கண்ணனை திட்டும் முல்லை..கதறி அழுத மூர்த்தி..மொத்த குடும்பமும் செய்த செயல்.. உணர்வுபூர்வமான தருணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லை கதிரை பார்க்க வேண்டும் என்று அழுது கொண்டிருக்க முல்லையின் அம்மா திட்டுகிறார்.

ஜீவாவும் மூர்த்தியும் ஒன்று சேர்ந்து கதிரை வெளியே எடுத்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில் வைத்து முல்லை கண்ணனை அவமானப்படுத்தி திட்டி அனுப்புகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே 29ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஜீவாவும், மூர்த்தியும் ஒன்றாக பைக்கில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவா, மூர்த்திக்கு ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கின்றார்.

Pandian Stores serial 2023 May 29th promo and Episode Highlights

நீங்க கவலைப்படாதீங்க எப்படியாவது கண்ணனை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று ஜீவா சொல்லிக் கொண்டிருக்க எப்படியாவது இன்னைக்கு வெளியே எடுத்து ஆகணும் என்று மூர்த்தியும் பேசிக் கொண்டிருக்க, கண்ணனை பற்றி மூர்த்தி கோபமாக திட்டுகிறார். நல்லா சம்பாதிக்கிறார் அந்த பணத்தை எப்படி எல்லாம் செலவு பண்ணலாம்னு தெரியாம இப்படி கடன் வாங்கிட்டு பிரச்சனையை இழுத்து வச்சிருக்கான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

ஜீவா மூர்த்தியிடம் கவலைப்படாதீங்க எல்லாம் சரியாயிடும் என்று சொல்லிக் கொண்டிருக்க, இந்த கண்ணனால தானே இப்போ கதிர் உள்ளே இருக்கான் என்று மூர்த்தி கண்கலங்கி அழுதபடியே சொல்லிக் கொண்டிருக்க இன்னும் கொஞ்ச நேரம் தான் நாம அந்த பேங்க் ஆபீஸர் கிட்ட பேசுவோம் அவங்களும் தான் முதலில் கண்ணனை அடிச்சு இருக்காங்கல்ல என்று சொல்ல கண்ணனுக்கு கண்டிப்பா அடி விழுந்திருக்கும் தப்பு இல்லை என்று மூர்த்தி சொல்ல நீங்க வெளியே மட்டும் தான் இப்படி பேசுறீங்க மனசுக்குள்ள உங்களுக்கு கண்ணை மேல பாசம் இருக்கு என்று ஜீவா பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் வீட்டில் முல்லை அழுது கொண்டே நான் இப்போ உடனே கதிரை பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, எப்படி கூட்டிட்டு வர்றது என்று முல்லையின் அம்மா திட்டுகிறார். நீ போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி போய் நிற்க போறியா என்று முல்லை அம்மா திட்ட நான் இப்போ போய் ஆகவேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். மீனாவும் சமாதானம் படுத்த நான் இப்போ உடனே அவரை பாக்கணும் என்று அழுது கொண்டிருக்கிறார்.

எல்லாரும் ஆறுதல் கூறியும் கேட்காமல் முல்லை அப்பாவோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். போலீஸ் ஸ்டேஷனில் அழுது கொண்டு இருக்க அங்கு போலீஸ்காரர்கள் திட்டுகிறார்கள். ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ஒவ்வொருத்தரா வந்துகிட்டே இருக்கீங்களே கதிரை பார்க்க விட முடியாது என்று போலீஸ்காரர்கள் சொல்ல கெஞ்சி கூத்தாடி கதிரிடம் போய் முல்லை பேச மத்தவங்களுக்கு உதவி செய்ய போயி தானே நமக்கு இந்த நிலைமை என்று கேட்கிறார்.

எனக்கு நான் உள்ளே இருக்குறதுக்கு கூட கவலையே இல்ல ஆனா நீ இப்படி அழுவதுதான் கஷ்டமா இருக்கு என்று கதிர் முல்லை இடம் சொல்ல, பிறகு இப்படி நீ அழுதுட்டு இருந்தா நம்ம குழந்தை பார்த்து என்ன நினைக்கும்? நீ தைரியமா இரு என்று சொல்ல போலீஸ்காரர்கள் கிளம்புங்க என்று வெளியே அனுப்பி வைக்கின்றனர்.

அப்போ கண்ணன் முல்லையிடம் என்ன மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்க உனக்காக மாமா கிட்ட இவரு என்ன எல்லாம் பேசினாரு தெரியுமா? ஆனா இப்ப நீ அவரையே உள்ளே கொண்டுவர வச்சுட்ட என்று சொல்ல கண்ணன் அழுது கொண்டே இருக்கிறார்.

அடுத்ததாக ஜீவா, மூர்த்தி, தனத்தின் அண்ணன் மூவரும் பேங்க் ஆபீசர்களிடம் வந்து பேச அவர்கள் அடிபட்டு கையில் கட்டோடு இருக்கும்போது நாங்கள் கேஸை வாபஸ் வாங்க மாட்டோம் என்று முதலில் சொல்கின்றனர். பிறகு சமாதானப்படுத்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்றால் மூணே முக்கால் லட்சம் வேண்டும் என்று சொல்ல அனைவரும் அசிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+