பாண்டியன் ஸ்டோர்ஸ் சொதப்பல்கள்.. அந்த நைட்டி.. அதைவிடுங்க அந்த சட்டையை கவனிங்க.. கதையே மாறிடுச்சு
சென்னை: விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இன்றைய எபிசோட்டில் நடந்த குழப்பங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை டிவியில் ஒளிபரப்பாவதற்கு முன்பே டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்டில் ஒரே ட்ராக்கில் கதிர் மற்றும் முல்லை டிரஸ் மாறி இருப்பதும் இன்னும் சில சொதப்பல்களையும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல உணர்வு பூர்வமான தருணங்கள் இந்த வாரம் எபிசோட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கடன் வாங்கி வைத்திருக்கும் பிரச்சனை இன்னும் வீட்டிற்கு தெரியாமல் இருக்கும் நிலையில் அது குறித்து பஞ்சாயத்து வரும் என்று நினைத்து இருந்த நேரத்தில் முல்லைக்கு ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது.
கதிர் தன்னுடைய ஹோட்டலில் வந்து பிரச்சனை செய்த ரத்தினத்தை அடித்து உதைத்ததால் ரத்தினம் கதிரை பழி வாங்குவதற்காக முல்லையின் வயிற்றில் மோதி முல்லை கீழே விழுந்ததில் அவருக்கு பிரசவ வலி வந்துவிட தற்போது நல்லபடியாக பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்து முல்லை ஹாஸ்பிடலில் இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடந்த நிகழ்வுகள் தான் தற்போது கலாய்க்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் முல்லை புடவையில் காதில் ஜிமிக்கியோடும் கழுத்தில் நகைகளோடும் மருத்துவமனையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதை எப்படி ஆபரேஷன் பண்ணிய ஒருவர் புடவையில் இருக்க முடியும்? அதுவும் கழுத்து,காதில் நகையோடு இருக்கிறாரே? தலையில் அடிபட்டதற்கான எந்த ஒரு தடயமும் இல்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முல்லை நைட்டி அணிந்து மருத்துவமனை பெட்டில் படுத்து இருக்கிறார். அதுபோல அவருக்கு கதிர் சாப்பாடு ஊட்டி விடுகிறார். பின்பு அவருக்கு தலை சீவி விடுகிறார். ஒரு முறை அவருக்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொடுக்கிறார். இப்படியாக அவர் முல்லைக்கு பணிவிடை செய்யும் போது ஒரே எபிசோட்டில் மூன்று முறை சட்டையை மாற்றி இருக்கிறார். அது குறித்து இப்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அதுபோல முல்லைக்கு இரண்டு நைட்டி மாற்றப்பட்டு இருக்கிறது ஆனால் அவருடைய தலையில் இருந்த கட்டு ஒன்று பெரியதாகவும் ஒன்று சிறியதாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இருக்கிறது. இது குறித்தும் கலாய்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முல்லை நல்லபடியாக குழந்தை பெற்றதால் ஜீவா மற்றும் மீனா இருவரும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் தான் ஜீவாவை காட்டுவதற்கு முன்னாடி முல்லைக்கு கதிர் சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கிறார் அடுத்ததாக ஜீவாவை காட்டி உடனே மீண்டும் முல்லை கதிர் காட்டப்படுகிறது.. அப்போதும் ஜீவா முல்லைக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைக்கிறார். இதனால் ரசிகர்கள் என்னடா நடக்குது? இந்த சீரியலில் அவசர அவசரமாக எடுத்து எடிட்டங்கில் வரிசை படுத்தாமல் அப்படியே ஒளிபரப்பி விட்டார்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications