அட பாண்டியன் ஸ்டோர் கதிருக்குள் இப்படி ஒரு திறமையா..!? அடுத்த நிகழ்ச்சிக்கு ரெடி போல..!!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூலமாக பலருக்கும் பரிட்சயமான குமரன் வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
சீரியலில் கதிர் கேரக்டரில் அதிகமாக பேசாத குமரனா? இவ்வளவு அழகாக பாடுகிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
டான்ஸ் மட்டும் தான் குமரனுக்கு ஆட தெரியும் என்று நினைத்திருந்த ரசிகர்கள் தற்போது அவருடைய பாடலை கேட்டு ஹார்ட்டின்களை பறக்க விடுகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர் கதிர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பலவிதமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கூட பல நடிகர்கள் இருந்தாலும் அதற்கு முன்பே சின்ன திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பல நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். இதைத்தான் தற்போது கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மீம்ஸ் களாக பலர் வெளியீட்டு வருகிறார்கள். இந்த சீரியலில் அண்ணன் தம்பி கதை மையமாகக் கொண்டு எடுத்தாலும் கதிர் கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்த குமரன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த டான்ஸ்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிராக நடிக்கும் குமரன் டான்ஸ் திறமையை பல ஸ்டேஜ் பெர்பாமன்ஸில் ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் நிகழ்ச்சியில் கூட இவர் தன்னுடைய அதிரடியான டான்ஸ் மூலம் ரசிகர்களை மிரள வைத்திருந்தார். இவர் மட்டுமல்லாமல் இவருடைய மனைவியோடு இவர் ஆடிய ஆட்டம் இப்ப வரைக்கும் ரசிகர்களால சமூக வலைத்தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் தான் பாடலிலும் சளைத்தவர் அல்ல என்று பாட்டு பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஒவ்வொரு கதாநாயகர்களுக்கும் தனித்தனியாக ரசிகர்கள் பட்டாலும் இருக்கிறது. அதில் கதிர் மற்றும் முல்லைக்கு என்று அதிகளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆரம்பத்தில் விஜே சித்ரா முல்லையாக நடிக்கும் போது இவர்கள் இருவருடைய நடிப்பு மற்றும் கெமிஸ்ட்ரி பிடித்துப்போன ரசிகர்கள் இவருக்காக சமூக வலைதளத்தில் அதிகமான ஃபேன்ஸ் பேஜ்களை தொடங்கி இருக்கின்றனர். அதில் குமரனுடைய க்யூட்டான வீடியோக்கள் அதிகமாக ரசிகர்களால் அடிக்கடி பகிரப்பட்டு வருகிறது.

ஒரே புகழ்ச்சி மழை தான்
தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் "ஒருமுறை பார்க்கையில் பனி என உருகினேன்" என்ற பாடிய பாடலை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகர்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்து கருத்துக்களை கமெண்ட் களில் கொட்டுகிறார்கள். ரொம்ப பீல் பண்ணி பாடி இருக்கீங்க என என்று இவருக்கு குவியும் கருத்துக்களால், இவர் இனி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அறிமுகமானாலும் தப்பில்லை என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனக்குள் இருக்கும் சமையல் திறமையை காட்டிக்கொண்டிருக்கும் கதிர் தற்போது பாட்டு திறமையால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார்.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications