ஜீவாவை அவமானப்படுத்தும் மாமனார்..சப்போர்ட் செய்யும் மீனா..திட்டும் மூர்த்தி.. பரபரப்பான திருப்பங்கள்
சென்னை: தனம்,முல்லையை வீட்டுக்கு அனுப்பி வைத்த ஐஸ்வர்யாவின் சித்தி ஐஸ்வர்யாவிடம் அவர்களைப் பற்றி தவறாக பேசுகிறார்.
கடை விஷயத்தில் எடுத்த முடிவு பற்றி ஜனார்த்தனன் கேள்வி கேட்க ஜீவா அவமானப்படுகிறார்.
ஐஸ்வர்யாவிற்கு உதவி செய்ததை குறித்து மூர்த்தி அனைவரையும் திட்டுகிறார்..

பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே மூன்றாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் மருத்துவமனையில் இருந்து தனம் முல்லையை அனுப்பி வைத்துவிட்ட ஐஸ்வர்யாவின் சித்தி, ஐஸ்வர்யாவிடம் பார்த்தியா எல்லோரும் வந்து உன்னை பாக்குற மாதிரி பாத்துட்டு வீட்டுக்கு வேலை இருக்குன்னு கிளம்பி போயிட்டாங்க. என்னதான் திட்டினாலும் நான் தான் பார்த்து ஆகணும் என்று கூறுகிறார்.
அதைக் கேட்டு ஐஸ்வர்யாவும் நம்பி விடுகிறார். பிறகு மீனாவின் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது காலை டிபனுக்காக சப்பாத்தி வைத்திருக்கின்றனர். அது ஜீவாவுக்கு பிடிக்காது, அங்க வீட்டில் இட்லி, தோசை என்று தான் சாப்பிடுவாங்க ஆனால் ஜீவாவுக்கு சாதம் தான் பிடிக்கும் என்று மீனா சொல்லிக் கொண்டிருக்க, ஜனார்த்தன எனக்கு உடம்பு சரியில்லை என்பதால் இப்படி சாப்பாடு ரெடி பண்ணி இருக்காங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று ஜீவாவிடம் கூறுகிறார்.
பிறகு சூப்பர் மார்க்கெட்டுக்கு அரிசி சப்ளை செய்பவரிடம் இருந்து நீங்க ஆளை மாத்திட்டீங்களா? என்று கேட்க, ஆமா நம்ம முன்பு வாங்கிக் கொண்டிருந்த நபரிடம் அரிசி நல்லா இல்ல, நிறைய கல்லு இருக்கு, அதனால பாண்டியன் ஸ்டோருக்கு சப்ளை செய்யும் நபரிடம் அரிசி வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். கஸ்டமர் கம்ப்ளைன்ட் பண்ணும் போது எனக்கு வேற முடிவு எடுக்கணும்னு தோணுச்சு என்று சொல்ல, கஸ்டமர் சொல்றதெல்லாம் இருக்கட்டும் நமக்குன்னு ஒரு பழக்க வழக்கம் இருக்கு என்று ஜனார்த்தனன் கூறுகிறார்.

பிறகு தனமும் முல்லையும் பேசிக் கொண்டிருக்க அப்போது மூர்த்தி வருகிறார். கதிரை எங்கே என்று கேட்க, ஐஸ்வர்யாவுக்கு நடந்ததை பற்றி கூறி மருத்துவமனையில் கதிர் இருக்கிறார் என்று முல்லை சொல்ல, ஏன் இந்த பொண்ணு இப்படி இருக்கிறது என்று மூர்த்தி திட்டுகிறார். பிறகு இதே வாயால நீ யாரு? எங்களுக்கு என்ன பண்ணுன? என்று கேட்பாங்க, நாம எல்லாரும் அவங்க நல்லா இருக்கணும்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா அவங்க இப்படி பண்ணிட்டு இருக்காங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக மீனாவிடம் ஜீவா கயல் எங்கே என்று கேட்க, கயல் அப்பாவிடம் இருக்கா, அவங்க தான் நம்ம கிட்ட கொடுக்கவே மாட்டாங்க. எப்பவும் கையில ரெண்டு பேரும் அப்பா அம்மா மாத்தி மாத்தி வச்சுட்டு இருக்காங்க என்று சொல்லி, அப்பா சூப்பர் மார்க்கெட் விஷயத்தில் உன்கிட்ட பேசும் போது உனக்கு வருத்தமா இருந்துச்சா? ஏன்னா மீனா கேட்க கடைக்கு வர கஸ்டமர் நம்மகிட்ட கம்ப்ளைன்ட் பண்றாங்க, கஸ்டமர் நம்பி தானே நாம இருக்கிறோம். குவாலிட்டி நல்லா இல்லன்னா நம்ம மாத்தி தான ஆகணும். ஆனா கடைசி வரைக்கும் உங்க அப்பா என்னை நம்பவே இல்லை என்று சொல்கிறார்.
அதற்கு மீனா உனக்கு மூர்த்தி மாமாவிடம் கேள்வி கேட்டு அவசரப்பட்டுட்டோமோ என்று தோணுச்சா? எனக்கு எங்க அப்பா பேசும்போது மூர்த்தி மாமா ஞாபகம் வந்துச்சு என்று சொல்லிக் கொண்டு இருக்க, நான் கம்பேர் பண்ணி பார்க்கல என்று ஜீவா கூறுகிறார்.
பிறகு ஹாஸ்பிடலில் கண்ணனும் கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது நர்ஸ் வந்து பில்லை கட்டும்படி கூறுகிறார். அப்போது கையில் பணம் இல்லை வீட்டில் இருக்கிறது நான் மொத்தமா சேர்த்து கட்டுகிறேன் என்று கதிர் சொல்ல, இல்ல இன்று உள்ளதை இன்று கட்ட வேண்டும் என்று சொன்னதை கேட்டு கதிர் நான் கட்டுகிறேன் என்று பணத்தை கட்டி முடிக்கிறார்.
அடுத்த நாள் காலையில் ஜீவா மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்கு கிளம்புகிறார் அப்போது நீங்க எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் என்கிட்ட கேட்டுட்டு எடுங்க. அது உங்க சூப்பர் மார்க்கெட் தான் ஆனாலும் ஒரு பெரியவங்க என்கிற பெயரில் நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கலந்து பேசிட்டு முடிவு எடுங்க என்று ஜனார்த்தனன் சொல்ல ஜீவாவின் முகம் மாரி, பிறகு சரி என்று கிளம்புகிறார். இதை பார்த்த மீனா எதுக்காக நீங்க இப்படி ஜீவா கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க என்று கோபப்பட்டு திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications