வீட்டுக்குள்ளே நடக்கும் சூழ்ச்சி..கதறி அழுத தனம்.. கடுப்பான முல்லை.. பரபரப்பான திருப்பங்கள்
சென்னை: தனத்தை வீட்டை விட்டு போக சொன்ன முல்லை அம்மாவால் தனம் பீல் பண்ணி அழ, மூர்த்தியும் வீட்டை விட்டு கிளம்ப ரெடி ஆகிறார்.
தனம் மற்றும் மூர்த்தி எடுத்த முடிவை கேட்டு கதிரும் முல்லையும் அதிர்ச்சியாகின்றனர்.
கதிருக்கு முல்லையின் அம்மா மீது சந்தேகம் வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே 16ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் தனம் மூர்த்திக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்க கதிரும் முல்லையும் உள்ளே வந்து படுக்கும்படி கூறுகின்றனர். நான் வரவில்லை என்றும் நீ உள்ளே போய் படுத்துக்கோ என்று கதிரிடம் தனம் கூறுகிறார்.
கதிரும் முல்லையும் எவ்வளவு கூறியும் உள்ளே வந்து படுப்பதற்கு தனம் மறுத்து விட கதிருக்கு தனம் நடவடிக்கையின் மீது சந்தேகம் வருகிறது. தனம் அண்ணி இப்படி சொல்வதற்கு உங்க அம்மா தான் காரணமா? என்று முல்லை இடம் கேட்க எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் அக்கா முகத்தில் எந்த வருத்தமும் இருந்த மாதிரி இல்லையே என்று முல்லையும் கூறுகிறார்.
அப்போது முல்லை அம்மா அவளுக்கும் மாப்பிள்ளை கூட பேசணும் என்று இருக்கும்ல, அதான் அவ அப்படி சொல்றா, அவ என்ன பக்கத்து வீட்டிலேயா போய் தூங்குறா? இந்த ரூமுக்குலதான தூங்குறா என்று கூற, அதற்கு என்னமோ சொல்ற நீ, சரி நான் உள்ள போய் படுக்கிறேன் என்று முல்லையும் உள்ளே கிளம்பி சென்று லிட மீண்டும் கதிரும் முல்லையும் அண்ணி சொன்னது உண்மையா இருக்கணும்னு நினைக்கிறாயா என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு திண்ணையில் உட்கார்ந்தபடி தனம் முல்லையின் அம்மா பேசியதை நினைத்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அப்போது வரும் மூர்த்தி என்ன ஆச்சு ஏன் வெளியே வந்திருக்கிறா? என்று கேட்டபடி எதற்காக இப்படி அழுதுகிட்டு இருக்கா என்று கேட்க, நான் அம்மா வீட்டுக்கு போயிடுவேன் என்று தனம் சொன்னதை கேட்டு மூர்த்தியும் கண்கலங்கி அழுகிறார்.

பிறகு எனக்கு இங்க இருக்குறதுக்கே ஒரு மாதிரி இருக்கு நாம இங்க வந்து இருக்கிறதுக்கு சித்தி என்னை திட்டுறாங்க, உங்க அம்மா வீட்டுல போய் இருக்க வேண்டியதுதானே என்று சித்தி வெளிப்படையாகவே கேக்குறாங்க என்று சொல்ல, பிறகு காலையில் நாம போயிடலாம் என்று மூர்த்தி தனத்தை சமாதானம் செய்கிறார்.
அடுத்த நாள் காலையில் முல்லை எழுந்து வெளியே வந்ததும் தனமும் மூர்த்தியும் நாங்க அம்மா வீட்டுக்கு போறோம் எனக்கு பாண்டியன் பிறக்கும் போது தான் நான் அம்மா வீட்டுக்கு போகல, இப்போ அம்மா வீட்டுக்கு போறேன். உனக்கு தான் பாத்துக்க உங்க அம்மா இருக்காங்களா, என்று சொல்ல, என்ன நீங்க திடீர்னு இப்படி கிளம்புறேன்னு சொல்றீங்க, இதை என்னால ஏத்துக்க முடியல என்று கதிரும் முல்லையும் கேள்வி மேல் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications