பாண்டியன் ஸ்டோரில் அதிர்ச்சி சம்பவம்.. அப்பாவுக்கே ஆப்பு வைத்த மகன்.. மீனா எடுத்த முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் செந்தில் தன்னுடைய அப்பா கொடுத்த பணத்தை வைத்து லஞ்சம் கொடுத்து வேலையில் சேர முயற்சி செய்கிறார். ஆனால் அது மீனாவிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் மீனா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாண்டியன் குடும்பத்திற்கு மட்டும் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது. போன வாரத்தில் தான் அரசியின் கல்யாணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்திருந்தது. அரசி தன்னுடைய தவறை உணர்ந்து இனி குமாரை நான் காதலிக்க மாட்டேன், அவரிடம் பேசமாட்டேன் என்று சொல்லி இருந்தார். ஆனாலும் குமார் சில போட்டோக்களை எடிட் செய்து அரசியை மிரட்டி தன்னுடைய இடத்திற்கு வரவைத்து இருந்தார்.

Pandian Stores Vijay TV

குமார் போட்ட பிளான்

கடைசியில் அரசி என்னுடன் ஆசைப்பட்டு தான் வந்தார் என்று திருமண நேரம் முடிந்ததும் கொண்டு விட்டு விடலாம் என்று குமார் பிளான் போட்டிருந்த நிலையில், கடைசியில் அரிசி தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு எனக்கும் குமாருக்கும் கல்யாணம் முடிந்துவிட்டது என்று சொல்லி இருந்தார். கடைசியில் இந்த உண்மைகளை ராஜீ மற்றும் மீனாவிடம் மட்டும் சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் இந்த உண்மைகள் மொத்த குடும்பத்திற்கும் எப்போது தெரியவரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

அரசி செய்த செயல்

அதே நேரத்தில் அரசியை குமார் பழிவாங்குவதற்காக எத்தனையோ பிளான் போடுகிறார். ஆனால் கடைசியில் குமாருக்கு தான் அடி மேல் அடி விழுகிறது. அரசி செய்த துரோகத்தை மறக்க முடியாமல் பாண்டியனும் கோமதியும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பாண்டியனின் மகனான செந்திலும் பாண்டியனுக்கு துரோகம் செய்கிறார். அதாவது மீனாவின் அப்பா செந்திலுக்கு கவர்மெண்ட் வேலைக்கு போவதற்காக பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லி இருந்தார்.

பண பிரச்சனை

இதை நம்பி பணத்திற்காக செந்திலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் பாண்டியன் வீட்டில் இருக்கும் 10 லட்சம் பணத்தை எடுத்து செந்திலிடம் கொடுத்து இதை பேங்கில் போட்டு வை என்று சொல்லி அனுப்புகிறார். ஆனால் செந்தில் மீனாவிடம் வந்து நான் எந்த பணத்தை உன்னுடைய அப்பாவிடம் கொடுத்து என்னுடைய கவர்மெண்ட் வேலைக்கு முயற்சி செய்யப் போறேன் என்று சொல்ல, அதற்கு மீனா அதுவெல்லாம் சரிப்பட்டு வராது அப்படி செய்யாதே பணத்தை பேங்கில் போட்டு வை என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

செந்தில் செய்த வேலை

ஆனாலும் செந்தில் அந்த பணத்தை தன்னுடைய மாமனாரிடம் கொடுக்கிறார். அதற்கு மாமனார் உங்களுடைய இந்த பணத்திற்கு நான் பொறுப்பு மாப்பிள்ளை, உங்களுக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். இது பற்றி செந்தில் மீனாவிடம் வந்து சொல்கிறார். நான் உன்னுடைய அப்பாவிடம் பணத்தை கொடுத்து விட்டேன் என்று சொன்னதும் மீனா அதிர்ச்சியாகி இருக்கிறார். இனி மீனா எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதுதான் இந்த சீரியலில் அடுத்த கட்ட பிரச்சனையாக இருக்கிறது.

மீனாவுக்கு முக்கியத்துவம்

செந்தில் தனக்கு செய்த துரோகத்தை தெரிந்தால் பாண்டியன் மீண்டும் தையத்தக்க என்று குதிப்பார். அல்லது நெஞ்சு வலி வந்துவிட்டது என்று மருத்துவமனையில் படுத்து கொள்வார். ஆனால் செந்தில் மீனாவை நம்பி உண்மைகளை சொல்லி இருக்கும் நிலையில் இனி மீனா எடுக்கும் முடிவால் செந்திலுக்கும் மீனாவிற்கும் பிரிவு வரப்போகிறதா என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த சீரியலில் சமீப காலமாக அதிகமாக மீனாவிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மீனா மட்டுமே இந்த சீரியலில் அறிவாளி என்பதுபோல காட்சிகள் இருப்பது கடுப்பாக இருப்பதாக பலர் கமாண்ட் செய்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+