நெஞ்சு வலியில் தனம்.. ஜீவா எடுத்த முடிவு.. பீல் பண்ணும் மூர்த்தி.. இப்படி ஆகிவிட்டதே கதை..!
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா வீட்டிற்குள் வராமல் வெளியேவே நின்றபடி பேசிக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு போகிறேன் என்று சொல்ல மொத்த குடும்பமும் பீல் பண்ணுகின்றனர்.
மீனாவும் ஜீவாவோடு சேர்ந்து கிளம்பி விட அதன் பிறகு நெஞ்சு வலியில் தவிக்கிறார்.

ஜீவா தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதை நினைத்து மூர்த்தி பீல் பண்ணுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 22 ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் ஜீவா வீட்டு வாசலில் நிற்க கதிர் வீட்டிற்குள் வா என்று கூப்பிட்டபடி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு உனக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் ஓடோடி வருவேன். ஆனால் இப்போதைக்கு வீட்டிற்கு வர எனக்கு தோனல இங்கேயே நிற்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து குழந்தைகளைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் நான் வேலைக்கு போயிட்டு வந்த பிறகு இரவு கயல் பாப்பாவை தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருப்பேன் அந்த குழந்தை என்னை பாத்து சித்தப்பான்னு சொல்லி விளையாடும். நான் அந்த சந்தோஷத்தில் இருப்பேன் ஆனால் என் குழந்தை உன்ன பெரியப்பானு தேடும் போது நீ கூட இருக்க வேண்டாமா? என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு ஜீவா என்னுடைய குழந்தை என்னை பெரியப்பா என்று தேடுனாலே போதும் நான் வந்து விடுவேன் எனக்கும் என் குழந்தைக்கும் இருக்கும் பந்தம் எங்களுக்குள் தெரியும் என்று கூறிவிட்டு மீனாவை கிளம்ப சொல்கிறார். மீனாவும் வீட்டு வேலைகளை அவசர அவசரமாக பார்த்துக் கொண்டு கிளம்பி கொண்டிருக்க மீனாவின் மாற்றத்தை பார்த்து மூர்த்தியும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு மீனா நான் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது வீட்டுக்கு போறேன் என்று சொல்ல முல்லை ஃபீல் பண்ணுகிறார். ஒரு வழியாக மொத்த குடும்பத்திடமும் பிரியா விடை கொடுக்க மீனாவும் ஜீவாவும் வீட்டை விட்டு கிளம்புகின்றனர். பிறகு இரவு நேரத்தில் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு முல்லையின் அம்மா இப்படித்தான் பாண்டியனும் ஆரம்பத்தில் அழுது கொண்டு இருந்தானா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் தனத்திற்கு நெஞ்சு வலி அதிகமாகிறது. ஒரு வழியாக அவர்கள் முன்பு நடித்த படியே இருக்க, பிறகு வராண்டாவில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது அங்கு வரும் மூர்த்தி என்ன ஆச்சு என்று தனத்திடம் பேசிக் கொண்டிருக்க உள்ளே இவ்ளோ நேரம் குழந்தை அழுதுட்டு இருந்துச்சு உங்களுக்கு கேட்கலையா? என்று தனம் கேட்க, இல்ல நான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் என்று மூர்த்தி கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications