லஞ்ச பணத்தை கொடுக்கும் கண்ணன்.. ஐஸ்வர்யாவை அவமானப்படுத்தும் பார்வதி.. திடீர் திருப்பம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தான் வாங்கிய லஞ்ச பணம் 20 ஆயிரத்தை கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கொடுக்கிறார்.
ஐஸ்வர்யா முல்லையின் குழந்தையை போட்டோ எடுத்ததற்காக பார்வதி திட்டுகிறார்.
தனம் இனி குடும்பத்தை பிரியாமல் நீ பார்த்துக் கொள் என்று கதிரிடம் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூன் 28ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் வீட்டில் முல்லையின் குழந்தையை முல்லை, ஐஸ்வர்யா, பார்வதி மூவரும் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முல்லையின் குழந்தையை ஐஸ்வர்யா போட்டோ எடுக்க பார்க்கிறார். அதை பார்த்து கடுப்பான பார்வதி ஐஸ்வர்யாவை திட்டுகிறார்.
போட்டோவை மட்டும் வேற யாருகிட்டயாவது காட்டுன அவ்வளவுதான்... அப்படி செஞ்சா குழந்தைக்கு கண்ணு பட்டுரும்னு மிரட்டுகிறார். அந்த நேரத்தில் மீனாவும் தனமும் வீட்டிற்கு வர முல்லையின் அம்மா பார்வதி எங்க போயிட்டு வரீங்க என்று கேட்க மீனா கோவிலுக்கு போயிட்டு வருகிறோம் என்று சொல்ல, என்ன இந்த நேரத்தில் போயிட்டு வரீங்க என்று கேள்வி கேட்கிறார்.
சும்மா தோனிச்சு அதான் போயிட்டு வருகிறேன் என்று சொல்ல, மீண்டும் மீண்டும் பார்வதி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க கடுப்பான தனம் நான் போறேன் என்று கிளம்பி போகிறார். பிறகு இவர்கள் இருவரும் நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது என்று ஐஸ்வர்யாவும் முல்லையும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மீனாவிடம் நீங்க ரொம்ப டல்லாவே இருக்கீங்க? என்ன மாமா கூட பிரச்சனையா? என்று ஐஸ்வர்யா கேட்க, ஆமாம் என்பது போல மீனா தலையசைக்கிறார். அடுத்த சிறிது நேரத்தில் ஜீவா அந்த வீட்டிற்கு வர ஜீவாவிடமும் ஐஸ்வர்யா என்ன ஆச்சு மாமா உங்களுக்கும் அக்காவுக்கும் சண்டையா? என்று கேட்க எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்துச்சா? என்ன சொல்றீங்க என்று அவர் புரியாமல் ஜீவா கேள்வி கேட்கிறார்.
அடுத்ததாக கண்ணன் வீட்டிற்கு வர ஐஸ்வர்யாவிடம் தான் வாங்கி வைத்த லஞ்சப்பணம் 20,000 கொடுத்து இதை உங்க சித்தி இடம் கொடுத்துவிடு என்று கூறுகிறார். இந்த பணம் எப்படி வந்தது என்று ஐஸ்வர்யா கேட்க, அது வந்து... என்று யோசித்து கொண்டிருக்க, நீ வேற யார்கிட்டயும் கடன் வாங்கிடாத கண்ணா ஏற்கனவே வாங்குன கடனுக்கு நம்ம இப்பவும் பிரச்சனையில் மாட்டிக்கிட்டு இருக்கோம் என்று சொல்ல, இது கடன் வாங்கல நம்ம மண்டபத்துக்கு கொடுத்திருந்த பணம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்.

அதைத் தொடர்ந்து மூர்த்தி வீட்டிற்கு வர கதிர் உடன் மூர்த்தி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த ஊரில் நடந்த ஒரு பிரச்சனையை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் பிரிந்து போய் விட்டார்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் போது தனம் நீதான் நம்ம குடும்பம் பிரிஞ்சிராம பாத்துக்கணும் என்று கதிரிடம் சொல்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சியான கதிர் என்ன ஆச்சு நீங்க எங்க போறீங்க என்று கேட்க, இல்ல நீ தானே இப்பவும் ஜீவாவை நம்ம கூட வந்து சேர வெச்ச அது போல இன்னமும் இந்த குடும்பம் பிரிஞ்சிடாம பாத்துக்கணும்னு சொல்ல வந்தேன் அவ்வளவுதான் என்று கூறுகிறார். மொத்த குடும்பமும் தனத்தின் நடவடிக்கையை பார்த்து சந்தேகப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications