அவ்வளவு அவமானம்! என் நிலைமை இனி முடிந்தது என்று சொன்னாங்க! எமோஷனலாக பேசிய பாண்டிராஜன்
சென்னை: தமிழ் சினிமாவில் குடும்ப சென்டிமென்ட் படங்களுக்குப் பெயர் போன இயக்குனர் பாண்டிராஜ், தனது 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்குப் பிறகு சந்தித்த மூன்று ஆண்டுகால போராட்டங்கள், கஷ்டங்கள் மற்றும் அவமானங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருப்பது, திரையுலக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 'தலைவன் தலைவி' படத்தின் வெற்றிக்கு மத்தியில், தனது கசப்பான அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

எதற்கும் துணிந்தவன்
'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டுப் பிள்ளை' போன்ற அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கி, குடும்ப ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநராக வலம் வந்த பாண்டிராஜ், நடிகர் சூர்யாவை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றார். ஏற்கனவே சூர்யாவின் தயாரிப்பில் 'பசங்க 2' மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' என இரு படங்களை இயக்கியிருந்த பாண்டிராஜ், அதில் 'பசங்க 2' படத்தில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவான 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்திற்கு வேற லெவல் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய ஹைப்பிற்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியினைப் பெறவில்லை.
மூன்று ஆண்டுகால நரகம்
'எதற்கும் துணிந்தவன்' படத்தின் தோல்வி, இயக்குநர் பாண்டிராஜுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது. அதைத் தொடர்ந்து மூன்று வருடங்கள் பாண்டிராஜிற்குக் கஷ்டகாலமாகவே இருந்தது என அவரே கூறியிருக்கின்றார்.
அவர் பேசியதாவது: "கடைக்குட்டி சிங்கம், நம்ப வீடு பிள்ளை ஹிட்டைத் தொடர்ந்து பலர் என்னுடன் படம் பண்ண முன் வந்தனர். ஆனால் 'எதற்கும் துணிந்தவன்' படம் சரியாக போகவில்லை என்பதால், இனி பேமிலி ட்ராமா படங்கள் எல்லாம் அவ்வளவு தான். 'விக்ரம்', 'ஜெயிலர்' போன்ற படங்கள் வரத் துவங்கிவிட்டது. தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் மாறிவிட்டது. இனி பாண்டிராஜ் இயக்கும் பேமிலி டிராமா படங்கள் எல்லாம் எடுபடாது என்றார்கள். இந்த மூன்று வருடங்கள் பண ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கஷ்டங்கள் இருந்தன. அவமானங்கள், அசிங்கங்கள் நிறைந்து இருந்தன. உதவி இயக்குநராக இருந்தபோது கூட இந்தளவிற்கு கஷ்டங்களை அனுபவிக்கவில்லை. வெற்றிபெறும்போது எந்தளவிற்கு கொண்டாடப்படுகின்றோமோ, தோல்வி கொடுக்கும்போது அதே அளவிற்கு அவமானங்களையும் சந்திக்க நேரிடுகின்றது. இது தான் சினிமா," என மிகவும் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
முத்திரையும், முறிவும்
இயக்குனர் பாண்டிராஜ் படங்கள் என்றாலே ஃபேமிலி ட்ராமாவாகத் தான் இருக்கும் என்ற ஒரு கருத்து பரவலாக இருந்து வருகின்றது. ஆனால், பாண்டிராஜ் வித்தியாசமான ஜானர்களில் பல படங்களை கொடுத்திருக்கின்றார். குழந்தைகளை வைத்து 'பசங்க' என்ற திரைப்படத்தை இயக்கினார். அதிரடியான ஆக்ஷன் படமான 'வம்சம்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். பக்காவான ஒரு திரில்லர் படமாக 'கதகளி' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். காதல் மற்றும் காமெடி கலந்து 'இது நம்ம ஆளு' என்ற ஹிட் படத்தையும் கொடுத்திருக்கிறார்.
இதுபோல வித்தியாசமான பல ஜானர்களில் பாண்டிராஜ் படங்கள் கொடுத்திருந்தாலும், அவரது 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படங்களின் வெற்றி அவருக்கு ஃபேமிலி என்டர்டைனர் படங்களை கொடுக்கும் இயக்குநர் என்ற முத்திரையை இறுக்கமாகப் பதித்துவிட்டது.
மீண்டும் கெத்தாக கம்பேக்
சிவகார்த்திகேயன், கார்த்தி, சிம்பு போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து ஹிட் கொடுத்த ஒரு இயக்குநருக்கே இந்த நிலையா? என்று பாண்டிராஜின் இந்தப் பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைகின்றனர். இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு பல அவமானங்களையும், கஷ்டங்களையும் கடந்து வந்த பாண்டிராஜ், தற்போது மீண்டும் ஒரு கலகலப்பான ஃபேமிலி என்டர்டைனர் படமான 'தலைவன் தலைவி' மூலம் வெற்றிப்பாதைக்கு கெத்தாகத் திரும்பியிருக்கிறார். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, 30 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தோல்விகள் ஒரு இயக்குநரின் பயணத்தில் தவிர்க்க முடியாதவை என்பதையும், அதிலிருந்து மீண்டு வந்து வெற்றிக் கனியைப் பறிக்கக் கடும் உழைப்பும், மன உறுதியும் அவசியம் என்பதையும் பாண்டிராஜின் கதை உணர்த்துகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications