மீண்டும் வீட்டிற்கு வந்த கண்ணன்.. அடித்து துரத்தும் மூர்த்தி..புது பிரச்சனையில் ஐஸ்வர்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
மீண்டும் கதிரால் வீட்டிற்கு வந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு மூர்த்தியால் அதிர்ச்சி கிடைக்கின்றது.
இன்னும் இரண்டு நாளுக்குள் பணம் தர வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் சித்தி பிரச்சனை செய்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் அடுத்த வார எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் கதிர் கட்டாயப்படுத்தி கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருகிறார். வீட்டில் முல்லை இவர்களால் ஏற்கனவே பட்ட கஷ்டம் போதாதா என்று கேள்வி கேட்கிறார்.
பிறகு தனம் என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை வீட்டிற்குள் கூட்டிக் கொண்டு வந்து விட இதனால் கோபமாக முல்லை எதற்காக இப்படி பண்ணுறீங்க இனி மாமா வந்து கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க என்று கோபமாக திட்டுகிறார்.
அதற்கு தனம் ஐஸ்வர்யாவும் கண்ணனையும் கூட்டிக்கொண்டு வந்தது கதிர் தான். நீ கதிர் கிட்ட எதுனாலும் பேசிக்க என்று கூறிவிடுகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வீட்டிற்குள் இருக்கும் விஷயத்தை தனம் கூறுகிறார்.

கண்ணன் கையை பிடித்துக்கொண்டு மூர்த்தியின் முன்னால் நிறுத்தி இனி கண்ணன் இங்க தான் இருப்பான் என்று தனம் சொல்ல, அதனால் அதிர்ச்சியாகும் மூர்த்தி இவன் இனி இங்க ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது. இவனை வீட்டை விட்டு இப்பவே போக சொல்லு இவனை பார்த்தாலே எனக்கு கொலவெறி வருது என்று கடும் கோபத்தில் திட்டுகிறார்.
அதே நேரத்தில் வீட்டிலும் தனக்கு ஆதரவு இல்லாத நிலையில் ஐஸ்வர்யாவின் சித்தி தான் வாங்கிக் கொடுத்த பணத்தை எனக்கு ரெண்டு நாளைக்குள் தந்து தந்துவிட வேண்டும் என்று வார்னிங் கொடுத்து இருப்பதால் இனி என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications