பிரசாந்தால் ஜீவாவை அவமானப்படுத்தும் மாமனார்.. மூர்த்தி கொடுத்த பதிலடி.. உணர்வு பூர்வமான தருணம்
சென்னை: ஜீவா மூர்த்தியிடம் பேச போக மூர்த்தி இவர் யார் என்று எனக்கு தெரியாது என்று நடுரோட்டில் அவமானப்படுத்துகிறார்.
பிரசாந்த் முன்னிலையில் ஜனார்த்தனன் எடுத்த முடிவை பார்த்து ஜீவா கோவம் ஆகிறார்.
ஜீவா பீல் பண்ணுவதை பார்த்து மீனா கோபமாகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே 20 ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் மூர்த்தி இளநீர் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து ஜீவா பேசப் போகிறார். அப்போது கடைக்காரர் உங்க தம்பி வருகிறார் என்று சொல்ல, மூர்த்தி ஜனார்த்தனன் சொன்னதை எல்லாம் நினைத்து பார்த்து யார் அண்ணன் யாரும் எனக்கு தம்பி இல்லை என்று குத்தி காட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
இதனால் கவலையான ஜீவா மீனாவிடம் போய் நடந்ததை சொல்லி ஃபீல் பண்ண மீனா ஆறுதல் படுத்துகிறார். அடுத்ததாக ஜனார்த்தனன் தனது இரண்டாவது மாப்பிள்ளை பிரசாந்த் வந்து இருப்பதால் குடித்துக் கொண்டிருக்கிறார். அங்கு செல்லும் ஜீவாவையும் வற்புறுத்தி குடிக்க வைக்கின்றனர். ஜீவா குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பான மீனா தன்னுடைய அப்பாவை கூப்பிட்டு திட்டுகிறார்.
அடுத்த நாள் காலையில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் எண்ணெய் பிசினஸ் செய்வது குறித்து ஜீவாவிடமும் பிரசாந்த் இடமும் கேட்க ஓகே இது நல்ல ஐடியா என்று சொல்லி பிரசாத் விளக்கம் கொடுப்பதை பார்த்த ஜனார்த்தனன் இந்த பிசினஸ் பண்ணிக்குவேன் என்று பிரசாந்துக்கு ஆதரவாக பேசியதோடு ஜீவாவை மட்டம் தட்டியும் பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து பிரசாந்த் மாமனாரிடம் கயலை எங்க சேர்க்க போறீங்க என்று கேட்க அது திருச்சியில் நிறைய ஸ்கூல் இருக்கு அங்க தான் கொண்டு சேர்க்கணும் என்று சொல்ல, மீனா எப்படி டெய்லி கயல் அங்கே இருந்து இங்க வந்து போயிட்டு இருப்பாளா? என்று சொல்ல, இல்ல உங்களுக்கும் அங்கே தான் வீடு பார்த்து வைக்கலாம்னு நினைச்சுகிட்டு இருக்கேன் என்று சொல்ல கோபமான ஜீவா அந்த இடத்தை விட்டு செல்கிறார்.
இதனால் கோபமான மீனா ஜீவாவுக்கு பிடிக்காத எதையும் பண்ணாதீங்க என்று சொல்லி விட்டு கிளம்புகிறார். பிறகு ஜீவா தன்னுடைய மாமனார் மாமியார் இருக்கும்போது மாமனாரிடம் போய் பேசுகிறார். அப்போது மீனாவின் அம்மா ஓடி சென்று மீனாவிடம் மாப்பிள்ளை அப்பாவிடம் சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறார் என்று சொல்ல மீனா அங்கே வருகிறார்.
அப்போது பிசினஸை என்னை பார்த்துக்க சொன்னீங்க. ஆனால் எந்த முடிவும் நான் எடுக்க முடிவதில்லை. இப்போ என்னுடைய பொண்ணு விஷயத்துலயாவது என்னை அப்பாவாக இருக்க விடுங்க. நான் தான் என் பொண்ணு விஷயத்துல முடிவெடுப்பேன் என்று சொல்லிக்கொண்டு கிளம்ப, மீனாவும் ஜீவாவுக்கு சப்போர்ட்டாக பேசிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications