கண்ணனால் முல்லை குழந்தைக்கு வரும் பிரச்சனை.. இனி கதிர் எடுக்கும் முடிவு என்ன?எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனிவரும் எபிசோடுக்கான ஹிண்ட் கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் இந்த வாரத்தில் கதிர் மற்றும் முல்லை இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அடியாள்கள் இருவரையும் தாக்குகின்றனர்.
அதை தொடர்ந்து போராடி கதிர் முல்லையை மருத்துவமனையில் சேர்க்க முல்லைக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் இனிவரும் எபிசோட்களில் நடக்க இருக்கிறது.
ஏற்கனவே கண்ணன் கிரெடிட் கார்டு மூலமாக பணம் வாங்கி இருக்கும் விஷயம் வீட்டிற்கு தெரிந்திருக்கிறது. கண்ணனுக்காக சப்போர்ட் செய்ய போய்தான் கதிர் ஜெயிலுக்கும் சென்று விட்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இனி கண்ணனால் ஏதாவது பிரச்சனை வந்தால் நடக்கிறதே வேற என்று மூர்த்தி கண்ணனை வீட்டிற்குள் சேர்க்கும் போதே கூறி இருக்கிறார். ஆனால் கண்ணனும் ஐஸ்வர்யாவும் அவருடைய சித்தியிடம் பணம் வாங்கி இருக்கும் விஷயம் இன்னும் வீட்டிற்கு தெரியாமல் இருக்கிறது. ஐஸ்வர்யாவின் சித்தி இன்னும் ஒரு நாள் தான் டைம் என்று கெடு வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பேங்கில் ஒரு நபர் லோனுக்கு அப்ளை செய்திருந்த நிலையில், அதில் முக்கியமான டாக்குமெண்ட் இல்லை என்று கண்ணன் கையெழுத்து போட மறுத்துவிட்ட நிலையில் பிறகு கிளர்க் வந்து கெஞ்சியதால் கண்ணன் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார். இதனால் அந்த நபர் கண்ணனுக்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த பணம் வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்த கண்ணன் பிறகு ஐஸ்வர்யாவின் சித்தி பணத்திற்காக வந்து திட்டிக்கொண்டு போனதை நினைத்து யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி வரும் எபிசோடுக்காண ஹிண்ட் கிடைத்திருக்கிறது. அதில் முல்லையும் கதிரும் இந்த வாரம் மருத்துவமனைக்கு செக்கப்புக்காக காரில் சென்று சென்று கொண்டிருக்கும்போது ஏற்கனவே கதிர் கடையில் வேலை பார்த்த, பிரியாணியில் கரப்பான் பூச்சி கலந்த நபர் மீண்டும் வந்து பிரச்சனை செய்ய இருக்கிறார்.
அந்த நபர் அடியாள்களோடு வந்து கதிரை அடிக்க, அப்போது முல்லைக்கு வயிறு வலி வந்து விடுகிறது. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் முல்லையை போராடி கதிர் மருத்துவமனையில் சேர்க்கிறார். பிறகு முல்லைக்கு குழந்தை பிறக்கிறது இந்த விறுவிறுப்பான தருணம் இந்த வாரத்தில் நடைபெற இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications