மொத்த உண்மையையும் உடைத்த ஐஸ்வர்யா.. மீனா கேட்ட கேள்வி.. கோபத்தில் மூர்த்தி.. செம முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் செப்டம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தனத்திற்கு தான் கேன்சர் இருக்கிறது என்ற உண்மையை ஐஸ்வர்யா அனைவரிடமும் சொல்ல அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் மீனா தன்னுடைய அம்மா அப்பாவிடம் கேட்ட கேள்வியால் அனைவரும் கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையை என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முல்லை, கதிர் மீனா,தனம் எல்லோரும் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அங்கே மீனாவின் அப்பா காரை பார்த்ததும் மீனா எனக்கு ஏதோ பிரச்சனையாக இருக்கும் என்று தோன்றுது. எங்க அப்பா வேற வந்து இருக்கார் மீண்டும் ஏதாவது சண்டை போட போறாரா? என்று சொல்ல கதிர் வாங்க உள்ளே போய் பார்ப்போம் என்று எல்லோரும் உள்ளே வருகின்றனர்.

அதற்கு தனமும் ஏதாவது உளறி வச்சிடாதீங்க தடுப்பூசி போடத்தான் போனோம் என்று சொல்லுங்க என்று பிளான் போட்டுபடியே உள்ளே வர அங்கே ஐஸ்வர்யாவை மொத்த குடும்பமும் சுற்றி நின்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஐஸ்வர்யாவின் சித்தியும் சித்தப்பாவும் திட்டிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ஹாஸ்பிடலில் இருந்து வந்தவர்களை பார்த்ததும் மீனாவின் அம்மா ஓடிப்போய் என்னாச்சு மீனா நீ நல்லா இருக்கியா? என்று விசாரிக்கிறார்.
அடுத்ததாக தனம் மற்றும் முல்லையிடமும் அவருடைய குடும்பத்தினர் விசாரிக்கின்றனர். அதற்கு எல்லோரும் நாங்க நல்லா இருக்கோம். ஒன்றும் இல்லை என்று சமாளிக்க, அதைத்தொடர்ந்து மூர்த்தி ஏற்கனவே நீ போட்ட வீடியோவால் பட்ட பாடு போதாதா? ஏம்மா நீ திருந்தவே மாட்டியா? என்று ஐஸ்வர்யாவை திட்டுகிறார். அதற்கு ஐஸ்வர்யா உண்மையை சொல்ல வர, மீனா இதை லைக்குகாக பண்ணிட்டார் என்று சொல்லி சமாளித்துக் கொண்டு ஐஸ்வர்யாவை உண்மையை சொல்ல வேண்டாம் என்று கண்ணை காட்டி கையெழுத்து கும்பிடுகிறார்.

அதற்கு மீனாவின் அப்பா ஐஸ்வர்யாவையும் கண்ணனையும் திட்டிக் கொண்டிருக்க, ஐஸ்வர்யாவின் சித்தியும் உனக்கு இருக்கிறதை வைத்து வாழ தெரியாதா? பறக்கிறது எல்லாம் வேணுமா என்று திட்ட, அதற்கு கோபமான ஐஸ்வர்யா நான் பொய் சொல்லல. இந்த வீட்ல ஒருத்தருக்கு கேன்சர் இருக்கு என்று சொல்ல, மூர்த்தி தனத்திடம் போய் யாருக்கு என்ன பிரச்சனை சொல்லு தனம் என்று கேட்கிறார்.
அப்போது ஐஸ்வர்யா நீங்க எத்தனை முறை கேட்டாலும் அக்கா சொல்ல மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு தான் மார்பக புற்றுநோய் என்று சொல்ல, இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications