பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விலாசினியா இது? குழந்தையின் பெயரால் கிளம்பிய சர்ச்சை.. சிரிப்பால் பதில்!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விலாசினியின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தொகுப்பாளர் ஆதவன் உடன் இவருக்கு இரண்டாவது கல்யாணம் நடந்துவிட்டதாக தகவல்கள் பரவி வந்தது, பின்னர் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அவர் குழந்தையோடு வெளியிட்ட வீடியோ அதிகமாக பேசப்படுகிறது.

விலாசினியின் விளக்கம்
முதலில், விலாசினி மற்றும் ஆதவன் இணைந்து குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு, இருவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், அந்த குழந்தை இவர்களுடையது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரிதாக பரவிய நிலையில், விலாசினி தனது இன்ஸ்டாகிராம் லைவில் "எனக்கு இரண்டாவது கல்யாணம் ஆகவில்லை" என்று தெளிவுபடுத்தினார். இதனால் சர்ச்சை அடங்கி இருந்தது.

புதிய வீடியோ
ஆனால், இப்போது விலாசினி வெளியிட்ட புதிய வீடியோ மீண்டும் இந்த விவகாரத்தை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. அந்த வீடியோவில் தனது குழந்தையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ள அவர், குழந்தைக்கு "மீரா ஆதவன்" என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவே தற்போது சமூக வலைதளங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
குழந்தையின் பெயர்
இந்த வீடியோவில் கர்ப்ப காலத்தில் எடுத்த ஸ்கேன் வீடியோஸ், பிரசவ நேரத்தில் ட்ரீட்மென்ட் எடுக்கும் புகைப்படங்கள், மற்றும் குழந்தையின் க்யூட்டான தருணங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. குறிப்பாக குழந்தை தனது பாட்டியான விலாசினியின் அம்மாவுடன் விளையாடும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், குழந்தையின் பெயருக்கு பின்னால் "ஆதவன்" இடம்பெற்றிருப்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
கல்யாண வாழ்க்கையில் பட்ட கஷ்டம்
விலாசினி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்று பல பேட்டிகளில் பேசி இருக்கிறார். தன்னுடைய முதல் திருமண வாழ்க்கையில் தான் பட்ட வலி, வேதனை போன்றவற்றை கண்ணீருடன் அவர் பேசியிருக்கிறார். தனக்கு குழந்தை என்றால் அவ்வளவு பிடிக்கும் ஆனால் நான் கர்ப்பமாக இருக்கும்போது வாங்கிய அடியால் என்னுடைய குழந்தை எனக்கு அபார்ஷன் ஆகிவிட்டது என்று பேசி இருந்தார். அப்போது பலரும் அவர் மீண்டும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்தனர்.

இரண்டிற்கும் முரண்பாடு
அதே நேரத்தில் ஆதவனுக்கு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் தகவல்கள் வெளியானது. இந்த பின்னணியில், "மீரா ஆதவன்" என்ற பெயர் வெளியானது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் இல்லை என்ற விளக்கத்துக்கும், தற்போதைய இந்த பெயருக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றும் ஆதவனும் விலாசினியும் லிவிங்கில் வாழ்ந்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.
விலாசினி சீரியலில் தான் டெரராக நடித்திருப்பார். ஆனால் அவருடைய பேட்டிகளிலும் அவர் பாடும் வீடியோக்களிலும் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். ஆனால் அவருடைய வாழ்க்கை பல கஷ்டங்களும் வேதனைகளும் நிறைந்தது தான். அதனால் இப்போதாவது அவர் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் பலர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
விளக்கம் வருமா?
மொத்தத்தில், "மீரா ஆதவன்" என்ற பெயர் வெளியானதால் இந்த விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. உண்மை நிலை என்ன என்பது குறித்து விலாசினி அல்லது ஆதவன் தரப்பில் தெளிவான விரைவில் விளக்கம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications