு வீட்டிற்கு வரும் முல்லை.. கண்ணனை திட்டும் பார்வதி.. வீட்டிற்குள் வர மறுக்கும் ஜீவா
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையை மொத்த குடும்பமும் பாசமாக பார்த்து கொள்கிறார்கள்.
மருத்துவமனையில் டிஸ்சார்ச் ஆகி குழந்தையை தூக்கிக்கொண்டு முல்லை வீட்டிற்கு வருகிறார்.
குழந்தையிடம் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளும் கண்ணனை முல்லையின் அம்மா திட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 21ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் மருத்துவமனையில் இருந்த முல்லை கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை சரியாகி வருகிறார். உடல்நிலை தேறிவரும் முல்லைக்காக மொத்த குடும்பமும் பாசமாக பார்த்துக் கொள்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து முல்லை எழுந்து உட்காரும் அளவிற்கு தேறியதும் மருத்துவர்கள் இன்று நீங்கள் டிஸ்சார்ஜ் சம்மரி வந்ததும் வீட்டிற்கு போகலாம் என்று சொல்ல மொத்த குடும்பமும் சந்தோஷம் அடைகின்றனர். பிறகு குழந்தையை முல்லையிடம் கொடுக்க முல்லை மற்றும் கதிர் இருவரும் கையில் வாங்கிக் கொண்டு ஆனந்த கண்ணீர் விடுகின்றனர். பிறகு மொத்த குடும்பமும் குழந்தையை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து முல்லையை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருகின்றனர். அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி ஆரத்தி எடுத்து முல்லையை வாசலிலே வைத்து கேள்வி மேலே கேள்வி கேட்டுக் கொண்டிருக்க கடுப்பான முல்லை அம்மா திட்டுகிறார். பிறகு கதிர் பணத்தை கொடுத்து அப்போதைய பிரச்சனையை முடித்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டில் அனைவரும் அமர்ந்து இருக்க ஜீவா மட்டும் வீட்டிற்குள் வராமல் வெளியேயே வாசலில் நின்று கொண்டிருக்கிறார். வீட்டிற்குள் அனைவருக்கும் காபி கொடுக்கப்படுகிறது. எல்லோரும் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது குழந்தைக்கு கொடுக்கலாமா என்று கண்ணன் கேட்க அதைக் கேட்டு பார்வதி திட்டுகிறார். இன்னும் குழந்தை மாதிரி நினைச்சுகிட்டு இருக்கியா? ஒரு குழந்தைக்கு அப்பாவாக போற எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று திட்ட, நான் தெரியாம பண்ணிட்டேன் என்று கண்ணன் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்த கதிர் வெளியே வந்து ஜீவாவை வீட்டிற்குள் வர கூப்பிடுகிறார். ஜீவா வேண்டாம் நான் வெளியே நின்று கொள்கிறேன் என்று சொல்ல, அன்னைக்கு மட்டும் வீட்டுக்குள்ள வந்தா? என்று கேட்க, அன்னைக்கு உனக்கு பிரச்சனை அதனால வந்தேன் என்று ஜீவா சொல்ல, அப்போ எனக்கு பிரச்சனைக்கு மட்டும்தான் நீ வருவியா? என்று கதிர் கேட்க, இல்லை இப்போதைக்கு வெளியில் நல்ல காற்று அடிக்கிறது அதனால நிற்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications