கோர்ட்டுக்கு வரும் ஜனார்த்தனன் கேஸ்.. பல்டி அடித்த பிரசாந்த்.. அதிர்ச்சியில் மீனா.. மல்லியின் கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செப்டம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் ஜனார்த்தனனையும் பிரசாந்தையும் தாக்கியது ஜீவா மற்றும் கதிர் தான் என்று பிரசாந்த் பொய் சொல்லுகிறார்.

அதைக் கேட்டு மீனா அதிர்ச்சியாகி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்று எபிசொடின் ஆரம்பத்தில் ஜீவாவும், கதிரும் ஜெயிலுக்குள் இருக்க அப்போது மூர்த்தி நான் உங்களை எப்படியாவது இன்னைக்கு வெளியே எடுத்திருந்தேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். நேரம் ஆக ஆக அங்கு இருக்கும் போலீஸ் ஆபீஸர் மூர்த்தியையும் முல்லையின் அப்பாவையும் வெளியே போக சொல்லி திட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து மீனாவும் கண்ணனும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். அங்கு மீனா தன்னுடைய அம்மாவை பார்த்து கதறி அழுது கொண்டிருக்கிறார். அப்போது மீனாவின் அம்மா பாரு நல்லா பாரு இப்ப அழுது என்ன பிரயோஜனம் இன்னைக்கு உங்க அப்பா உள்ளே சுயநினைவு இல்லாம கிடக்கிறார் என்று சொல்லுகிறார். அதைக் கேட்டு மீனா அழுது கொண்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் கண்ணன் உங்க புருஷனை அண்ணனுங்க தான் ஏதோ பண்ணிட்டாங்கன்னு சொல்லி நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கீங்களா? போலீஸ் அண்ணன்களை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் இருக்காங்க என்று சொல்ல, அதைக் கேட்டு கோபமான மீனாவின் அம்மா உங்க அண்ணனுங்களால் தான் என் குடும்பத்திற்கு இன்னைக்கு இந்த நிலைமை வந்து இருக்கு என்று திட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து மீனா தன்னுடைய அம்மாவிடம் பிரசாந்த் இப்போ எப்படி இருக்கான் என்று கேட்க, அவரும் அதிகமா வெட்டு வாங்கிகிட்டு தான் இருக்காரு. அந்த கதிருக்கு என்னடி அவ்வளவு இப்படி கோபம். கையில மாட்டுறவங்க எல்லாரையும் வெட்டுற அளவுக்கு என்று திட்ட, அதற்கு கண்ணன் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. அண்ணன் அப்படிப்பட்டவர் இல்லை என்று சொல்ல, அதற்கு மீனாவின் அம்மா மீனா அப்பா என்ன துரோகம் பண்ணினாரு உங்களுக்கு? எல்லாருக்கும் நல்லது தானே பண்ணுனாரு.
உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை எல்லாம் கொடுத்தாரே, அதெல்லாம் மறந்து போச்சா? நீங்க எல்லாரும் நல்லவங்க மாதிரி வேஷம் போட்டு போட்டு எவ்வளவு பெரிய வேலையை பார்த்து வச்சிட்டீங்க. தப்பு பண்ணினவங்க கண்டிப்பா அனுபவிப்பீங்க என்று சாபம் கொடுக்கிறார். அப்போது டாக்டர் வந்து ஜனார்த்தனின் நிலைமை ரொம்பவே மோசமாக தான் இருக்குது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று சொல்ல, இதை கேட்டு மீனாவும் அவருடைய அம்மாவும் அழுது கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் மல்லி அங்கு வந்து மீனாவையும் கண்ணனையும் திட்டுகிறார். ஹாஸ்பிடல் இருக்கிறவங்க உயிரோடு இருக்காங்களா? இல்ல செத்துட்டாங்களான்னு பாத்துட்டு வரச் சொல்லி உங்க அண்ணனுங்க அனுப்பி வச்சிருக்காங்களா? என்று கேட்க அதற்கு கண்ணன் கண்டிப்பா ஏதோ தப்பு நடந்து இருக்கு அதை புரிஞ்சிக்காம இப்படி பேசாதீங்க என்று சொல்ல, அதற்கு மல்லி மீனாவிடம் உன் புருஷனுக்கும் உங்க அப்பாவுக்கு பிரச்சனைனா அதை நீங்க தான் பேசி தீர்த்துக்கணும்.
அதுக்காக இப்படி பண்ணலாமா? ரோட்ல வச்சி கதிர் பிரசாந்த்தை அடிச்சி இருக்கான். பிரசாந்த் தான் ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை வேண்டாம்னு ஒதுங்கி போயிட்டு இருக்கான் ஆனாலும் விடாம எப்பவும் இப்படித்தான் பண்ணிட்டு இருக்கீங்க. அவன் திமிர வேற யார்கிட்டயும் காட்ட சொல்லு என் பையன் கிட்ட காட்ட சொல்லாத என்று மிரட்டிக விட்டு போகிறார்.

அதைத் தொடர்ந்து மீனாவும் கண்ணனும் வீட்டிற்கு வர அப்போது வீட்டில் யாருமே சாப்பிடாமல் அழுது கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மீனா தனத்திடம் அப்பாவுக்கு இன்னும் நினைவு திரும்பல. அப்பா என் மேல ரொம்ப பாசம் வைத்திருந்தார் என்று சொல்லி அழுது கொண்டே இருக்கிறார். அப்போது தனம் ஆறுதல் சொல்ல அந்த நேரத்தில் மீனா ஜீவா என்று கூப்பிட ஜீவாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணிய விஷயத்தை தனம் நினைவுபடுத்துகிறார்.
பிறகு மீனா தன்னுடைய அப்பா பாசத்தை சொல்லி அழுது கொண்டே இருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் மீனா ஹாஸ்பிடலில் இருக்க அப்போது போலீஸ் ஆபீஸர்ஸ் வந்து இன்னைக்கு உங்க அப்பாவுடைய கேஸ் கோர்ட்டுக்கு வருது என்று சொல்லி ஜனார்த்தனனுக்கு எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஆபீஸர் பிரசாந்திடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்தப் பக்கமாக வரும் மீனா பிரசாந்த் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி ஆகிறார்.
கதிரும் ஜீவாவும் மாமா கிட்ட சொத்து வேணும் என்று கேட்டாங்க. மாமா ஒரு பிரசண்டேஜ் சொத்து தாரேன்னு சொன்னாரு. அதை போதாது என்று தான் கதிர் இந்த மாதிரி பண்ணிட்டான். கண் இமைக்கும் நேரத்துல எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு. நான் எவ்வளவோ தடுக்க போனேன் ஆனா கதிர் என்னை அடிச்சு போட்டுட்டான் என்று சொல்ல, அதைக்கேட்டு அதிர்ச்சி ஆகி மீனா நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications