மருத்துவமனையில் தனம்.. மீனாவால் குடும்பத்திற்கு தெரியும் பிரச்சனை.. அடுத்து நடக்கப் போவது இதுதானா?
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் நெஞ்சுவலி அதிகமாக இருப்பதால் மருத்துவமனைக்கு செக் பண்ணுவதற்காக வருகிறார்.
அங்கு டாக்டர்கள் தனத்தை செக் பண்ணி பார்த்துவிட்டு சில டெஸ்ட் எடுக்க சொல்கின்றனர்.
அந்தப் பக்கமாக வந்த மீனா தனத்திற்கு என்ன ஆனது என்று டாக்டரிடம் கேட்க அவர் சொன்ன செய்தியை கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெரும் எதிர்பார்ப்பு இடையே முல்லை நல்லபடியாக குழந்தை பெற்று இன்று வீடு திரும்பி இருக்கிறார். பல பிரச்சினைகள் காரணமாக முல்லைக்கு என்ன ஆகுமோ என்று சில வாரங்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் கடைசியாக குழந்தையோடு முல்லை வீட்டிற்கு வந்து சேர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு பிரச்சனை முடிந்ததும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்த பிரச்சனை தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே கண்ணன் ஐஸ்வர்யா வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவின் சித்தியிடம் கடன் வாங்கி வைத்திருக்கும் செய்தி தான் அடுத்ததாக வெளியே தெரிய வந்து பிரச்சனை நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் தற்போது வெளியான ப்ரோமோவில் தனத்திற்கு உடலில் பிரச்சனை என்பது மீனாவிற்கு தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே தனம் ஒரு மாத காலமாகவே அடிக்கடி எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு இதய நோய் பிரச்சனை என்று சொல்வார்கள் என்று எதிர் பார்த்த நிலையில் தற்போது நெஞ்சில் கட்டி இருக்கிறது என்று மருத்துவர் கூறி இருக்கிறார்.
இன்றைய எபிசோட்டில் கூட இரவு முழுக்க தனம் தூங்காமல் தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று திணறிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தற்போது ப்ரோமோவில் ஹாஸ்பிடலுக்கு வந்து தனக்கு இந்த இடத்தில் வலிக்கிறது என்று கூறியிருக்கிறார். உடனே மருத்துவர் அவரை செக் பண்ணி இருக்கிறார். பிறகு ஒரு மெமோகிராப் டெஸ்ட் எழுதி தாரேன் அதை இம்மீடியட்டா எடுத்துட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.
அதை கேட்டு அதிர்ச்சியான தனம் ஹாஸ்பிடலில் சோகமாக நின்று கொண்டிருக்க அந்த நேரம் ஹாஸ்பிடலுக்கு வரும் மீனாவும் அவருடைய அம்மாவும் தனத்தை பார்த்து தனத்திடம் விசாரிக்கின்றனர். அப்போது தனம் எதுவும் பேசாமல் வெளியே ஆட்டோ நிக்கிறது நான் போறேன் என்று போய்விடுகிறார். தனம் முகம் சரி இல்லையே என்று மீனா டாக்டரிடம் விசாரிக்கிறார்.
அப்போது டாக்டர் அவங்களுக்கு மார்பகத்தில் கட்டி இருக்கிறது ரொம்ப பெருசா இருக்குது அதான் மேமோகிராப் டெஸ்ட் எடுத்துட்டு வர சொல்லி இருக்கிறேன் என்று சொல்ல, அப்படின்னா என்ன டாக்டர் என்று மீனா கேட்க, புற்று நோய் இருக்கிறதா? என்று பார்க்க என்று டாக்டர் சொல்ல மீனா அதிர்ச்சியடைகிறார்.இந்த நிலையில் இந்த பிரச்சனை தான் இனி பாண்டியன் ஸ்டோரில் அடுத்த பூகம்பமாக வெடிக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications