அம்மாவின் தற்கொலை முயற்சி! கரண்ட் இல்லாத வீடு! வறுமையால் பட்ட அவஸ்தை! கண்கலங்க வைத்த பார்த்திபனின் பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞர்களில் ஒருவரான நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது குடும்பம் சந்தித்த கஷ்டங்களையும், வறுமையின் பிடியில் இருந்து அவர் மீண்டு வந்த கதையையும் சிரிப்புடன், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார். அவரது வார்த்தைகள், கேட்போர் அனைவரையும் நெகிழ வைத்தது.
மின்சாரம் இல்லாத வீடு
பார்த்திபன் தனது பேட்டியில், "என்னுடைய வீடு எங்க என்று எங்க ஏரியாவில் வந்து கேட்டால் எல்லாரும் சரியா சொல்லிடுவாங்க. ஏன்னா எங்க ஏரியாவில் எங்க வீட்டில் மட்டும்தான் கரண்ட் இருக்காது. கரண்ட் பில் கட்டலைன்னு சொல்லி புடுங்கிட்டு போயிடுவாங்க. அப்புறம் மூணு மாசம் கழிச்சு கட்டுவாங்க, அப்புறம் புடுங்கிட்டு போயிடுவாங்க. இப்படித்தான் எங்க வீட்டு நிலைமை இருக்கும்," என்று தனது வறுமை நிறைந்த வாழ்க்கையை விளக்கினார்.

தற்கொலை முயற்சி
அந்தக் கஷ்டமான சூழ்நிலையில் ஒருமுறை, அவரது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மனமுடைந்த அவரது அம்மா, தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணி, தூக்க மாத்திரைகள் சாப்பிட்டிருக்கிறார். "30 மாத்திரை போட்டா உயிர் போயிரும் இருக்கும்போது, எங்க அம்மா 27 மாத்திரை போட்டுக்கிட்டு இருக்காங்க. என்ன திரும்பிப் பார்த்து பக்கத்துல நான் படுத்துட்டு இருந்த போது சொன்னாங்க. நான் அம்மாவை பார்த்ததும் ஒரு சிரிப்பு சிரித்தேன். அம்மா என்னோட சிரிப்பை பார்த்து மாத்திரையை கீழே போட்டுட்டு ஓடி வந்து என்னை கட்டிப்பிடிச்சு அழுதாங்க. 'நான் தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டேன், உன்னை எப்படி விட்டுட்டு போறேன்னு தெரியலை'ன்னு சொன்னாங்க," என்று பார்த்திபன் அந்த சோகமான தருணத்தை விவரித்தார்.
உதவி செய்யக்கூட வழியற்ற வறுமை
அப்போது தனது அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. "வீட்டுக்கு கரண்ட் பில் கட்டவே பணம் இல்லைன்னா, ஹாஸ்பிடல் போக எப்படி இருக்குன்னு பார்த்துக்கோங்க," என்று பார்த்திபன் வலியுடன் குறிப்பிட்டார். "ரிக்ஷா வண்டியில் தான் போகணும், அதுக்குக் கூட காசு இல்லை. ஆனாலும் கடன் வாங்கி ஒரு ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போனால், அவங்க 'இது போலீஸ் கேஸ், பார்க்க முடியாது, ராயப்பேட்டைக்குக் கூட்டிட்டுப் போயிருங்க'ன்னு சொல்லிட்டாங்க. அங்கே போறதுக்குக் காசு கிடையாது. என்ன பண்ணுவானோன்னு தெரியாம இருக்க போகுது, ஒருத்தங்க வண்டிக்குக் காசு தந்து அனுப்பி வச்சாங்க," என்று தனது தவிப்பை வெளிப்படுத்தினார்.
மருத்துவமனைக்குச் சென்றதும், அவரது அப்பா வந்து, "இங்கே ஏதாவது பிரச்சனையாகிடும், வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்," என்று சொன்னாராம். "ஏன்னா போலீஸ் கம்ப்ளைன்ட் ஆச்சுன்னா அவருக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு அவருக்கு பயம். இப்படிப்பட்ட சூழ்நிலைதான் என்னோட சூழ்நிலை. இந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்துதான் நான் வந்து ஆரம்பத்தில் இருந்தே வறுமையை நான் பார்த்து வளர்ந்தேன்," என்று பார்த்திபன் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

சினிமா பயணம் மற்றும் குடும்ப வாழ்க்கை
பார்த்திபன் தனது சினிமாப் பயணத்தை இயக்குனராகத் தொடங்கினார். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். இவரது குருவான பாக்கியராஜிடம் இருந்து கதை சொல்லும் கலையையும், புதுமையான சிந்தனைகளையும் கற்றுக்கொண்டார்.
பார்த்திபனின் முதல் திரைப்படம், 'புதிய பாதை' (1989). இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், தேசிய விருதையும் வென்றது. அதைத் தொடர்ந்து 'ஹவுஸ் ஃபுல்', 'ஒத்த செருப்பு சைஸ் 7' போன்ற புதுமையான படங்களை இயக்கி பாராட்டுகளைப் பெற்றார்.
குறிப்பாக, 'ஒத்த செருப்பு சைஸ் 7' ஒரே ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல் திரைப்படமாகும். இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராகவும் பார்த்திபன் பெரும் வெற்றி பெற்றுள்ளார். பார்த்திபன் பிரபல நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கீர்த்தனா, அபிநயா என்ற இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இருப்பினும், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்தனர்.
வறுமை, துயரம், மனப்போராட்டம் என அனைத்தையும் கடந்து, தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இயக்குனராகவும் நடிகராகவும் பார்த்திபன் உயர்ந்தது, கடின உழைப்புக்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications