கண்ணனின் கேவலமான செயல்.. மூர்த்திக்கு தெரிய வரும் உண்மை.. நோயில் தவிக்கும் தனம்.. இனி இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர் கன்ஃபார்ம் செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் இனி மீனா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பற்றியும் அதே நேரத்தில் இந்த உண்மை தெரிந்ததும் மூர்த்தியின் நிலை என்ன ஆக போகிறது என்பது பற்றியும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
உணர்வு பூர்வமான கதை திருப்பத்தில் அனைவருக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நெஞ்சு வலியில் இருந்த தனத்திற்கு டெஸ்ட் எடுத்திருந்த நிலையில் அதற்கான ரிசல்ட்டை டாக்டர் படித்து பார்த்து கூற அதைக் கேட்டு மீனா அதிர்ச்சி ஆகிறார். காரணம் டெஸ்ட் ரிப்போர்ட்டில் தனம் புற்றுநோயின் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் இதுவரைக்கும் தனம் யாரிடமும் தனக்கு நெஞ்சு வலி இருக்கிறது என்பதை பெரியதாக காட்டிக் கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது டெஸ்ட் ரிசல்ட் வந்த நிலையில யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ப்ரோமோவில் மீனாவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். ஏற்கனவே
மருத்துவமனைக்கு மீனா தனத்தை கூட்டிட்டு போனது பற்றி ஜீவாவிடம் சொல்லலாமா என்று மீனா நினைத்து பிறகு அதையும் சொல்லாமல் விட்டிருக்கிறார்.

அதனால் இனி மீனா என்ன முடிவெடுக்கப் போகிறார்? என்பது பலரும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் கண்ணன் மீண்டும் பேங்கில் லஞ்சம் வாங்கி இருக்கிறார். அதே நேரத்தில் கண்ணனால் ஜெயிலுக்கு போன அதே மேல் அதிகாரி மீண்டும் பேங்குக்கு வேலைக்கு வந்திருக்கும் நிலையில் கண்ணனை பார்த்து வந்த முதல் நாளே முறைத்துக் கொண்டு போகிறார். இந்த நிலையில் இனி அடுத்ததாக கண்ணனை அவர் மாட்டி விட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் தனத்திற்கு நெஞ்சுவலி என்று சொல்லியே பல மாதங்கள் போய்விட்ட நிலையில் இப்போது டெஸ்ட் எடுத்து அதை சொல்லுவதற்கு ஒரு வாரம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் இனி இதை வைத்து ஒரு வாரம் பீல் பண்ணியபடி இருக்க, அதைத் தொடர்ந்து வீட்டில் இந்த விஷயத்தை சொல்வதற்காக மேலும் ஒரு வாரம் தொடர்ந்து இழுத்து பிறகு சொல்லுவார்கள். அதற்கு அவர்கள் ஒரு வாரம் அதை தொடர்ந்து பீல் பண்ண, அப்படியாக இன்னும் இந்த புற்றுநோய் ட்ராக் வைத்து ஒரு சில மாதங்கள் கதை போய்விடும் என்று ரசிகர்கள் கலாய்த்து கொள்கிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications