பாண்டியன் ஸ்டோரில் இத்தனை சொதப்பல்களா..?இதை கூட மறந்துட்டாங்களா..?கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ப்ரோமோவை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
கண்ணன் கிரெடிட் கார்டில் வாங்கிய பணம் குறித்த தகவல் குழப்பத்தை ஏற்படுகிறது.
பேங்கில் வேலை பார்க்கும் ஒரு பேங்க் ஆபீசருக்கு கிரெடிட் கார்ட்க்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற அடிப்படை தகவல் கூட தெரியவில்லை என ரசிகர்கள் கலாய்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் இதுவரைக்கும் கூட்டு குடும்பமாக இருந்து வந்த அண்ணன் தம்பிகள் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து பிரிந்து போய் இருந்தனர். இதுவரைக்கும் அமைதியின் சிகரமாக இருந்து வந்த ஜீவா அண்ணன் தம்பிகள் தன்னை ஒதுக்கி வைத்து இளக்காரமாக நடந்து கொள்கிறார்கள் என்று சண்டையிட்டு பிரிந்து போனார்.
அதைத்தொடர்ந்து கண்ணனும் ஐஸ்வர்யாவோடு தனியாக போய்விட்ட நிலையில் இப்போது கண்ணன் வாங்கிய கடனால் வந்த பிரச்சனையால் கதிர் ஜெயிலில் இருக்கின்றார். கதிரை வெளியே எடுக்க வேண்டும் என்று அண்ணன் தம்பிகள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கண்ணன் கிரெடிட் கார்டில் வாங்கிய கடனுக்கு பணம் செலுத்தாததால் பேங்க் ஆபிஸர் பிரமோவில் 5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மூர்த்தியிடம் கேட்டனர்.
ஆனால் இன்றைய எபிசோட்டில் மூன்றே முக்கால் லட்சம் என்று கூறியிருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் கண்ணனுக்கு எப்படி கிரெடிட் கார்டில் இத்தனை லட்சங்கள் கடன் கொடுப்பார்கள் என்பது ரசிகர்களின் கேள்வியாகவும் இருக்கிறது. குறிப்பாக 30,000 சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு லட்சம் வரைக்கும் தான் கடன் கொடுக்கப்படும் என்பது பலருடைய வாதமாக இருக்கிறது.
சீரியல் என்பதற்காக இஷ்டத்துக்கு கதை எழுதப்படுகிறதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே இந்த கிரெடிட் கார்ட் வந்தபோது கூட கண்ணனுக்கு இது என்ன கார்ட் என்று தெரியவில்லை என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டது தான் பெரிய ட்விஸ்ட். ஒரு பேங்கில் வேலை செய்யும் அதுவும் கலெக்சன் வேலை செய்யும் ஒரு நபருக்கு கிரெடிட் கார்ட் தெரியவில்லை அதுவும் மனைவிதான் அப்ளை பண்ணி வாங்கி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டில் கடன் வாங்கிய பிறகு பணம் கட்டவில்லை என்றால் எந்த அளவிற்கு பிரச்சனை வரும் என்பது ஒரு பேங்க் ஆபீஸில் பேங்கில் வேலை செய்பவருக்கு தெரியும். ஆனால் கண்ணனுக்கு மட்டும் அதுவெல்லாம் தெரியாமல் அவர் தவணை மேல் தவணை கூறிக் கொண்டிருக்கிறார். என்றெல்லாம் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் பணம் வேண்டும் தேவைப்படுகிறது என்று மூர்த்தி சொன்னதும் தனம் கையில் இருக்கும் வளையல்களை கழற்றி கொடுத்து இதை பேங்கில் வைத்து பணம் புரட்டுங்கள் என்று கூறுகிறார். ஆனால் தனம் கையில் கிடப்பது எல்லாம் கண்ணாடி வளையல் இந்த வளையல்களை கொண்டு போனால் மூர்த்தியை போலீஸ் பிடிக்காதா? என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர்..
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications