தனம் மீது கோபப்படும் கதிர்.. காய்ச்சலில் தவிக்கும் ஜீவா.. மீனா செய்த செயல்.. வெளிவந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதிரிடம் நான் இல்லனாலும் இந்த குடும்பத்தை நீ பத்திரமா பாத்துக்கணும் என்று சொல்ல கதிர் கோபப்படுகிறார்.
அதே நேரத்தில் ஜீவா காய்ச்சலில் இருந்தாலும் ஜீவாவை விட்டுவிட்டு மீனா தனம் வீட்டிற்கு போவதற்காக கிளம்பி கொண்டிருக்க மீனாவின் அம்மா கோபப்படுகிறார்.
இந்த நிலையில் ஜூன் 29ஆம் தேதிக்கான எபிசோட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மூர்த்தி கடைக்காரர் ஒருவர் மனைவி கேன்சர் நோயால் செத்துப் போயிட்டாங்க என்று சொல்கிறார். இதை கேட்ட தனம் இதே மாதிரி எனக்கு நடந்தால் என்ன பண்ணுவீங்க என்று கேட்க மூர்த்தி கோபப்பட்டு திட்டுகிறார்.
இந்த வீட்ல யாருக்கு என்ன நடந்தாலும் நான் தாங்க மாட்டேன். இதுல உனக்கு வேற நடக்கணுமா? ஏன் தனம் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா என்று திட்டுகிறார். எல்லோரும் சேர்ந்து தனத்தை திட்ட தனம் பிறகு சமாளித்து விடுகிறார் அடுத்த நாள் காலையில் தனம் தனியாக கிச்சனில் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அப்போது தனத்தை கவனித்து கண்ணன் இவரின் நடவடிக்கை வித்தியாசமாக இருக்கே என்று என்னாச்சு என விசாரிக்க, அப்போது தனம் புகை வருது அதான் அழுகிறேன் என்று சொல்ல, கேஸ் அடுப்புல எப்படி புகை வரும் அண்ணி என்று கேட்க, கடுப்பான தனம் கண்ணனை திட்டி விட்டு அந்த இடத்தில் இருந்து அனுப்பி வைக்கிறார்.
அதே நேரத்தில் கதிர் அங்கே வர கண்ணன் அண்ணி தன்னைத் திட்டி அனுப்பியதாக சொல்ல, கதிர் தனத்திடம் பேசலாம் என்று போகிறார். அப்போது தனம் கதிரை திட்டுகிறார். இதனால் கதிர் என்ன ஆச்சு? நீங்க நல்லா தானே இருக்கீங்க? என்று சந்தேகப்பட்டு கேட்க, எல்லோரும் இதைத்தான் கேப்பீங்களா? நான் நல்லா தான் இருக்கேன் என்று சொல்கிறார்.

அதை தொடர்ந்து மீனா குளித்துவிட்டு வந்து தனம் வீட்டிற்கு போவதற்காக ஜீவாவை எழுப்புகிறார் அப்போது ஜீவாவுக்கு காய்ச்சல் இருக்கிறது. பிறகு அவருக்கு பார்த்து மாத்திரை எல்லாம் கொடுத்துவிட்டு தனம் அண்ணி வீட்டுக்கு போக போறேன் என்று சொல்கிறார். அப்போது ஜீவா நேற்றுதானே போனா என்று கேட்க? மீனா இல்லை இன்னைக்கும் போகணும் போல இருக்கு நான் கூட இருந்தா அவங்க கொஞ்சம் தைரியமா இருப்பாங்க என்று சொல்கிறார்.
அதற்கு மீனாவின் அம்மா உனக்கு மாப்பிள்ளையை விட அவங்க வீடுதான் முக்கியமா? என்று திட்டுகிறார். தொடர்ந்து மீனாவும் தனமும் ஹாஸ்பிடலுக்கு போகும்போது அங்கே டாக்டர் தனத்திற்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். அதற்கு முதல் குழந்தையை சிசேரியன் செய்து வெளியில் எடுக்கணும் வீட்டில சொல்லிடுங்க உடனடியாக ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும் என்று சொல்கிறார். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications