குடும்பத்தோடு சேர்வது பற்றி பேசிய கண்ணன்..திட்டிய மூர்த்தி..கதிர் சொல்லும் பொய்..திடீர் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா அடுத்தடுத்து செய்யும் செயல்களால் கடுப்பாகி கண்ணன் பழையபடி வீட்டிலேயே இருந்திருக்கலாம் என கூறுகிறார்.

கண்ணனுக்கு உதவி செய்ததால் கடனில் இருக்கும் கதிர் முக்கிய முடிவு எடுக்கிறார்.

ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் youtube வீடியோ போடுவதை பார்த்து மூர்த்தி திட்டுகிறார்.

Pandian Stores serial 2023 May 8th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே எட்டாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் மூர்த்தி பணத்தை கொண்டு வந்து தனத்திடம் கொடுக்க அப்போது வரும் கதிர் தன்னால் கொஞ்ச நாளைக்கு பணம் தர முடியாது என்று சொல்கிறார்.

இதனால் ஹோட்டல் நஷ்டத்தில் போகிறதா என்று மூர்த்தி விசாரிக்க இல்லை கொஞ்சம் செலவு இருக்கிறது என்று கதிர் சமாளிக்க, முல்லை பணத்தை எடுத்து ஐஸ்வர்யா கண்ணனுக்கு செலவழித்து விட்டீர்களா? என்று கேட்கிறார். அதற்கு கதிர் ஆமா என்று சொல்ல, இதை அண்ணன் கிட்ட சொல்லி இருக்கலாம். ஏற்கனவே இதை சொல்லாததால் தானே பிரச்சனை என்று முல்லை சொல்ல கதிர் சமாளிக்கிறார்.

பிறகு ஃபோனையே பாத்துட்டு இருக்கும் ஐஸ்வர்யா கண்ணனை வேலை செய்ய சொல்லிக்கொண்டே இருக்கிறார். முதலில் தண்ணி எடுத்துட்டு வர சொல்கிறார். பிறகு மாத்திரை, பிறகு போனுக்கு சார்ஜ் போட சொல்லி என ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருக்க கண்ணன் கடுப்பாகி வெளியே சென்று விடுகிறார்.

Pandian Stores serial 2023 May 8th promo and Episode Highlights

அதே நேரத்தில் கதிர் முல்லையிடம் கண்ணன் ஹாஸ்பிடலில் பட்டப்பாடை சொல்ல, முல்லை கோபப்பட்டு ஐஸ்வர்யாவை திட்டுகிறார். ஐஸ்வர்யா செய்து வைத்திருக்கிற வேலைய பாருங்க இப்படி வரும் பணத்தில் எல்லாத்தையும் செலவழிச்சுக்கிட்டு இருந்தா எப்படி என்று முல்லை திட்டிக் கொண்டிருக்க பிறகு கதிர் முல்லையை சமாதானப்படுத்தி விட்டு கிளம்புகிறார்.

ஐஸ்வர்யா கண்ணனை நீ வேலைக்கு நாளைக்கு போறியா என்று கேட்க ஆமாம் என்று கண்ணன் சொல்ல நீயும் போனால் நான் தனியா இருக்கணும் என்று சொல்ல கண்ணன் பேசாம அண்ணன் வீட்டிலேயே இருந்திருக்கலாம். என்னை நீ இப்படி வேலை வாங்கிட்டு இருந்திருக்க மாட்ட, தனியாவும் இருந்திருக்க தேவையில்லை என்று சொல்ல ஐஸ்வர்யா கோபப்பட்டு கண்ணனை திட்டி விட்டு தூங்குகிறார்.

Pandian Stores serial 2023 May 8th promo and Episode Highlights

பிறகு மூர்த்தி எல்லோரும் வீட்டில் இருக்கும்போது ஐஸ்வர்யாவும் கண்ணனும் youtube சேனல் ஆரம்பித்த விஷயத்தை பற்றி கேட்கிறார். அதோடு ஐஸ்வர்யா ஹாஸ்பிடல் இருந்துச்சாமே என்று எல்லோரும் வந்து என்ன கேட்கிறாங்க, வீட்டு விஷயத்தை அதுல சொல்றது நல்லாவா இருக்கு உடனடியா நிறுத்தச் சொல்லுங்க என்று கோபப்பட்டு திட்ட, கதிர் இதை பத்தி கண்ணன் கிட்ட பேசுவதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+