அதிர்ச்சி கொடுத்த பேங்க் ஆபிஸர்ஸ்..முல்லை அம்மா கேட்ட கேள்வி..கண்கலங்கும் மீனா..பரபரப்பான திருப்பம்
சென்னை: 5 லட்சம் ரூபாய் பணம் கட்டினால் நாங்கள் கேசை வாபஸ் வாங்கி விடுகிறோம் என்று பேங்க் ஆபீஸர் கூறுகின்றனர்.
பணத்தை நாங்கள் கட்டுகிறோம் என்று மூர்த்தியும் ஜீவாவும் கூறுகின்றனர்.
முல்லையின் அம்மா மொத்த குடும்பத்தையும் திட்டி இன்னைக்கு என் மாப்பிள்ளை வெளியே வந்தாக வேண்டும் என்று கூறுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 30ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பேங்க் ஆபீஸர்களிடம் ஜீவா, மூர்த்தி எவ்வளவு பணம் கட்டணுமோ சொல்லுங்க நாங்க கட்டிருதோம் என்று கேட்கின்றனர். அதற்கு அவர்கள் மூணே கால் லட்சம் கடன் வாங்கி இருக்கிறாங்க இப்போ இவங்கள உங்க தம்பி அடிச்சிருக்காங்க அதனால அஞ்சு லட்சம் கட்டணம் என்று சொல்கின்றனர்.
பணத்தை கட்டினால் தான் நாங்கள் கேஸை வாபஸ் வாங்க முடியும் என்று சொன்னதால் ஜீவாவும் மூர்த்தியும் நாங்கள் கட்டுகிறோம் என்று கூறிவிட்டு வெளியே வருகின்றனர். வெளியே வந்த மூர்த்தி கண்ணனை திட்டிக் கொண்டிருக்கிறார். வீட்டு வாடகை கூட கிடையாது. ஆனால் எப்படி இவ்வளவு பணம் செலவழிச்சு வச்சிருக்காங்க பாத்தியா என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பிறகு இவ்வளவு பணத்துக்கு எப்படி ரெடி பண்ணுவது? இன்னைக்கு பேங்க் கூட கிடையாது பணமும் மொத்தமா எடுக்க முடியாது என்று கூறிக்கொண்டு சரி பிறகு ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் ரெடி பண்ணுவோம் என்று கிளம்பி போகின்றனர். மூர்த்தி ஒரு நபரிடம் போன் பண்ணி பணம் வேண்டும் என்று கேட்க அவர் இரண்டு லட்சம் தருகிறேன் என்று கூறுகிறார்.
பிறகு மூர்த்தி ஒவ்வொருத்தருக்காக கால் பண்ணி கேட்க எல்லோரும் பணம் இல்லை என்று சொல்கின்றனர். ஜீவா முல்லை வீட்டுக்கு வர முல்லை மாமா அவங்க வந்துட்டாங்களா என்று வீட்டு வாசலில் ஓடி சென்று பார்த்துவிட்டு வருகிறார். இல்லை என்றதும் அழுது கொண்டே இருக்கின்றார். பிறகு ஜீவா போலீஸ் ஸ்டேஷனிலும் பேங்க் ஆபீஸர்கள் சொன்னதையும் சொல்கின்றார்.

மொத்தமாக அஞ்சு லட்சம் வேணும் என்று ஜீவா சொல்ல முல்லையின் அம்மா திட்டுகிறார். இந்த மொத்த பணத்தையும் கண்ணன் கொடுக்க வேண்டியதுதானே அவன் கடனை வாங்கி வச்சிட்டு சந்தோசமா இருக்கான். நாங்க கஷ்டப்படணுமா? என்று திட்டுகிறார். பிறகு ஜீவா மீனாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு போகிறார். ஜீவாவும் ஒவ்வொருத்தருக்காக போன் பண்ணி பணம் இருக்கா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜீவாவின் ஒரு நண்பன் மட்டும் 50 ஆயிரம் பணம் இருக்கு என்று சொல்ல ஜீவா சந்தோஷப்பட்டு அது போதும் கொடு என்று கேட்டுக்கொண்டு பிறகு இதே போல வேற யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம் என்று கூறிக் கொண்டிருக்க மீனா பீல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications