ஜனார்த்தனனால் வீட்டிற்கு வரும் கதிர்,ஜீவா.. கடைசியில் நடந்த டூவிஸ்ட்.. எதிர்பாராத கடைசி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அக்டோபர் 9ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கோமாவில் இருந்த ஜனார்த்தனன் கண் விழித்து மொத்த உண்மையையும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ஜெயிலில் இருந்த கதிர் மற்றும் ஜீவா விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரசாந்த் தான் ஜனார்த்தனனை கொலை செய்ய முயற்சி செய்தது, மேனேஜரை கொலை செய்தது என்ற உண்மை மீனாவிற்க்கு தெரிய வந்திருந்தது. அதனால் மூர்த்தியிடம் மீனா சொல்ல மூர்த்தி மொத்த குடும்பத்தையும் வைத்து பிரசாந்தை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று பிளான் போட்டிருந்தார்.
அதன்படியே மருத்துவமனையில் ஜனார்த்தனனுக்கு காவல் இருந்த மீனாவின் அம்மாவையும் தங்கச்சியும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மீனாவை காவலுக்கு இருப்பது இருப்பது போன்று பிளான் போட்டிருந்தனர். அப்போது பிரசாந்த் வந்து நான் மாமாவை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல, மீனாவும் வீட்டிற்கு கிளம்புவது போன்று கிளம்பி சென்று மீண்டும் அங்கு வர அதே நேரத்தில் ஏற்கனவே ஜனார்த்தனன் அறையில் ஐஸ்வர்யாவின் உதவியோடு வீடியோவை ஆன் செய்து வைத்திருந்தனர்.

இதனால் பிரசாந்த் வழக்கம் போல ஜனார்த்தனன் முன்பு தான் செய்த அனைத்து செயல்களையும் பற்றி பேசி ஜனார்த்தனையை கொலை செய்ய முயற்சி செய்ய, அது அனைத்தும் வீடியோவில் பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் பிரசாந்தை அங்கு மறைந்திருந்த மூர்த்தி குடும்பத்தினர் வந்து பிடித்துக் கொண்டனர். பிறகு மூர்த்தியிடம் இருந்து பிரசாந்த் தப்பித்து ஓடி மல்லியிடம் தான் வெளியே அவசரமாக கிளம்ப போகிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த போலீசார் பிரசாந்த்தை கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கோமாவில் இருந்த ஜனார்த்தனன் கண் முழித்து என்னை கொலை செய்ய முயற்சி செய்தது, என்னுடைய மேனேஜரை கொலை செய்தது, எல்லாமே பிரசாந்த் மாப்பிள்ளை தான் செஞ்சாரு என்று சொல்ல, அதை எல்லாம் போலீஸ் ரெக்கார்டு செய்து நீதிபதியிடம் காட்டுகின்றனர்.
அதனால் நீதிபதி ஜீவா மற்றும் கதிரை காவலில் இருந்து விடுவிக்கின்றார். அதை தொடர்ந்து ஜீவாவும் கதிரும் வீட்டுக்கு வர தனம் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இப்போது இந்த சீரியலில் இரண்டாவது பாகம் சூட்டிங் தொடங்கி இருக்கிறதாம். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications