பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு மீண்டும் வந்த விஜே தீபிகா வெளியிட்ட உருக்கமான பதிவு.. முதல் நாளே இப்படியா!
அதிர்ஷ்டம், முயற்சி, நம்பிக்கை இருந்தால் ஆயிரம் கதவுகளை திறக்க செய்யும் என விஜே தீபிகா பதிவு வெளியிட்டிருக்கிறார்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜே தீபிகா ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்தார்.
திடீரென உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் விஜே தீபிகா ஐஸ்வர்யாவாக இந்த சீரியலில் அறிமுகமான நிலையில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மீண்டும் மீண்டும் மாற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பிடித்திருக்கிறது. இந்த சீரியல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் பலர் மாறி இருக்கின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா கேரக்டரில் இரண்டாவதாக நடித்து வந்த விஜே தீபிகா தன்னுடைய முகத்தில் அதிகமான முகப்பரு இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். அவருக்கு பதிலாக சாய் காயத்ரி நடித்து வந்தார். தற்போது சாய் காயத்ரி இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் தீபிகா ஐஸ்வர்யாவாக இன்றிலிருந்து அறிமுகம் ஆகிறார்.

அதிர்ஷ்டம் மீண்டும் கிடைத்தது
பொதுவாக ஒரு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் போது சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து விலகி மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிப்பது என்பதெல்லாம் சின்னத்திரை உலகில் மிகப்பெரிய விஷயம். அப்படி தீபிகாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. இது குறித்து தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அதிர்ஷ்டம் ஒருவாட்டி தான் கதவை தட்டும் என்று சொல்லுவாங்க அது கரெக்ட் தான். ஆனால் முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் ஒன்று இல்ல ஆயிரம் கதவுகளை திறக்க செய்யும் என்று கூறியிருக்கிறார்.

மதிப்பு தெரியும்
மேலும் அந்த பதிவில் ஐஸ்வர்யாவாக என்னுடைய பயணம் பாதியில் முடிந்தது. ஆனால் இப்போ எங்கே முடிந்ததோ அங்கேயே ஒரு தொடக்கம் வந்திருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான் சொல்லப் போறேன். ஒரு பொருள் நம்மகிட்ட இல்லாத போது தான் அதோட வலி என்னன்னு நமக்கு தெரியும். எனக்கு நிறையவே புரிஞ்சது. நல்லாவே தெரிஞ்சது. இப்ப அது திரும்ப கிடைச்சிருக்கு. அதனால அதோட மதிப்பு எனக்கு நல்லாவே தெரியும்.

அனைவருக்கும் நன்றியோ நன்றி
இவ்வளவு நாள் எனக்காக பீல் பண்ணுனவங்களுக்கு, இப்ப எனக்கு வாழ்த்து சொல்ற உங்களுக்கும் ரொம்பவே நன்றி. தீபிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் உங்களுடைய சப்போர்ட் வாழ்த்துக்கள் எப்போதும் வேணும். அன்பே சிவம் என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். மீண்டும் இவர் ஐஸ்வர்யாக வந்து விட்டதால் இனி கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி பொருத்தம் செம்மையாக இருக்கப் போகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இனி சுவாரசியமாக கதை போகுமா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications