பாண்டியன் ஸ்டோர்ஸ்: அரசியை காட்டில் விட்ட குமாரவேல்.. குடும்பத்திற்கு அதிர்ச்சி! மாஸ் காட்டிய பாண்டியன் பொண்ணு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 ஜூன் 6ஆம் தேதிக்கான எபிசோடில், அரசியை தன்னுடைய வாழ்க்கையில் இருந்து துரத்த வேண்டும் என்பதற்காக குமாரவேல் நடுக்காட்டில் விட்டு விட்டு வருகிறார். ஆனால் கடைசியில் அவருக்கு எதிர்பார்க்காத சம்பவம் நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அரசி மாடியில் இருந்து கீழே இறங்கி வர குமாரும் வருகிறார். பிறகு நாங்க ரெண்டு பேரும் ஹோட்டலுக்கு சாப்பிட போறோம் என்று குமார் அரசியை கூட்டிக்கொண்டு போகிறார். அப்போது அம்மாவும், சித்தியும் அரசியை வேற டிரஸ் மாத்திட்டு வர சொல்ல, அதற்கு குமாரவேல் இந்த டிரஸ் அரிசிக்கு நல்லா தான் இருக்கு என்று கூட்டிக்கொண்டு போகிறார்.

அப்பத்தா பெருமிதம்
இதை பார்த்ததும் அப்பத்தா உங்க ரெண்டு பேரு புருஷனை விட என் பேரன் சரியாகத்தான் இருக்கான். கோமதி அவ பொண்ணை நல்லபடியா வளர்த்து இருக்கா. அதனாலதான் அவ இவனை இப்படி மாத்தி இருக்கா என்று சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு குமாரவேல் அரசியை காரில் கூட்டிக்கொண்டு போகும் போது திட்டிக் கொண்டே வருகிறார். நீ என் வீட்டுக்கு வந்து உட்கார்ந்திருக்க அதனால் தான் உன்னை தொலைக்க இங்கே கூட்டிக்கொண்டு வந்து இருக்கிறேன்.
பயத்தில் அரசி
இந்த காட்டுக்குள்ள நிறைய கரடி, நரிகள் எல்லாம் இருக்கு முடிஞ்சா தப்பிச்சுக்கோ என்று அரசியை இழுத்து வெளியில் தள்ளுகிறார். நடுக்காட்டுக்குள் அரசியை விட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு குமார் சென்று விடுகிறார். அப்போது அரசி பயந்து கொண்டே காட்டுக்குள் அழுது கொண்டு நிற்கிறார். அதைத்தொடர்ந்து குமார் தன்னுடைய நண்பர்களை பார்க்க போகிறார். அவர்கள் புது மாப்பிள்ளை டிரீட் கோடு என்று கிண்டல் செய்கிறார்கள்.
நண்பர்களின் தொல்லை
அதற்கு குமார், நல்ல ஒரு நல்ல விஷயம் நடக்க இருக்குது. அது நடந்த பிறகு பெரிய பார்ட்டி வைத்துவிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் காட்டுக்குள் அரசி நடந்து சென்று கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் வீட்டு வாசலில் கதிரும் செந்திலும் பேசிக் கொண்டிருக்கும் பொது அரசியை பார்த்தியா என்று செந்தில் கேட்க, இப்போதான் குமார் கூட வெளியில போனா என்று கதிர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் குமார் கார் வருகிறது.
மீண்டும் வந்த அரசி
ஆனால் காரில் இருந்து குமார் மட்டும் இறங்கி போவதை பார்த்து கதிர் மற்றும் செந்தில் அதிர்ச்சி அடைகின்றனர். அதனால் அரசி எங்கே என்று கேக்க போறேன் என்று கதிர் சொல்ல, செந்தில் தடுத்து விடுகிறார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் குமாரிடம் அரசி எங்கே என்று கேட்க என் கூட வெளிய போனா... என் கூட தான் திரும்பி வரணுமா? என்று திமிரா பேசி கொண்டு இருக்கிறார்.
அதிர்ச்சியில் குமாரவேல்
அந்த நேரத்தில் அரசி அங்கு நடந்து வந்து கொண்டிருக்கிறார். அரசியை பார்த்ததும் குமார் அதிர்ச்சியாகி நிற்கிறார். குடும்பத்தினரிடம் நான் என்னுடைய தோழி ஒருத்தியை பார்த்தேன் அதனால அவ கிட்ட பேசிட்டு இருந்தேன் என்று சமாளித்துவிட்டு அரிசி வீட்டுக்குள் போக குமார் கடுப்பில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஒவ்வொரு நாளும் குமார் ஏதாவது பிளான் செய்கிறார். ஆனால் கடைசியில் அவருக்கு தான் பிரச்சனையும், அவமானமும் வருகிறது.












Click it and Unblock the Notifications