Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர் மருமகள்களுக்குள் ஏற்பட்ட சண்டை.. கோபத்தில் மீனா.. திட்டும் முல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் செப்டம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இதில் தன்னுடைய அப்பாவை பற்றி கதிர் தவறாக பேசியதால் மீனா கோபத்தில் இருக்கிறார்.

அந்த நேரத்தில் சமாதானம் செய்ய வந்த முல்லை இடம் தன்னுடைய கோபத்தை மீனா காட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores Serial September 19th Episode full update

இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஜீவாவை அடிக்க சொன்னது ஜனார்த்தனன் தான் என்று கதிர் வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க, அதை கேட்டு கோபமான மீனா சொல்லியாச்சு இல்ல விட்டுருங்க என்று கத்தி விட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். அதைத்தொடர்ந்து எல்லோரும் அமைதியாக யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக ஜனார்த்தனன் தன்னுடைய நண்பர்களிடம் தான் பிரசாந்து உடன் புதியதாக தொடங்கப்போகும் பிசினஸ் பற்றி விசாரிக்க அவர்கள் எல்லோருமே அந்த பிசினஸ் தவறானது. அதில் பணத்தை போட்டு ஏமாந்து போய்விட வேண்டாம் நாங்கள் விசாரித்து விட்டோம் என்று சொல்ல அதைக் கேட்டு ஜனார்த்தனன் அதிர்ச்சி அடைகிறார்.

அதே தொடர்ந்து கணக்கு பிள்ளையை ஜனார்த்தனன் போன் போட்டு வர வைத்து இன்னும் இருக்கும் சரக்கு வைத்து எத்தனை நாள் சமாளிக்கலாம் என்று கேட்க அவர் இரண்டு நாள் வேணும் என்றால் சமாளிக்கலாம். பிரசாந்த் தம்பி பணம் கொடுத்தால் மட்டும்தான் இனி அடுத்ததாக நான் என்ன செய்ய முடியும் என்று பார்க்க முடியும் என்று சொல்ல, இத்தனை வருஷம் அனுபவம் இருந்தும் பிரசாந்த் சொன்னதற்காக நாம இப்படி ஏமாந்துட்டோம் என்று கணக்கு பிள்ளையும் ஜனார்த்தனனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதோடு இந்த விஷயத்தை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஜனார்த்தனன் கேட்டுக்கொள்ள அதற்கு கணக்கு பிள்ளையும் சரி என்று சொல்கிறார் அதைத் தொடர்ந்து மூர்த்தியும் தனமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தி ஏற்கனவே மீனாவோட அப்பாவுக்கும் நமக்கும் பிரச்சனை இருக்கு இப்போ கதிர் எதுக்கு அங்க போய் அவர மிரட்டிட்டு வந்து இருக்கான் என்று கேட்கிறார்.

அதற்கு மீனாவோட அப்பா தான் ஜீவாவை அடிக்க சொன்னாங்க என்று சொன்னா கதிருக்கு கோபம் வராதா என்று தனம் சொல்ல, அதற்கு மூர்த்தி மீனாவின் அப்பாவிற்கும் நமக்கும் எத்தனையோ தடவ பிரச்சனை வந்திருக்கு. ஆனா அவர் அப்படி செஞ்சி இருக்காரா? ஆனா இந்த பிரசாந்த் அன்னைக்கு தண்ணிய போட்டுட்டு இருந்தான். அவன் தான் இப்போ கதையை மாற்றி விடுகிறான் என்று நினைக்கிறேன் என்று சொல்ல, அதற்கு தனம் அந்த பிரசாந்துக்கு என்ன தான் வேணுமாம்? எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து இந்த பிரசாந்த் மேல எப்படி மீனாவின் அப்பாவுக்கு இவ்வளவு நம்பிக்கை வந்துச்சு? முதல்ல அவருக்கு நடக்குது என்று புரிய வைக்கணும் என்று பேசிக் தனம் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து மீனா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அங்கு முல்லை வந்து ஜீவா மாமாவை பிரசாந்த் அடித்ததால கதிர் மாமாவுக்கு கஷ்டமாயிடுச்சு அவரால அதை பார்த்துட்டு இருக்க முடியல அதனால தான் அவர் உங்க அப்பா வீட்டுல போய் சண்டை போட்டுட்டு வந்து இருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மீனா புரியுது ஆனா கண்டிப்பா எங்க அப்பா இப்படி சொல்லி இருக்க மாட்டாரு. அவர் அப்படிப்பட்ட ஆளு கிடையாது என்று சொல்ல, அதற்கு முல்லை ஆமா புரியுது ஆனா இதுல ஏதோ நடந்து இருக்கு, அதை கண்டுபிடிக்கணும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு அங்கிருந்து மீனா டக் என்று கிளம்பி விடுகிறார். அதைத் தொடர்ந்து மீனா ஜீவாவிடம் எங்க வீட்டுல போயி கதிர் அம்மாகிட்ட ரொம்ப கோபமா பேசினாரா? என்று கேட்க, அதற்கு ஜீவா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.

அதற்கு நீயும் கதிரும் அங்க போயிருக்கவே கூடாது. எதற்காக அம்மாகிட்ட பொய் சண்டை போட்டிங்க? அம்மா எவ்வளவு பீல் பண்ணி பேசுனாங்க தெரியுமா? அவர் என்ன பண்றாரு எதுக்கு பண்றாரு எதுவுமே தெரியல என்று சொல்ல, நான் உங்க அப்பாகிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன். இந்த பிசினஸ் வேண்டாம், வேண்டாம் என்று ஆனால் அவர் கேட்கலை என்று சொல்ல, நீ எதுக்கு அதை பத்தி கவலைப்படுறா? முதலில் அவர் என்னுடைய அப்பா அதற்குப் பிறகுதான் உனக்கு மாமனார் அதை புரிஞ்சுக்கோ நீ அவர் விஷயத்தில் இனி தலையிடக்கூடாது என்று மீனா சொல்கிறார்.

இதற்கு இனி நான் அவர் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று ஜீவாவும் சொல்லி மீனாவை சமாதானப்படுத்துகிறார். அடுத்ததாக முல்லை கோபமாக இருக்க, முல்லையிடம் கதிர் ஏன் நீ இப்ப கோவமா இருக்க என்று கேட்க, நான் எதுக்கு கோவமா இருக்கேனு உங்களுக்கு தெரியாது? நீங்க எதுக்கு மீனா அக்கா அப்பா வீட்டில் போய் சண்டை போட்டீங்க என்று சொல்ல, அவர் ஜீவாவை அடிக்க சொல்லி இருக்காரு, அதனாலதான் நான் அங்க போனேன் அவர் எப்படி இப்படி சொல்லலாம் என்று சொல்ல, இது நடக்குமா இல்லையா என்று நீங்க யோசிக்க மாட்டீங்களா? அதுதான் உங்களோட பிரச்சனை என்று முல்லை திட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் வீட்டில் ஹாலில் மீனா, தனம், மூர்த்தியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முல்லையின் அம்மா அங்கே வருகிறார். முதலில் எல்லோரிடமும் நலம் விசாரித்து விட்டு முல்லை, கதிரை எங்கே என்று கேட்க, அவங்க கோயிலுக்கு போயிருக்காங்க என்று மீனா சொல்ல, பிறகு தனத்திடம் ஆபரேஷனுக்கு எவ்வளவு பணம் ஆச்சி என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் எவ்வளவு பணம் ஆனது என்பதை சொல்லாமல் மூர்த்தி மறைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+