Parasakthi Twitter Review: பராசக்தியில் இடைவெளியில் நடந்த சம்பவம், இதுதான் செம! சிவகார்த்திகேயனின் தீ பரவியது?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம், ரிலீஸ்க்கு முன்பே "இது எஸ்கேவின் கேரியர் டர்னிங் பாயிண்ட்" என பேசப்பட்ட படம். 'அமரன்' படத்தின் 300 கோடி வசூலுக்குப் பிறகு, சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்திருந்த நிலையில், அந்த ஹைப்பை மேலும் தூக்கிப் பிடிக்கும் படமாக 'பராசக்தி' பார்க்கப்பட்டது.
பீரியட் கதைக்களம், ஜிவி பிரகாஷின் இசை, ரவி மோகனின் முழு வில்லன் அவதாரம் என எல்லாமே எதிர்பார்ப்பை ஏற்றிவிட்ட நிலையில், வெளிநாடுகளில் படம் வெளியான உடனே ட்விட்டர் (X) முழுக்க முதல் பாதி விமர்சனங்கள் பறக்கத் தொடங்கின.

படம் கதைக்குள் நேரடியாக நுழைகிறது என்பதில் பெரும்பாலானோர் ஒத்துக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் வரும் பீரியட் செட்டப், லொகேஷன், காஸ்ட்யூம் எல்லாம் "சுதா கொங்கரா கையெழுத்து" என்று சொல்லும் அளவுக்கு ஸ்டைலாக இருக்கிறதாம். ஆனால் அந்த செட்டப்புக்கு பிறகு கதை மெதுவாக நடக்க ஆரம்பித்ததும், ரசிகர்கள் சீட்டில் சாய்ந்து உட்காரும் நிலை வந்துவிடுகிறது என்கிறார்கள்.
குறிப்பாக காதல் ட்ராக் பற்றி ட்விட்டரில் கொஞ்சம் அதிகமாக கலாய்ப்பு. "கதையை முன்னே நகர்த்த வேண்டிய நேரத்தில் காதல் பாடல் வந்து நம்மை பின்னே இழுக்கிறது", "பீரியட் படமா, லவ் ஸ்டோரி ரீமிக்ஸா?" என்ற ரீதியில் கமெண்ட்கள் குவிகின்றன. அதனால் தான் "Dull 1st Half" என்ற டேக் லைனுடன் விமர்சனங்கள் வர தொடங்கியிருக்கின்றன.
அதே நேரத்தில் இடைவேளை வந்ததும் பலரின் முகத்தில் சின்ன சிரிப்பு. "இவ்வளவு நேரம் மெதுவாக போனாலும், இடைவேளை காட்சி அடிபொலி", "அங்க தான் படம் மூச்சு விட ஆரம்பிக்கிறது" என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக ரவி மோகன், சிவகார்த்திகேயன் இருவரும் இடைவேளைக்கு முன் காட்டும் எனர்ஜி, தியேட்டரில் கை தட்ட வைக்கிறதாம்.
ரவிமோகனின் வில்லத்தனம் தான் முதல் பாதியின் முக்கிய ஹைலைட் என்றும் பலர் குறிப்பிடுகிறார்கள். " ரவி மோகன், இப்படி பயமுறுத்துவார்னு எதிர்பார்க்கல" என்ற ட்வீட்டுகளும் இருக்கின்றன. ஸ்ரீலீலா க்யூட் என்றும், அதர்வா கதையில் முக்கிய இடத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் எல்லோருமே கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. சிலர், "முதல் பாதிக்கு 5-க்கு 1.5 தான்", "வசனம், இடைவேளை தவிர பெரிய தாக்கம் இல்லை" என்று கொஞ்சம் கடுமையாக விமர்சிக்கிறார்கள். திரைக்கதை மற்றும் சொல்லிய விதம் இன்னும் டைட்டாக இருந்திருக்கலாம் என்பதே அந்த தரப்பின் கருத்து.
மொத்தத்தில், 'பராசக்தி' முதல் பாதி குறித்து ட்விட்டரில் வரும் விமர்சனங்கள் ஒரே குரலில் இல்லை. ஒருபக்கம் "இடைவேளை சூப்பர், இரண்டாம் பாதி நம்பிக்கை" என நம்பிக்கை வைக்கும் ரசிகர்கள்; மறுபக்கம் "ஹைப் அளவுக்கு முதல் பாதி இல்லை" என கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்.
எப்படிப் பார்த்தாலும், தற்போது ட்விட்டரில் ஓடும் ஒரே டயலாக் இதுதான் "முதல் பாதி பார்த்தாச்சு... இப்போ இரண்டாம் பாதி தான் பராசக்தியின் உண்மையான பரீட்சை!"
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications