Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்கா மகள் மீது காதல்.. அதுவிடுங்க, தோன்றிய பன்னீர் புஷ்பங்கள்! காப்பிரைட்டை மீறிய இளையராஜாவின் உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குட் பேட் அக்லியில் பாடலை பயன்படுத்தி கொள்கிறோம் என்ற தகவலையாவது தன்னிடம் சொல்லியிருக்கலாம் என்பது கஸ்தூரிராஜாவின் வேதனையாக இருக்கிறது. எனவே, இளையராஜா, கஸ்தூரி ராஜா போன்றோர் எதிர்பார்ப்பது சின்ன மரியாதையை, தங்களுக்கான அங்கீகாரத்தைதான்.. பணம் பிரதானம் கிடையாது" என்று பத்திரிகையாளர் சுபைர் தெரிவித்துள்ளார். அத்துடன் இளையராஜாவின் உதவும் குணம் குறித்தும் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Behind Talkies என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், காப்பிரைட் என்பது மிகப்பெரிய பிரச்சனை.. 80களில் உச்சத்தில் இருந்தார் இளையராஜா.. ஒரு படத்துக்கு இசையமைக்க போகிறார் என்று அறிவித்து பூஜை போட்டுவிட்டாலே அந்த படம் அன்றைய தினமே அத்தனை ஏரியாவும் அப்படம் விற்றுத்தீர்ந்துவிடும். கரகாட்டக்காரன் போன்று பாடலுக்காகவே ஒரு வருடம் ஓடிய படங்களும் உண்டு..

Television Panneer Pushpangal Ilayaraja

அந்த நேரத்தில் இளையராஜா தனக்கு சம்பளம் பேசும்போதே, சம்பளத்துடன் சேர்த்து ஆடியோ உரிமையும் சேர்த்து வாங்கி கொண்டார். அதுமட்டுமல்லாமல் எக்கோ என்ற கம்பெனியை தன்னுடன் இணைத்து கொண்டார்.. எக்கோவின் சுப்பிரமணியன், இளையராஜா இருவரும் பார்ட்னரானார்கள்.. இளையராஜா இசையமைத்தால், அந்த பாடல்களை எக்கோவில் கேசட்டாக போட்டு விற்பனை செய்வார்கள்.. இதுதான் ஆடியோ ரைட்ஸ்..

எக்கோ கம்பெனி - பாடல் ஆடியோ

ஒருகட்டத்தில் எக்கோ கம்பெனிக்கும், இளையராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது.. யாருக்கு அதிக ஷேர் செல்லும் என்பதான வழக்கு உள்ளது வேறு விஷயம்.. இப்படி தன் சம்பளம் வாங்கும்போதே, பாடல்களுக்கான ஆடியோ உரிமையையும் அன்றே பெற்றார் இளையராஜா..

இப்போது டிஜிட்டல் வந்ததுமே, பாடல்களை கேட்பதற்கு நிறைய தளங்கள் வந்துவிட்டன.. அந்த பாடல்களை இப்போதுள்ள படங்களுக்கு பயன்படுத்த வேண்டுமானால், இதையெல்லாம் ஒன்றுசேர்ப்பதற்காகவே மும்பையில் ஒரு அமைப்பு உள்ளது.. இந்தியாவிலுள்ள திரைப்பட பாடல்களை எல்லாம் இந்த அமைப்பு ஒன்று சேர்க்கிறது..

காப்பிரைட் உரிமை

உதாரணத்துக்கு ஆர் ரஹ்மான் பாடலை ஒரு படத்துக்கு பயன்படுததுவதாக இருந்தால், IPRS என்ற அமைப்பிடம் அனுமதி வாங்கினால் போதும், அவர்கள் NOC தந்துவிடுவார்கள்.. அப்போது ஏஆர் ரஹ்மான் பாடலை பயன்படுத்தி கொள்ளலாம்.. இதற்கு ஒரு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். இந்த கட்டணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இவர்களுக்கெல்லாம் பங்கு போய் சேரும்.

இந்த IPRS-ல்தான் இளையராஜாவும் உறுப்பினராக இருந்தார்.. பிறகு ஒருகட்டத்தில் அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய காப்பிரைட் உரிமையை, தானே நேரடியாக கையாள துவங்கிவிட்டார். எனினும், IPRS, ECHO போன்ற கம்பெனிகளுடன் அன்று இளையராஜா இணைந்து செயல்பட்டதால், இந்த இரு கம்பெனிகளிடமும் இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைகள் உள்ளன.

இப்போது சிக்கல் என்னவென்றால், யாராவது இளையராஜா பாடல்களை தங்களது பாடல்களில் பயன்படுத்த வேண்டுமானால், இதில் யாரிடம் சென்று உரிமையை பெறுவது? என்று குழம்பிவிடுகிறார்கள்.. சிலர் டிஜிட்டல் நிறுவனங்களிடமும், சிலர் ஆடியோ நிறுவனங்களிடமும் உரிமையை பெற்றுவிடுவதால், அவர்களுக்கு இளையராஜா நோட்டீஸ் தந்துவிடுகிறார்.

புதுப்புது அர்த்தங்கள் - கல்யாண மாலை

ஜெயம் ரவி இப்போது சொந்தமாக ரவிமோகன் ஸ்டுடியோ என்று ஓரு கம்பெனி துவங்கி 'புரோ கோட்' என்று படத்தையும் தயாரித்துள்ளார்.. இந்த படத்தின் புரமோவில் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரக்கூடிய கல்யாண மாலை என்ற பாடல் ஒலிக்கிறது.

இந்த பாடலை பயன்படுத்தி கொள்வதற்காக, படத்தின் இசையமைப்பாளர், இளையராஜாவை சந்தித்து மாலை அணிவித்து, பாடலுக்கான அனுமதியையும் பெற்று வந்தார்.. அவருக்கு எந்த நோட்டீஸும் தரப்படவில்லை.. இப்படி முறைப்படி ஒரு படைப்பின் அனுமதியை பெற்றால் தவறில்லையே?

அதேபோல Intellectual Act அதாவது அறிவுசார் சொத்துரிமை என்று இந்தியாவில் உள்ளது.. நீங்கள் பிறது ஒரு படைப்பை பயன்படுத்தி கொள்வதாக இருந்தால், அந்த படைப்பை உருவாக்கியவரிடம் அனுமதி பெற வேண்டும்..

பஞ்சு மிட்டாய் சேலை

ஆனால் குட் பேட் அக்லி படத்தில், தேவா இசையமைப்பில் பஞ்சுமிட்டாய் பாடலை பயன்படுத்தியிருந்தனர். இந்த பாடலுக்கு கஸ்தூரி ராஜாதான் பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர்.. ஆனால், குட் பேட் அக்லியில் பாடலை பயன்படுத்தி கொள்கிறோம் என்ற தகவலையாவது தன்னிடம் சொல்லியிருக்கலாம் என்பது கஸ்தூரிராஜாவின் வேதனையாக இருக்கிறது. எனவே, இளையராஜா, கஸ்தூரி ராஜா போன்றோர் எதிர்பார்ப்பது சின்ன மரியாதையை, தங்களுக்கான அங்கீகாரத்தைதான்.. பணம் பிரதானம் கிடையாது.

சமீபத்தில்கூட, சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.. அந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் ஆசைப்பட்டார்.. அந்த படத்தை பார்த்ததுமே இளையராஜாவுக்கு பிடித்துவிட்டது..

சொற்ப சம்பளம் வாங்கிய இளையராஜா

எனவே தான் ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெற்றாலும், இந்த படத்துக்காக, சொற்ப சம்பளத்தை பெற்றுக்கொண்டு இசையமைத்து தந்துள்ளார் இளையராஜா.

அன்று 80களில் இளையராஜா உச்சத்தில் இருந்தபோது, சந்தானபாரதி, வாசுவும் சேர்ந்து பாரதி வாசு என்ற பெயரில் முதல்முறையாக பன்னீர் புஷ்பங்கள் படத்தை எடுத்திருந்தனர்.. இவர்கள் இவர்கள் டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்தவர்கள்..

பன்னீர் புஷ்பங்கள் - பாரதி வாசு

ஸ்ரீதருக்கு ஆல்டைம் மியூசிக் டைரக்டர் எம்எஸ்வி மட்டுமே.. எனினும் ஸ்ரீதரிடம், "இளையராஜா என்ற புதிய இசையமைப்பாளர் வந்துள்ளார்.. அவரது பாடல்கள் நன்றாக இருக்கின்றன.. நம்முடைய படத்துக்கும் அவரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இதனை ஸ்ரீதர் ஏற்காவிட்டாலும், ஒருகட்டத்தில் இளையராஜாவை தன்னுடைய படங்களுக்கு வாய்ப்பு தந்தார்.. இதற்கு பிறகுதான் பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தை பாரதி வாசு இருவரும் எடுத்தனர். அந்த படத்துக்கு இளையராஜாதான் மியூசிக்.. படமும் சூப்பர் ஹிட்டாகிவிட்டது.. பிறகு அனைவருக்கும் சம்பளம் தரும்போது, நீங்கள் இருவரும் படங்களை பண்ணி முன்னுக்கு வாங்க, சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் இளையராஜா என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+