கதிரை அவமானப்படுத்தும் ஐஸ்வர்யா..சண்டையிடும் முல்லை.. கண்ணன் எடுக்க போகும் முடிவு..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூர்த்தி இனி வீட்டில் நடப்பதை வீடியோவாக வெளியிடக்கூடாது என்று சொன்னதை கதிர் ஐஸ்வர்யாவிடம் வந்து சொல்கிறார்.

மூர்த்தி சொன்னதையெல்லாம் எங்களால் கேட்க முடியாது என்று ஐஸ்வர்யா கதிரை திட்டுகிறார்.

அண்ணன் சொன்னால் இனி வீடியோ போட வேண்டாம் என்று கண்ணன் கூற ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார்.

Pandian Stores serial 2023 May 9th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே ஒன்பதாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் மூர்த்தி இனி ஹாஸ்பிடல் இருப்பது போன்றும், வீட்டில் என்ன நடப்பது என்பதை எல்லாம் வீடியோவில் போட வேண்டாம் என்று ஐஸ்வர்யா கண்ணனிடம் சொல்ல சொல்லி கதிரிடம் கூறிவிட்டு கிளம்புகிறார்.

கதிர் நான் போய் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சொல்ல, அதற்கு முல்லை நீங்க கண்ணன் வீட்டுக்கு போக தான் போறீங்களா? அங்க ஐஸ்வர்யாவுக்கு யாருக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்னு எதுவும் தெரியாது என்று சொல்ல, இப்படி சொல்றதெல்லாம் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காது அதனால நீ கண்ணன் கிட்டயே பேசு என்று தனமும் சொல்லுகிறார்

பிறகு கதிரோடு நானும் வருகிறேன் என்று முல்லை கிளம்ப, நீ எதற்கு அங்கே என்று கதிர் கேட்க, ஐஸ்வர்யா ஏதாவது சொன்னா பதில் கொடுக்க வேண்டாமா? அதுக்காக நானும் வாரேன் என்று கிளம்ப, தனம் பாத்தியா இவ வேற புருஷனை யாராவது ஏதாவது சொல்லிட்டா என்று சண்டைக்கு கிளம்புறா பாரு என்று கலாய்த்து விட்டு இருவரையும் அனுப்பி வைக்கிறார்.

பிறகு ஐஸ்வர்யா வீட்டில் தூங்கிக் கொண்டிருக்க கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு டீயை கொடுத்து எழுப்பி விட, எனக்கு தலை வலிச்சிது அதான் அப்படியே படுத்துட்டேன் என்று சொல்ல, அப்போ என்ன சாப்பாடு செய்ய என்று கண்ணன் கேட்க, வெளியே இன்னைக்கு சாப்பாடு வாங்கிக்கலாம் என்று ஐஸ்வர்யா சொல்ல, வெளியே சாப்பாடு வாங்கினா பணம் அதிகமாயிடும் என்று நான் தோசை ஊத்தி உனக்கு சட்னி பண்ணி தருகிறேன் என்று கண்ணன் சொல்கிறார்.

பிறகு வழக்கம்போல தங்களுடைய youtube சேனலுக்கு வீடியோ ஐஸ்வர்யா எடுக்க, கண்ணன் அதில் நான் என்னுடைய மனைவிக்கு டேஸ்டான ஒரு சட்னி செய்யப் போகிறேன் என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது கதிரும் முல்லையும் வீட்டிற்கு வருகின்றனர். அண்ணன் சத்தம் கேட்கிறது என்று வந்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் கதிர் முல்லையை வரவேற்கின்றனர்.

பிறகு மூர்த்தி வீடியோ போடுவது பற்றி பேசியதை குறித்து கதிர் சொல்ல, அண்ணன் எங்க வீடியோ எல்லாம் பாக்குதா என்று கண்ணன் கேட்க ஆமா நீங்க ஹாஸ்பிடல்ல வீடியோ போட்டது சுத்தமா மாமாவுக்கு எதுவும் பிடிக்கலை என்று முல்லை சொல்ல, அதற்கு ஐஸ்வர்யா நீங்க எல்லாம் சொல்லி புரிய வைக்கலாம்ல என்று சொல்ல, அவங்களுக்கு இது சுத்தமா பிடிக்கல என கதிர் பதில் சொல்ல, அதுக்கு நாங்க என்ன மாமா பண்ண என்று ஐஸ்வர்யா பதில் கொடுக்கிறார்.

Pandian Stores serial 2023 May 9th promo and Episode Highlights

பிறகு வீட்டில் நடக்கிற விஷயம் எல்லாம் அடுத்தவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று மூர்த்தி அண்ணா நினைக்கிறாங்க என்று சொல்லி, நான் இங்க ரெண்டு மூணு தடவை வந்து இருக்கேன் இல்ல, அதனால என் மூலமா சொல்ல சொல்லி அனுப்புனாரு என்று கதிர் சொல்ல, நாங்க தான் அங்கு இருந்து வந்துட்டோம்ல பிறகு நாங்க ஏதாவது பண்ணிட்டு போறோம் அதுல என்ன வந்துட்டு அவங்களுக்கு எதுக்காக இப்படி பண்றாங்க என்று ஐஸ்வர்யா திட்டுகிறார்.

இதனால் கடுப்பான முல்லை நீங்க வீட்டை விட்டு கிளம்பி வந்துட்டா அப்போ எல்லாம் முடிஞ்சிடுச்சா? எல்லாம் உங்களால தனியா பார்த்துக்க முடிஞ்சுதா? உங்களுக்கு ஏதாவதுனா எங்களுக்கு தானே போன் பண்ணுனீங்க. அப்ப மட்டும் உங்களுக்கு நாங்க வேணுமா? நீ சேனல் வச்சுக்க எதுவும் வச்சுக்க பெரிய மாமா சொல்ல சொன்னாங்க அதான் நாங்க சொன்னோம் என்று முல்லை திட்டுகிறார்.

அதற்கு ஐஸ்வர்யா இதுல என்ன திமிரு இருக்கு என்று கேள்வி கேட்க, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? யாராவது மாசமா இருக்கும்போது டான்ஸ் ஆடுவாங்களா? பேமிலி போட்டோ கூட விட்டு வைக்கிறது இல்லை. இது எங்க அண்ணே, இது எங்க அண்ணின்னு எல்லார் போட்டோவையும் போட்டு காட்டுவீங்க, இதெல்லாம் பத்தாதுன்னு ஹாஸ்பிடல் ரூம் வரைக்கும் காட்டணுமா?

நீங்க சமைக்கிறது அப்படின்னு ஏதாவது திறமையான விஷயத்தை காட்டுனா எல்லாரும் பாராட்டுவாங்க ஆனா அதை விட்டுட்டு நீங்க அடுத்தடுத்து பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கணுமா? என்று திட்டிவிட்டு கதிரை கூட்டிக்கொண்டு காரில் வரும் போதும் கதிர் இப்படி கோபப்படாதே என்று சொல்ல, அன்னைக்கு மட்டும் நிக்க வச்சு எல்லார்கிட்டயும் கேள்வி கேட்டா ஆனா இப்ப இப்படி பண்ணலாமா என்று மேலும் திட்டிக் கொண்டே வருகிறார்.

அடுத்ததாக வீட்டில் ஐஸ்வர்யா நாம என்ன பண்ணா இவங்களுக்கு என்ன என்று மூர்த்தியை திட்டியபடி, கதிர் மாமா வேற உங்க அண்ணனுக்கு தான் சப்போர்ட் பண்றாங்க. முல்லை பார்த்தியா எப்படி எல்லாம் திட்டிட்டு போறாங்க என்று, இவங்க எதுக்கு நம்ம வீடியோ போட வேண்டாம் என்று சொல்றாங்க என்று கேட்க, கண்ணன் அண்ணன் வேண்டாம்னு சொல்லிட்டா நம்ம விட்டுருவோம். தெரிஞ்சவங்க யாராவது பார்த்துட்டு அண்ணன் கிட்ட கேள்வி கேட்கும் போது அவங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும் என்று சொல்லி சேனல்ல எடுத்துரு என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+